WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, February 27

National Federation of Telecom Contract Labours(NFTCL)

ஒப்பந்த தொழிலாளர்களின் முதல் மாநில மாநாடு
தலைவர்    : தோழர் M.அப்பாதுரை Ex-MP 

செயல் தலைவர் : தோழர் S.மாலி ஈரோடு

மாநிலச் செயலர் தோழர் S.ஆனந்தன் கடலூர்

மாநில துணைச் செயலர் தோழர் A. நமச்சிவாயம்,                                                                 சென்னை  

மாநிலப் பொருளர் : தோழர் V.பாபு சென்னை  

தோழர்கள் அப்பாதுரை, மாலி ஆகிய மூத்த தோழர்களின் வழிகாட்டுதலோடு  NFTCL சங்கம்  தனது வர்க்க கடமையை ஆற்ற  புரட்சிகர வாழ்த்துக்கள் .

Wednesday, February 26

பொதுமக்கள் காணிக்கையாக கோவில் உண்டியலில் தொகைகளை போடுவதைவிட அதனை அரசுக்கு வரியாக செலுத்தலாம்" என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது:
"கடவுளுக்கு, கோவிலில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன்.
மேலும், வரியினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால், வரியின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில் வரி செலுத்துவோரின் பங்கும் தெரிய வரும்." என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் தமிழக புதுச்சேரி மாநில வருமான வரித் துறை முதன்மை கமிஷனர், ரவி தலைமை தாங்கினர். இயக்குனர் ஜெனரல் ஜெய்சங்கர், முதன்மை கமிஷனர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Thursday, February 20

 

Com Parvathi Krishnan is no more.....

We got the sad news about the death of veteran Communist leader Parvathi Krishnan at Coimbatore today morning at 06.40.AM. She was three times Member of Parliament elected from Coimbatore constituency which has predominantly working class population. She was National Vice President of AITUC for several decades and married to late Krishnan who is also veteran Communist leader from Kerala. Although she was 95 years old she was keen to know the trade union activities and political activities of our Country. We pay our respectful homage to the departed leader on behalf of NFTE-BSNL.

Saturday, February 15

49 நாள் முதல்வராக நீடித்த கெஜ்ரிவால் ராஜினாமா: !!!!
ஜன லோக்பால் மசோதாவை, மாநில லெப்டினன்ட் கவர்னர் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி தாக்கல் செய்யக் கூடாது என, டில்லி சட்டசபையில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூறிய தால், தான் விரும்பிய படி, அந்த மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போன ஏமாற்றத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்.இதனால், கடந்த, 49 நாட்களாக டில்லியில் நடந்த பரபரப்பு அரசியல் முடிவுக்கு வந்தது.

Thursday, February 13

இயற்கை எரிவாயு விலை விவகாரம்: மொய்லி,அம்பானி மீது வழக்கு!!


   இயற்கை எரிவாயு மீதான விலையை நிர்ணயப்பதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ்அதிபர் முகேஷஅம்பானி, முன்னாள்பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோராமீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் கோதாவரி நதிக்கரைகளில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவிற்கான விலையை நிர்ணயிப்பபதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் செயலசாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கப்பல்படை முன்னாள் தளபதி கிலியானி வக்கீல் காமினிஜெய்ஸ்வால்உட்பட பலர் புதுடில்லி அரசின்ஊழல் தடுப்பு பிரிவிடம் புகார் அளி்ததனர்.
 

புதுடில்லி முதல்வர் உத்தரவு: புகாரின் பேரில் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளிதியோரா, ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி மீது விசாரணை நடத்த புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பி்றப்பித்தார். மேலும் கெஜ்ரிவால் பிரதமர் மன்மோகன்சிங் கிறகு எழுதியள்ள கடிதம் ஒன்றில் மேற்கண்ட வழக்கு விசாரணை முடியும் வரையில் எரிவாயுவிற்கானவிலையை உயர்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
4th District conference of Aurangabad on 09-02-2014:- A well organized District conference of Aurangabad held in Yashwantarao Chavan Auditorium with more than 200 Comrades including 50 women comrades. Com. C.K. Mathivanan, Dy. GS inaugurated the conference, Com.  Com. Rajan Danni, District Secretary organsised a convention of 6 SSA’s consisting of Osmanabad, Jalna, Beed, Parbhani, Latur and Aurangabad. The convention is successful one to strengthen the orgnaisation in Maharashtra circle.
 
  

Wednesday, February 12New mobile Number of Com. C.K.MATHIVANAN...9445335577.

Due to some technical problem his old mobile Number is not working for the last few days and the fault may be rectified in a week’s time. Hence all are requested to contact him on his New mobile number :9445335577.

Tuesday, February 11

தன்னிச்சையாக முடிவெடுக்காதீர்கள்!

மாற்றல்கள், விடுப்பு, ஆளெடுப்பு விதிகள், VRS, பதவி உயர்வு, சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் BSNL - MTNL ஆகிய இரு நிறுவனங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால்,  BSNL - MTNL இணைப்பு பற்றி தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம் எனவும், அப்படியெடுக்கபடும் எந்த ஒரு முடிவையும் NFTE எதிர்க்கும் என CHQ கடிதம்........

Monday, February 10

இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!!


பிப்.10 (டி.என்.எஸ்) ஊதிய உயர்வை வலியுறுத்தி இன்றும், நாளையும் (பிப்.10 மற்றும் 11) நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

வங்கி  ஊழியர்களின் சம்பள விகிதம் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப்பின் திருத்தப்படவில்லை.

