WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, April 28

முன்னாள் பாஜக தலைவருக்கு 4 ஆண்டு சிறை - ரூ 1 லட்சம் அபராதம்!

முன்னாள் பாஜக தலைவர் பங்காரு லட்சுமணன் ரூ 1 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது

BWA Meeting on 28th April 2012 !!

BSNL Workers Alliance in the meeting held on 28.04.2012 has taken following decision : (i) VRS will be opposed tooth and nail. (ii) Medical Allowance/LTC be restored. (iii) Sufferings and hardships in NEPP be addressed. (iv) Hold all departmental examinations following uniformity. (v) Modifications is needed in TTA, TM & JTO (Elect) R/R. (vi) Bonus be paid to BSNL employees.
                                                                                          chq......

BWA 1st Day Meeting Decision !!

(i) Govt. Should grant immediate financial package to BSNL as per its commitments. (ii) BSNL’s own rules for recognition of non-executive unions be framed. 6th verification should be only as per BSNL’s own Rules. SR cell is delaying the matter on one or the other pretext. (iii) 78.2% IDA merger issue be resolved to avoid immortal loss to employees. (iv) Wage erosion in respect of staff (D/R TTAS, Sr. TOAs, TMs etc.) be settled like JTOs/JAOs. More decisions in meeting of 28th April. 
                                                         chq......

Friday, April 27






மதுரை தோழர் சேது அவர்களின்
பணி ஓய்வுக்காலம் சிறப்புடன் அமைய
வாழ்த்துகின்றோம் !!!!.





சிம் விற்பனை விதிமுறைகள் - குழு அமைத்தது உச்ச நீதிமன்றம் !!

செல்போன்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்யும் போது அடையாள அட்டை சான்று பரிசீலனை குறித்த விதிமுறைகளை வகுக்க குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 3000 பேர் கைது !!


நெய்வேலி 2வது சுரங்கம் முன்பு இன்று மறியலில் ஈடுபட்ட  ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாவோயிஸ்ட்கள் கடத்திய எம்எல்ஏ விடுதலை !!

ஒடிசாவில் மாவோயிஸ்ட் களால் கடத்தப்பட்ட ஆளும் பிஜு ஜனதா தள எம்எல்ஏ ஜினா ஹிகாகா, 33 நாட்களுக்கு பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டார். 

புதுக்கோட்டை இடைத்தேர்தல்
இந்திய கம்யூனிஸ்ட் போட்டியில்லை

Wednesday, April 25


புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை முடிவு எடுக்கிறது. 

பகத் சிங் உருவத்துடன் புதிய 5 ரூபாய் நாணயம் !!


பகத் சிங் உருவத்துடன் புதிய 5 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

மாவோயிஸ்ட் கட்டளை!!.மக்கள் மன்றம் விடுதலை !!!


கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாவோயிஸ்ட்கள் பிடியில் உள்ள ஒடிசா மாநில பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை அவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tuesday, April 24


ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றுடன் மூன்றாவது நாளாக என்எல்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மீண்டும் இராணுவத்தின் தேடுதல் . !!!



சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் மீளவும் இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பித்திருப்பதாகத்தெரிய வருகிறது. இப் பிரதேசங்களில் அரசாங்கத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படாத முன்னாள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கண்டுபிடிப்பதற்காகவே இத் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் அறிவிக்கின்றன.

Sunday, April 22

மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் !!

மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நலமுடன் உள்ளதாக சத்தீஸ்கர் மாநில போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து அம்மாநில நக்சல் எதிர்ப்பு படையின் கூடுதல் டி.ஜி.பி., ராம் நிவாஸ் கூறுகையில், மேனன் நலமுடன் உள்ளதாக தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரை விடுதலை செய்ய மாவோயிஸ்ட்கள் இதுவரை அரசை அணுகவில்லை என கூறினார். 

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக் !!!


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது
 ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் என்எல்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியது. தொடர்ந்து புதுவையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. 

யாழில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை , இலங்கை அறிவிப்பு !!


இலங்கை சென்று திரும்பிய இந்திய குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்கள், யாழ்ப்பாணத்தில் சடங்குக்கும் சாவுக்கும் கூட ராணுவத்திடம் அனுமதி கேட்க வேண்டிய நிலை இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் சொன்னோம். அவர் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு விட்டார் என்று வாய் ஜம்பம் பேசிக் கொண்டு வருகின்றனர்.


.இலங்கையின் வடக்குப் பகுதியான தமிழர்கள் வாழும் இடங்களில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற இந்திய எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது

Saturday, April 21

இலங்கைத் தமிழர்களை ஆதிவாசிகளைப் போல் பார்த்த இந்திய எம்.பி.க்கள் குழு!


இலங்கைத் தமிழர்களின் துயரங்களைப் பார்வையிடச் சென்றதாகக் கூறிக்கொண்ட இந்திய எம்.பி.க்கள் குழுவினர் தமிழ் மக்களை ஏதோ ஆதிவாசிகளைப் போல் பார்த்ததாக இலங்கையின் நவசம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணரத்ன சாடியுள்ளார்.


தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவேண்டும் என்ற விடயத்தை ஆணித் தரமாக வலியுறுத்தாமல் எம்.பி.க்கள் குழு உல்லாசப் பயணம் மேற்கொண்டதாகவும் கருணரத்ன கடும் தாக்குதலை முன் வைத்ததாக இலங்கை இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Thursday, April 19

காந்தியின் ரத்தம் படிந்த புல்!!

மகாத்மா காந்தியின் ரத்த கறை படிந்த புல், லண்டனில் 8 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.டில்லியில், 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி காந்தியடிகள், கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது குண்டு துளைத்ததால், அவர் உடலில் இருந்து சிதறிய ரத்தம் அங்குள்ள புல்களின் மீது படிந்தது. இதை அவருடன் இருந்த பி.பி.நம்பியார் சேகரித்து வைத்திருந்தார்.காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் ஆகியவற்றை ஒரு பெட்டியில் புனிதமாக சேகரித்து வைத்திருந்தார் நம்பியார். இதேபோல காந்தி பயன்படுத்தி வந்த ராட்டை, மூக்கு கண்ணாடியையும் அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார். இந்த பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், முல்லக் ஏல நிறுவனத்தால், நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது.காந்தியின் ரத்தகறை படிந்த புல், 8 லட்ச ரூபாய்க்கும், கடந்த 1890ம் ஆண்டு அவர் சட்டம் படிப்பதற்காக பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, 28 லட்ச ரூபாய்க்கும், கடந்த 1931ம் ஆண்டு லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுக்கு சென்ற காந்தியடிகள் தன்னுடன் எடுத்து சென்ற மர ராட்டை, 21 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த பொருட்களை ஏலத்தில் எடுத்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

Order of Hon’ble High Court Delhi as follows !!!

17.04.2012, the Hon’ble Delhi High Court has given two weeks time to ITS officers for submitting option to join BSNL/MTNL or to revert back to Govt. Service. 

Order !!
i) The deemed date of absorption of the petitioners fixed as 1.10.2000, is
held to be illegal, being contrary to Rule 37-A (4) of CCS (Pension) Rules;
ii) The deemed date of permanent absorption of such of the petitioners who 
seek permanent absorption in BSNL/MTNL shall be 8.12.2005;
iii) The petitioners before this Court are given an option, to be exercised
within two weeks from the date of this order, to revert to the Government or 
to seek permanent absorption in BSNL/MTNL as the case may be;
iv) Those Government servants who have already accepted permanent
absorption w.e.f. 1.10.2000 will not be entitled to exercise a fresh option in 
terms of this order;
v) BSNL/MTNL shall relieve such of the petitioners, who opt to revert to 
Government service within 2 weeks of receipt of options from them;
vi) Such of the petitioners who opt to revert to the Government shall be 
appropriately redeployed by the Government in Government service through 
surplus cell of the Government.  We have no doubt in our mind that the 
Government would not like to keep such of the petitioners who opt to revert 
to the Government idle and, subject to availability of the positions with it, 
give them such work as is deemed appropriate to be performed by them

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை அக்னி-5 இன்று காலை 8.05க்கு வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

இந்தியாபெண்கள் படிப்பதற்கு எதிர்ப்பு: குடிநீரில் விஷத்தைக் கலந்த தலிபான்கள் !!


 ஆப்கானிஸ்தானில் பள்ளி ஒன்றின் குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டது. அந்தக் குடிநீரை அருந்திய 100 மாணவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Wednesday, April 18

All India conference of AIBSNLOA!!!


      The all India conference of AIBSNLOA will be organized at Trichirapalli jointly by Tamil Nadu and Chennai telephones circle unions. The two day conference will be held on 20th & 21st_ April _2012. On the second day, a seminor is organized in which Com. H. Mahendran  Dy.GS, AITUC and Com. C.K. Mathivanan  Dy.GS, NFTE-BSNL  will participate and address the delegates. Other trade union leaders and circle heads of the management are expected to participate in the conference.

Tuesday, April 17

முதன்மை பணவீக்கம் 6.89 சதவீதமாக சரிவு !!

வெங்காயம், பழங்கள் மற்றும் புரத பொருட்களின் விலை கணிசமாக குறைந்ததால், மார்ச்சில் நாட்டின் முதன்மை பணவீக்கம் 0.06 சதவீதம் குறைந்து 6.89 சதவீதமாக சரிந்தது.


தோல்வியை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொள்கிறோம்' - காங்கிரஸ் !!

டில்லியில் நடைபெற்ற மூன்று மாநகராட்சிகளின் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி வழக்கம் போல,
தோல்வியை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொள்கிறோம்' -என்கிறதுகாங்கிரஸ்.

Wednesday, April 11



Restoration of Medical Allowance, Leave Encashment and LTC. Letter No. TF-32/2 Dated 11.04.2012.


78.2% IDA fixation in revision of Pay Scales effective from 1st January, 2007. Letter No. TF-10/3 Dated 11.04.2012.


                                                                             chq.........

நிதி சிக்கலில் 'சோனி' : 10000 பேர் வேலை இழக்கும் அபாயம்!!!


சோனி நிறுவனம் தற்போது நிதி பிரச்சினையில் சிக்கியுள்ளது. உலகில் முன்னணி எலக்டரானிக் நிறுவனமாக சோனி நிறுவனம் உள்ளது. 


ஜப்பானை தலைமையிடமாக கொண்டு உலகின் பல நாடுகளிலும் கிளை நிறுவனங்களை நடத்தி வருகிறது.


தென் கொரியா மற்றும் சீனா நாடுகளின் கடும் போட்டி காரணமாக சோனி நிறுவனம் சமீபகாலமாக நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது. 


சென்ற நிதி ஆண்டில் மட்டும் சுமார் 6.4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த பொருளாதார சிக்கலை சமாளிக்க 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. 


சோனி நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் சோனி நிறுவனம் திணறிக் கொண்டு இருக்கிறது. 

Saturday, April 7

                           Father of Telecom TU Movement  

                      தோழர் ; O.P குப்தாவின் வயது 90 !!!                                                வாழ்த்துக்கள் !!!!

                            

 இறைமகன் இயேசு உயிர்த்தெழுந்த நன்னாளான ஈஸ்டர் தினத்தில் அன்பும் சமாதானமும் தழைக்கட்டும்.......
                                            
                                     வாழ்த்துக்கள்  ...

ஐபேடிற்காக சிறுநீரகத்தை விற்ற சிறுவன்!!!!

ஐபேட் வாங்குவதற்காக சீனாவை சேர்ந்த 17வயது சிறுவன் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளான். இது பற்றி அறிந்த போலீசார் 5 பேரை கைது செய்தனர். 

Tuesday, April 3

NLCயில் இரண்டு சங்கத்திற்கு அங்கீகாரம் !!!

நெய்வேலி அனல் மின் நிலைய
ஊழியர் சங்க அங்கீகாரத் தேர்தலில் 
 தொ.மு.ச மற்றும் அண்ணாதொழிற்சங்கம் , முதல் இரண்டு இடங்களைப்பிடித்து, இரண்டு சங்கங்களும் அங்கீகாரம்பெற்றுள்ளன.

இன்சாட் 2இ 13 ஆண்டுகளை நிறைவு செய்தது!!!


5 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட இன்சாட் 2 வகை செயற்கைகோள் இன்சாட் 2இ, தனது விண்வெளி பயணத்தில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 


இன்சாட் 2இ செயற்கைகோள் கடந்த 12 வருடங்களுக்கு முன் 1999ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்டது.


பல்வேறு தொலைத்தொடர்பு சேவைகளை மேற்கொண்டு வரும் இன்சாட் 2இ, உயர்தரத்துடனான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.

Monday, April 2

அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தை தேர்ந்தெடுக்க நெய்வேலி என்.எல்.சி.யில் இன்று ரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது. 

 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், தோழர் 
S.P..முத்துக்குமரன் விபத்தில் காலமானார் என்ற
செய்தி கேட்டு வருந்துகிறோம்.

Sunday, April 1


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 21வது அகில இந்திய மாநாடு பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. புதிய பொதுச்செயலராக தோழர். எஸ். சுதாகர் ரெட்டி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.