WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, November 4

THIRD WAGE REVISION COMMITTEE IS IN THE OFFING:

 BSNL management informed both the recognised unions today. It seems our National Forum's two phased agitation on 13 point charter of demands including formation of Third wage revision on 18-10-2016 and 24-10-2016 has broken the ice. 

 சம வேலைக்கு சம சம்பளம் !
     சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு !! 

              1988ல், NFTE சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கில் 
சம வேலை, சம ஊதியம் என்ற நல்ல   தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால்   
வழங்கப்பட்டதால் லட்சத்திற்கும் மேற்பட்ட கேசுவல் ஊழியர்கள் 
பலன் பெற்றனர். 

தற்போது வந்துள்ள அதே போன்ற  தீர்ப்பு வரலாற்று சிறப்புடையது. 
முறையாக அமல்படுத்தப்பட்டால் இந்தியா முழுவதும் இன்று பரவி 
விரவி வரும் ஒப்பந்த ஊழியர்கள் மிகுந்த பலன் அடைவார்கள்.

அதற்கான திசைவழியில் செயலாற்றுவோம்.

Sunday, October 2

அக்டோபர் - 2 - அமர தினம்
அக்டோபர் -2
அமர தினம்... 
நேர்மையின் சின்னம் லால் பகதூர் சாஸ்திரி 
வாய்மையின்  சின்னம் மகாத்மா காந்தி 
எளிமையின் சின்னம் கர்மவீரர் காமராஜ் 
பாமரன் உயர்ந்திட உழைத்திட்ட... 
அமரர்களின் தினம்..

நேர்மை... வாய்மை.. எளிமை..
மூன்று குணங்களும் நிறைந்த...
முத்தான தலைவர்கள்...
உலகில் எவருக்கும் கிடைக்காத பொக்கிஷங்கள்...

நேர்மையாய் இருப்போம்...
வாய்மையின் வழி நடப்போம்...
எளிமையாய் வாழ்ந்திடுவோம்...
அக்டோபர் -2 அமரர்களை நினைவேந்துவோம்...
செய்தி ..காரைக்குடி வலைத்தளம் 

Monday, September 19

சுயநலத்திற்காக ....
கட்சியிலும் , தொழிற்சங்கத்திலும் ....
கம்யூனிசம் பேசும் தலைவர்கள்....
சாதியியத்தை பாதுகாக்குகிறார்கள்....

முப்பது ஆண்டுகளாக ....

உண்மையாக, நேர்மையாக....
கட்சிக்காக, தொழிற்சங்கத்தில் உழைப்பவர்கள்.... 
ஒதுக்கப்படுகிறார்கள்....

கட்சிக்காக செலவழித்தவர்கள்  ....

கொள்கையை கடைபிடித்தவர்கள்  ....
நடுநிலைமையாக எதையும் சாராதவர்கள்....
நடுரோட்டில் நிற்கிறார்கள் .....

இருப்பினும் எங்களைப்போல.....

தோழர்கள் இருப்பதால் .....
பொதுவுடமை நிலைக்கிறதே....
இதுதான் பொதுவுடமை கொள்கையோ ....

Monday, September 12



நமது அரங்கில்...
எதிர்க்கருத்து சொல்பவனை ஏளனம் செய்வதும்...
ஒத்து ஊதுபவர்களை உயரத்தில் வைப்பதும்... தொடர்கிறது...
இது... அழகல்ல... இயக்கத்திற்கு ஆரோக்கியமல்ல...

                                                           நன்றி ...காரைக்குடி ...

Friday, September 9

பிஎஸ்என்எல்
வழங்கும் 83 பைசாவில்
ஒரு GB
ப்ராட்பேண்ட் சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின்
தலைவர் உயர்திரு அனுபம் ஸ்ரீவத்சவா
நமது நாட்டு மக்களுக்கு
வேறு எந்த நிறுவனமும்
வழங்காத அளவுக்கு
மிகக் குறைந்த கட்டணத்தில்
லேண்ட்லைன் ப்ராட் பேண்ட் திட்டத்தை அறிவித்துள்ளார்.

திடடத்தின் பெயர்
"EXPERIENCE UNLIMITED BB 249"
மாதக் கட்டணம் ரூ 249
பயன்பாட்டு அளவு
எல்லையற்றது
(UNLIMITED)
வேக அளவு
2Mbps
"இத்திட்டத்தில் ஒரு மாதம்
முழுமையும் தொடர்ந்து
பயன்படுத்தினாலும்
300GB  வரை
டவுன்லோடுசெய்யலாம்.
ஒரு GB டவுன்லோடு செய்ய கட்டணம் ஒரு ரூபாய்க்குக் குறைவுதான்"அதாவது 83 பைசா மட்டுமே என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் 09.09.2016 முதல் அமலுக்கு வரும்.

இவ்வளவு குறைந்த கட்டணத்தில் எந்த ஒரு நிறுவனமும் ப்ராட்பேண்ட் சேவையை வழங்குவதில்லை.
இத்திட்டம் ஆறு மாதங்களுக்கு   அமலில் இருக்கும்.


அதன் பின் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஊக்கத்தொகை 

புதிய தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை 
புது இணைப்புக்களைப் பெற்றுத்தரும் BSNL ஊழியர்களுக்கு 
ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தரைவழித்தொலைபேசி இணைப்பிற்கு ரூ.100/-
  • தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்பிற்கு ரூ.200/-
  • முதல் பில் கட்டப்பட்டபின் ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்படும்.
  • 12/09/2016 முதல் இத்திட்டம் அமுலுக்கு வருகிறது.

தோழர்களே...
நமது நிறுவனம் மிகவும் மலிவான விலையில்...
இந்தியாவில் வேறெந்த நிறுவனத்திலும் இல்லாத வகையில்..
புதுப்புது அதிரடி திட்டங்களை.. 
மக்களைக் கவரும் திட்டங்களை...  
தரைவழி மற்றும் அகன்ற அலைவரிசை 
இணைப்புக்களில் அறிவித்துள்ளது.
இந்த சலுகைகளும்... 
நமது சேவைகளும் மக்களைச்சென்றடைய..
நாம் நமது பங்கைச்செலுத்துவோம்...

ஊக்கமுடன் பணிபுரிவோம்..
ஊக்கத்தொகை பெறுவோம்...

Wednesday, August 17

ஒரு BSNL வாடிக்கையாளரின் BSNL வளர்ச்சிக்கான ஆலோசனை ...



bsnl கூட இலவசம் கொடுத்து மக்கள கவர நினைச்சிட்டு இருக்கு போல. இவ்ளோ technologyல அவனவன் 2G 3G 4Gனு போய்ட்டு இருக்கான். bsnlல என்ன Gனு இதுவரை தெரில. வெறும் DATAனு தான் recharge பன்றோம். Plan மட்டும் தான் வேற வேற இருக்கு. speedல எந்த வித்யாசமும் இல்லயே. Broadband ஒரு படி மேல. 2MBps எப்பொ வருதுனு பார்க்ரதுக்குள்ள 'crossed the limit' message வந்துடுது. ஆயிரகணக்குல பில் கட்ரது தான் மிச்சம். இதற்கிடையில் 1 மாசத்துக்கு குறைந்தது 3 முறை 198 (BP Sugar checking போல). வசதிகள்ளயும் performanceலயும் விலைலயும் கொஞ்சம் கவனம் செலுத்தினா வாடிக்கையாளர் தானா வந்து விழ போறாங்க. நாட்லயே பெரிய network. Performance? 15 வருஷமா bsnl mobile service 30 வருஷமா bsnl landline sevice மட்டுமே பயன்படுத்றோம்னு பெருமை மட்டும் பட்டுக்கலாம். பல நெடுநாள் வாடிக்கையாளர்களின் மனக்குமுறல் இதுவாகவே உள்ளது.
(யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இப்பதிவு மேற்கொள்ளப்படவில்லை)
Shiva Natarajan....
நிற்பேன்... போராடுவேன்...


இன்னும்..
நாங்கள் எதையும் காணவில்லை..
கனக்கிறது வாழ்க்கை...

கைகள் கட்டப்படவில்லை...
சுதந்திரம்!
ஆட்டம் என்னவோ..
பழைய கோமாளி ஆட்டம்தான்...

ஓட்டம்… 
கால்கள் தரிக்காத ஓட்டம்..
எங்கும் போய்ச் சேராத ஓட்டம்...

இது வரமா? இல்லை சாபமா?
நான் நடப்பட்டேனா?
பிடுங்கியெறியப்பட்டேனா?

ஓடிவிடத் துடிக்கிறேன்...
எங்கே ஓடுவேன்…
போகுமிடம் எதுவுமில்லை...
நின்றுதான் தீரவேண்டும்..

முழந்தாளில் சரியமாட்டேன்..
நிற்பேன்... போராடுவேன்…
உன்னதமான காலம்...
வரத்தான் போகிறதென்று..
நம்பிக்கைக் கொள்வேன்…
போராடுவேன்…

ஏனென்றால்..
நாங்கள் எதையும் காணவில்லை...
இன்னும்… 

விடுதலைத்திருநாளில்.. அடிமைகளின்  நினைவாக...
ஒடுக்கப்பட்ட கறுப்பினக்குயில்… – டிரேஸி சாப்மன்...கவிதை
TRACY CHAPMAN  in   “NOTHING YET”
நன்றி காரைக்குடி வலைத்தளம் .....

Monday, August 15

ஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு.....!




தொலைபேசி தொடர்பை ஊக்கு விக்கும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் லேண்ட்லைன் வாயிலாக செய்யப்படும் உள்நாட்டு அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: லேன்ட்லைன் வாயிலாக மற்ற தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்கி வருகிறது.

தற்போது மேலும் வாடிக்கை யாளர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் லேன்ட்லைன் இணைப்பு வாயிலாக செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும்.

மேலும் சுதந்திர தின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட்லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் இணைப்பு (இன்ஸ்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் மற்ற வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும் எனவும் அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேடையிலொருவன் பொய்குரைப்பான்
தாவி மேடையேறித்
தலையிற்குட்ட முடியவில்லை........
நல்லவன் போல் நடித்திடுவான்
நாவின் வார்த்தை சுத்தமில்லை ......

Wednesday, August 10

NFTE(BSNL) க்கு  வந்த ....சோதனை ....!!!

பிள்ளையார் பட்டியில் விரிந்து ......

மதுரையில்  முறிந்து ......
வேலூரில் ஒட்டப்பட்டுள்ளது .......
ஒற்றுமை வலுப்படும் என நம்பு வோமாக.....!!
                                      .......இரா. த ...            

Tuesday, August 2



தோழர்.ஜெயராமன்
பணி நிறைவு பாராட்டு விழா
06/08/2016 - சனிக்கிழமை - காலை 10 மணி 
 TOWN HALL - கடலூர் 
தலைமை: தோழர்.C.K. மதிவாணன் 
வாழ்த்தரங்கம் - கவியரங்கம் - பட்டிமன்றம் - நூல் வெளியீடு 
வாழ்த்துரை 
பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள்

தோழர்.முத்தரசன் 
தோழர்.மகேந்திரன்
தோழர்.திருமலை - AIYF
தோழர்.நல்லக்கண்ணு  

தொழிற்சங்கத்தலைவர்கள் 
தோழர்.மாலி 
தோழர்.இரகுநாதன் 
தோழர்.இலட்சுமணன் AITUC 
 தோழர். கு.பாலசுப்பிரமணியன் 
மற்றும் இயக்க  முன்னணித்தலைவர்கள் ....
வாருங்கள்  தோழர்களே...
வாழ்த்துங்கள் தோழர்களே...

Sunday, July 24

"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...


ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...
👉🏿விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈🏿
🗣
👉🏿தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈🏿
🗣
👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈🏿
🗣
👉🏿தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈🏿
🗣
👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈🏿
🗣
👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈🏿
🗣
👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈🏿
🗣
👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈🏿
🗣
👉🏿 உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈🏿
🗣
👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈🏿
🗣
👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿
🗣
👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿

Tuesday, July 12

சொஸைட்டி கடனுக்கு வட்டி குறைப்பு !
* 1 சதவீதம் 11-7-2016 முதல் குறைக்கப்படுகிறது.
* அடுக்குமாடிக் கட்டிடப் பணி 2016 ஆகஸ்ட்
மாதம் துவங்கப்படும் !
Telecom Society reduced the rate of interest as per our request on 24-06-16.
We thank the Board of Directors of our Telecom cooperative society for reducing
the rate of interest by 1% from the existing 16% as on date in the board's meeting held today. This will be effective from today
(11-07-2016).
The work for the construction of Flats at Vellanur near Avadi will begin in the month of August 2016 positively after fulfilling all the formalities and completing the required procedures.
It may be recalled that our National Forum leaders had met the management of Telecom Society on 24-06-16 and presented a memorandum on the demands including reduction of rate of
interest and beginning of Flat Construction work at Vellanur land.
As per today's decision the rate of interest will be 15%
with effective from 11-07-2016.

Friday, July 1

விலைவாசிப்படி உயர்வு......


01.07.2016 முதல் விலைவாசிப்படி 2.4 சதம் உயரும்.....
IDA ICREASE            = 2.4%

PRESENT IDA       = 112.4%

FROM JULY 2016 =114.8%

WHAT FORCED COM. ABHIMANYU TO AIR DASH TO CHENNAI ON 28-06-2016? :

Rattled by the victory of NFTE in both Chennai Telephones and Tamilnadu circles the local leadership is hard pressed to explain its defeat despite having more membership. Com.Abhimanyu, who is already frustrated due to his failure to cross 50% of votes nationwide is disgusted further due to the defeat in his home state ( Tamilnadu as a whole). Hence they found a easy whipping boy in the form of Tamilnadu Telecom Co-operative Society. They are blaming it for all their troubles so that they can escape from the responsibility of set backs in the seventh membership verification.
Forgetting his position as the General Secretary of the main recognised Union in BSNL he spoke very indecently and abused the leaders of NFTE in Tamilnadu and Chennai Telephones out of frustration. He called our leaders as FOOLS for objecting the use of SEWA -BSNL name by one person who is not even a member of that organisation at the moment. Whether he will accept a person expelled from BSNLEU using the name and flag of the Union after his expulsion ? No doubt he is a genius and sharp minded comrade that is why he had signed agreement for 78.2%IDA merger on dotted lines in 2012 even without knowing who is the competent authority to ratify the said agreement. That is why our hapless pensioners are running to the pillar to post for the last 3 years and our employees are getting HRA on 68.8% of IDA merger till today even after the order of management to merge 78.2% of IDA with effect from 10-06-2013.
He unnecessarily criticised com.CKM for having a car to use for circle Union. He didn't know even in 1970s the Circle Secretary of Rajasthan NFTE was having a car for his circle Union. Further NFTE circle Union in Chennai Telephones was using own car ever since 2003.So what is new in this we don't know. We all know the lavish lifestyle of Com. Abhimanyu and his foreign jaunts with the Union fund. Has he any morality to criticise others ? BSNLEU is having Two cars in Delhi itself. He is traveling only by plane and staying in star hotels only of course using Union fund and not paying from his pocket. For the last several years he has not stayed in any I Q during his visit throughout the country. Whereas the leaders of NFTE are staying in IQs only. We can't accept the Saturn quoting the scriptures.
When BSNLEU was controlling the same telecom Co-operative society for Five full years it didn't care to distribute the land for house sites. It charged 16.5% as rate of interest. Now less than that is being charged. Why this hue and cry?Actually BSNLEU was rattled by our successful meeting with the management of said Telecom society on 24-06-16 and the assurances given to us for reduction of rate of interest and beginning of Flat construction work by 15-07-16. So they are enacting a drama and their GS had willingly agreed for his guest appearance in this melodrama at the last moment all of a sudden. This is the real story behind Com. Abhimanyu's air dash to Chennai on 28-06-16.However the chennai comrades largely ignored this show .But the imported crowd from vellore, Puducherry, Cuddalore saved the situation for BSNLEU.Instead of doing this type of antics that Union should concentrate on the constructive agenda.

Sunday, June 26

 J.E., (TTA) - OUTSIDERS  ஆளெடுப்பு 

நாடு முழுவதும் 2700 JE  - (முன்னாள் TTA) 
இளநிலைப் பொறியாளர்களுக்கான 
ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • விண்ணப்பிக்கும் நாள் : 10/07/2016
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10/08/2016
  • தேர்வு நாள்  : 25/09/2016
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு இணையதளம் மூலம் நடைபெறும்.

தமிழகத்தில் 198 காலியிடங்கள் - 
உடல் ஊனமுற்றோருக்கு 6 காலியிடங்கள் 
OC -105      OBC - 53     SC - 38     ST - 2

Tuesday, June 21

விருதுநகர் மாவட்ட மாநாடு .......

புதிய மாவட்ட சங்க தோழர்களுக்கு வாழ்த்துக்கள் !

மாவட்டத்தலைவர் தோழர்.இராகவன் அவர்களுக்கும் 
மாவட்டச்செயலர். தோழர்.இராம்சேகர் அவர்களுக்கும் 
மாவட்டப்பொருளர் தோழர். செல்வராஜ் அவர்களுக்கும் 
மற்றும் ஏனைய மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கும் 
                        நமது வாழ்த்துக்கள் 

Wednesday, June 1

இன்று பிறந்த நாளில் என்னை வாழ்த்திய நெஞ்சங்களுக்கும், தோழமைகளுக்கும், உறவினர்களின்  உள்ளங்களுக்கும், அன்பு நிறைந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன் .........நன்றி! நன்றி!! நன்றி!!!.....


Monday, May 30

ஒத்த கருத்தில் ஒற்றுமையுடன்,வானில் சிறகடித்து பறந்த நம்மை  ..... 
    சிதறடித்த சுவடுகள் மறைய , ஜூலையில் ஒற்றுமை படுத்தி .......
  பணி நிறைவுக்கு பின் பல்லாண்டுகாலம் வாழ ......
        தோழமையுடன் வாழ்த்துகிறோம் ......

சிறப்புடன் அமையட்டும் !
தோழர் பட்டாபி அவர்களின் பணி ஓய்வுக் காலம் !!
மாநிலச் செயலராக பொறுப்பேற்ற...
தோழர் பட்டாபிராமன் அவர்கள் 31-5-2016 அன்று
இலாகா பணி நிறைவு செய்கின்றார்.
அவரது பணி ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய
 வாழ்த்துகிறோம் 

Sunday, May 22



சுறுசுறுப்புடன்  இயங்கிடும் .....
    மனிதநேயம் காத்திடும் .....

நொடித்  துளியில்  காத்திடும்  உயிர்துளி .....
     உங்கள் சொந்தங்கள் காக்காத உயிர்துளி .....
தங்களின் உயிர்ரைகாக்கும் உயிர்துளி .....
    சுரக்கின்ற குறுதிக்கு உறவுகள் கிடையாது .....
ஆபத்து நேரத்தில் அழைத்தால் போதும் .....
    அன்பென அங்கே நிற்கும் உயிர்துளி .....
இது  இளைங்கர்களின் உத்வேக ....
     உணர்ச்சி  பிழம்பு .....
ஓடிவந்து உதவிடும் ....உங்களின்
     உயிர் காக்கும் அமைப்பு .....
தயக்கம் வேண்டாம்........
      பொருள் தரவும் வேண்டாம் .....
எங்களுக்கு அன்பு மட்டும் மே போதும் .....
      தங்களை நாடிவந்து உதவிடுவோம் .....
எங்கள் ரத்தங்களை தந்திடுவோம் ...
      உங்களை உயிர் என காத்திடுவோம் ...
       
என்றும் உதவிகரமாய் அமைந்திடும் ......
 உயிர் காக்கும் உயிர்துளிக்கு ....
எனது வாழ்த்துக்கள் ...
                            இரா .தங்கமணி ..
    புதுவை மாநில கலை இலக்கிய பெருமன்றம் 

Sunday, May 15

618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது .

தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம்
மாவட்டம்
மொத்தவாக்குகள்
பதிவானவை
NFTE
BSNL EU
FNTO
COIMBATORE
1377
1309
422
814
48
CUDDALORE
762
759
482
218
43
DHARMAPURI
330
327
51
255
15
ERODE
780
763
          315
391
43
KARAIKUDI
392
388
233
64
84
KUMBAKONAM
435
428
281
75
67
MADURAI
1402
1348
562
583
178
NAGERCOIL
374
368
70
234
19
NILGIRIS
199
197
39
155
1
PONDICHERRY
279
272
118
139
8
SALEM
1119
1106
537
483
56
THANJAVUR
653
645
441
131
65
TIRUNELVELI
626
613
277
284
25
TRICHY
1203
1163
611
340
192
TUTICORIN
377
370
116
212
35
VELLORE
965
956
684
218
37
VIRUDHUNAGAR
403
396
166
220
3
CGM(O)
423
393
179
151
45
TOTAL
12099
11801
5584
4967
964