எனவே சம்பள விகிதத்தை திருத்தி 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக அரசுடன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாதம் 18-ந்தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Retirement age to be increased to 65?:

A parliamentary committee is recommended recently to the Govt to increase the age of retirement to 65 from the existing 60 in view of all round improvement in the health of the people and the ever increasing life span of Indians. Now the Government has to decide on this recommendation keeping in mind the unemployment situation among the youth in our country and utilizing the experience of the Govt employees for a additional period of five years. As a trade union we strongly oppose this proposal for enhancement of retirement age. Further we demand lifting of ban on recruitment for Group C&D category staffs in Govt sector that is continuing for the last 30 years despite the rigid changes at Centre. We also demand regularization of all Casual/ Contract labours employed in Govt sectors be regularized.


Tuesday, February 4

2ஜி ஊழல்: கனிமொழியை காப்பாற்ற சதி: பிரசாந்த் பூஷன் !!

   2ஜி் அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது. இந்த ஊழல்  விவகாரத்தில் இருந்து கனிமொழியை காப்பாற்ற சதிவேலைகள் நடந்ததாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் இந்த விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலையீடு இருந்ததாகவும் குற்றஞ்சாட்டிய அவர், தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. பல ஆண்டுகளாக அங்கம் வகித்தது. இந்த கூட்டணி அரசில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. அதில் இமாலய ஊழலாக பேசப்பட்டது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் காரணம் இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி என்று தணிக்கை துறை  தகவலை வெளியிட்டது.

தற்போது பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த  நேரத்தில் தி.மு.க. மீது ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். ஏற்கனவே இவரது கட்சி நரேந்திர மோடி, சோனியா, சரத்பவார், போன்றவர்களை ஊழல்வாதிகள் பட்டியலில் சேர்த்து குற்றம்சாட்டி உள்ளது. இந்த நிலையில் பிரசாந்த் பூஷன் நேற்று டெல்லியில் சில புதிய தகவல்களை கூறி அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.

அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழியை காப்பாற்ற சதிவேலைகள் நடந்ததாக பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டினார். இந்த விஷயத்தில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நேரடி தலையீடு இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது. ஆனால் அது லஞ்சப்பணம் அல்ல. கடன் தொகைதான் என்பதுபோல காட்டுவதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன என்று கூறிய பிரசாந்த் பூஷன் இதுதொடர்பாக கலைஞர் டி.வி.யின் சரத்குமார் ரெட்டி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழக உளறுத்துறை தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். கருணாநிதியின் செயலாளராக இருந்தவர் சண்முக நாதன். கனிமொழியை காப்பாற்றும் வகையில் இவர்கள் இருவரும் பேசிய உரையாடல் உள்பட 4 தொலைபேசி உரையாடல்களின் விபரங்களையும் பிரசாந்த் பூஷன் வெளியிட்டார். கனிமொழி சம்பந்தப்பட்ட உரையாடலையும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் கனிமொழியின் தொண்டு நிறுவனத்திற்கு டாடா நிறுவனம் ரூ.25 லட்சம் கொடுத்ததாகவும் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை தி.மு.க. மறுத்து உள்ளது. தி.மு.க.வின் டி.கே.எஸ் இளங்கோவன் கூறுகையில் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவைகள் என்றும் நீதிமன்றத்தில் பூஷன் அதை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க. மீதான இந்த குற்றச்சாட்டு அக்கட்சிக்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த கட்சியுடன் கூட்டு சேர பல கட்சிகள் தயக்கம் காட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  செய்திச் சிதறல்கள்

1-1-2007 முதல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய இழப்புகளை ஈடு செய்வது குறித்து CMD BSNL அவர்களை நமது சங்கத் தலைவர்கள் சந்தித்து தீர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.

1-1-2007 முதல்  BSNLல் நியயமனம் பெற்றவர்களுக்கு BSNLEU போட்ட ஊதிய உடன்பாட்டால் சம்பள பிடித்தம் எனும் இழப்பு ஏற்பட்டது. NFTE-BSNL  தலைமை அதனை சரிசெய்ய தொடர்ந்து முயற்சிக்கிறது.

தற்போது நிர்வாகம் தனது முடிவை தெரிவித்து உள்ளது. மே 2010க்குள் புதியதாக நியமனம் பெற்றவர்களுக்கு ஒரு கூடுதல் இன் கிரிமென்ட் தர முன்வந்துள்ளது. அரியர்ஸ் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாநில சங்கங்களின் கருத்தை அகில இந்திய தலைமை கேட்டுள்ளது.

புதிய JTO (Recruitment Rules) ஆளெடுப்பு விதி பற்றிய NFTE-BSNL சங்கத்தின் கருத்தையும், செய்யப்பட வேண்டிய மாற்றங்களையும் கடிதம் மூலம் தெரிவித்து உள்ளனர்.

 SC/ST   ஊழியர்க்கு, NEPP பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கவும், பணியில் இருக்கும்போது இறந்த ஊழியர்க்கு கருணைப் பணி கோரும் மனுவை பரிசீலிக்கும்போது SC/ST ஊழியர் குடும்பத்திற்கு கூடுதல் சலுகை வழங்க  வலியுறுத்தி, SC/ST ஊழியர் நல பாராளுமன்ற குழுவிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது.

  சென்னை மாநில நிர்வாகத்தின் பழிவாங்குதல் : உண்ணாவிரதத்தில் பங்கேற்றோர்க்கு FR17A வழங்கியது பற்றி Director HR அவர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் பற்றியும் விவாதிக்கப் பட்டுள்ளது.


மூன்றாவது சுற்று 2 ஜி. ஸ்பெக்டரம் அலைக்கற்றை உரிமம் பெறுவதற்கான ஏலம் இன்று தொடங்கியது  900 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 1800 மெகாஹெர்ட்ஸ்
அலைக்கற்றை ஏலத்தில், 8 முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

செய்தி ;காஞ்சி வலைத்தளம் .....