நாட்டின் வெளிநாட்டு கடன் தொகை 2011 ,12ம் நிதி ஆண்டில் (ஏப்ரல் 2011 ,மார்ச் 2012) 3,990 கோடி டாலர் (ஒரு டாலர்,ரூ.56) அதிகரித்ததாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஏப்ரல் 2010 முதல் மார்ச் 2011 வரை வெளிநாட்டு கடன் 4,490 கோடி டாலர் உயர்ந்து மொத்த கடன் தொகை 30,590 கோடி டாலரானது. அது ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2012 வரை 3,990 கோடி டாலர் அதிகரித்து 34,580 கோடி டாலராகி விட்டது. நாட்டின் கடன் விகிதம் 2011 மார்ச் வரை 4.2 சதவீதம் உயர்ந்தது. 2012 மார்ச்சில் அது 5.6 சதவீதம் அதிகரித்து விட்டது. மொத்த வெளிநாட்டு கடனில் வர்த்தக கடனின் பங்கு மட்டும் 30.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment