சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் எல்லையில் அமைக்கப்பட்டு பல் ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்திவரும் செர்ன் விஞ்ஞானிகள் பருப்பொருள் தோற்றம் குறித்த முக்கியக் கண்டுபிடிப்பினை நிகழ்த்தியுள்ளதாகக் கோருகின்ற்னர்.
மிகப்பெரிய ஹேட்ரான் கொலைடர் என்ற அமைப்பில் உயர்சக்தி புரோட்டான்களை மோதவிட்டு இருண்ட பருப்பொருள், கருந்துளை, அல்-பருப்பொருள், மற்றும் உலகம் தோன்றியது எப்படி என்ற மிகப்பெரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் செர்ன் விஞ்ஞானிகள்.
இதன்படி உலகின் அனைத்துப் பருப்பொருளுக்கும் அளவு மற்றும் வடிவத்தை கொடுக்கும் ஒரு பொருளின் அல்லது அணுத்துகளை விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடித்துள்ளதாக கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment