WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, July 30

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் !!


          

  டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. முன்னதாக நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் இதற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.

இதுபற்றி காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் அஜய் மக்கான் நிருபர்களிடம் கூறுகையில், “தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன விதிப்படி தனி தெலுங்கானா குறித்து காங்கிரஸ் வலியுறுத்தும். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஐதராபாத் நகரம் 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகராக இருக்கும். 10 ஆண்டுக்குள் புதிய தலைநகர் கண்டறியப்படும்” என்றார்.

ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களுக்கு ஐதராபாத் பொது தலைநகர்!!!


மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியதாவது:-                  
அனைத்து தரப்பினருடனும் விரிவாக கலந்து ஆலோசனை நடத்திய பிறகே, தனி மாநிலம் அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனி மாநிலம் உருவாக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தனி தெலுங்கானா தீர்மானத்தை ஆந்திர சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரப்படும். இதேபோல் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவற்காக அமைச்சரவை குழு அமைக்கப்படும். முதற்கட்டமாக 10 மாவட்டங்களைக் கொண்டு தெலுங்கானா மாநிலத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்கள் சேர்ப்பது குறித்து அமைச்சரவை குழு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Crucial day for Telangana, Congress likely to reach a decision today after UPA meet!!

Will Telangana be the 29th state of India? The answer may be coming today.

Amid clear indications that the Congress leadership is in favour of carving out the separate state from Andhra Pradesh, top bodies of the ruling party and the UPA are meeting on Tuesday.
Pro-Telangana supporters during a demonstration in support of TJAC's 'Chalo Assembly' protest in Hyderabad. (PTI Photo)
Well-placed sources said while Congress president Sonia Gandhi and party vice-president Rahul Gandhi have already given their nod to bifurcate Andhra Pradesh despite stiff opposition from various quarters, Prime Minister Manmohan Singh was reluctant in view of intelligence agencies raising security concerns over the proposed move.
 However, a senior leader said the Congress leadership has decided to bite the bullet as the issue has been hanging fire for several decades now and any further delay in the decision could prove counter-productive for the party.
The UPA coordination committee and the Congress Working Committee (CWC), the highest decision making body of the party, are all set to endorse the move and place it before parliament for approval in the monsoon session that commences from August 5.
The urgency on the part of the Congress leadership to resolve the tangle could be gauged by the fact that the UPA meet was advanced by a day and the CWC will also deliberate the same day.

பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்தால் டிஸ்மிஸ்: புதிய சட்டம் விரைவில் அமல்!!பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை பணி நீக்கம் செய்யும் சட்டம் வரும் பிப்ரவரி மாதம் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான விதிமுறைகளைக் கொண்ட வரைவு மசோதாவை, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது. வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த புகார் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி பணி நீக்கம் செய்வது, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்குவது போன்ற விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்தால் டிஸ்மிஸ்: புதிய சட்டம் விரைவில் அமல் அதில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு- புகார் விசாரிக்க குழு இது போன்ற புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் உள்ளூர் கமிட்டியில், தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில் அல்லது கிரிமினல் சட்ட விதிகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள சமூக சேவகர் ஒருவர் இடம் பெற வேண்டும். மாவட்ட அளவில் மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அல்லது மாவட்ட அளவிலான பெண்கள் துயர் துடைக்கும் அமைப்பு ஒன்று, விசாரணை கமிட்டிக்கு தேவையான உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நேருக்கு நேர் விசாரணை இல்லை விசாரணையின்போது எந்த ஒரு கட்டத்திலும் இரு தரப்பிலும் சட்ட பிரதிநிதிகள் யாரும் ஆஜராக அனுமதி இல்லை. புகார் கொடுத்தவரையும், குற்றம் சாட்டப்பட்டவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை எதுவும் நடத்தக்கூடாது என்பன போன்ற விதிமுறைகள் அதில் இடம் பெற்றுள்ளன. பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரை பணி நீக்கம் செய்வது, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன. பொய்யான குற்றச்சாட்டு அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டு என தெரிய வந்தால் புகார் அளித்த பெண் மீதும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்ககைகள் எடுக்கப்படும். பிப்ரவரியில் அமல் வருகிற பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Sunday, July 28


சூரியனில் மெல்லிய, நூல் போன்ற கட்டமைப்புகள் - நாசாவின் புதிய படத்தில் கண்டுபிடிப்பு !!!சூரியனின் பிரத்யேக புதிய படத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இதுவரை ஆராய்ச்சிகளின் மூலம் அதிகம் அறியப்படாத 'இன்டர்பேஸ் ரீஜியன்' என்னும் பகுதியை ஐரிஸ் என்னும் கருவி படமெடுத்துள்ளது.

இந்த புதிய புகைப்படம் இதுவரை வெளிவராத சூரியனின் பிரத்யேக படமென்பதால் இது பலவிதமான ஆய்வுகளுக்கு உதவியாக இருக்குமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஐரிஸ் என்றழைக்கப்படும் 'இன்டர்பேஸ் ரீஜியன் இமேஜிங் ஸ்பெகட்ரோ கிராப்' (short for Interface Region Imaging Spectrograph) மூலம் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரோ கிராப்பில் உள்ள அல்ட்ரா வயலட் டெலஸ்கோப் மூலம் சூரியனின் வெளிப்புற தோற்றம் போட்டோ எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Friday, July 26

 M.P. Circle union has agreed to host the All India Conference.                                                                                        chq........

ஊதிய தேக்கத்தை களைய கமிட்டி !!


    RM, Group D போன்ற   சில கேடர்களில் ஊதிய தேக்கம் ஏற்படுவதால் 78.2 சத ஊதிய நிர்ணயப் பலன் கிடைக்காமல் அவதியுறுகின்றார்கள் அந்த கேடரில் உள்ள சீனியர் தோழர்கள்.

அந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய்யவேண்டும் என்று நமது சங்கம் கோரி வந்தது. தற்போது அப்பிரச்னையை தீர்க்க நிர்வாகம் GM (Estt), GM (SR), GM (EF) ஆகியோர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்துள்ளது.

Thursday, July 25

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைவு !!!


இந்தியாவில் வாழும் மக்கள் தொகையில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என புள்ளிவிபரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக திட்ட கமிஷன் புள்ளி விவரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புள்ளி விவரத்தின் படி இந்தியாவில் 2004-05ம் ஆண்டில் 40 கோடியே 71 லட்சம் பேர் ஏழைகளாக இருந்துள்ளனர். ஆனால் 2011-12ம் ஆண்டில் 26 கோடியே 93 லட்சம் பேர் தான் ஏழைகளாக உள்ளனர்.

அதாவது மொத்த மக்கள் தொகையில் 37.2 சதவீதமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை தற்போது 21.9 சதவீதமாக குறைந்துள்ளது.

கிராமப்புறத்தில் நாளொன்றிற்கு ரூ.27.20 செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையில்லை. அதுபோல் நகர்புறங்களில் நாளொன்றிற்கு ரூ.33.33 செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையாக கருதப்பட மாட்டார் என சுரேஷ் டெண்டுல்கரின் பரிந்துரை குழுவானது தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த புள்ளிவிபரத்தை மறு ஆய்வு செய்வதற்கு பிரதமரின் பொருளாதார ஆலோசனை தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கையானது அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ளவர்களும் Returns சமர்பிக்க வேண்டும் : வருமானவரித் துறை புதிய உத்திரவு !! 
நமது சொஸைட்டி தலைவர் திரு வீரராகவன், மெட்ராஸ் செண்ட்ரல் மத்திய கூட்டுறவு வங்கியின் டைரக்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலத்திற்கு பிறகு நமது கூட்டுறவு சொஸைட்டியைச் சார்ந்தவர் அந்த அமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

     அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.!!

Sunday, July 21


வீணாய்ப்போன வக்கிரங்களின் வசைபாடல்கள் !!!

நமது எதிரியே ஆனாலும்
பணிஓய்வு பாராட்டு விழாவென்றால்
பாங்குறவே சென்று பாராட்டுவது 
நம் பண்பாடு ! தமிழர்தம்  பண்பாடு !!

அருமைத் தோழர் ஜெகனுக்கு
சென்னை ஹேமாமாலினி மண்டபத்திலே
தோழர் ஆர்.கேவுக்கு சென்னை பெரியார் திடலிலே
தோழர் தமிழ்மணிக்கு சேலத்திலே
ஜெயபாலுக்கு கும்பகோணத்திலே

மதுரை சேதுவிற்கு கும்பகோணத்திலே
லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்தால்,
அது நன்றி பாராட்டும் விழா என்பார்கள்.........
பக்கம் பக்கமாய்  ஆகா ஓகோவென்று
எழுதுவார்கள்  பாராட்டுரையை  !!
கலர்கலராய் போடுவார்கள்  அட்டை படத்தை !
வெளியிடுவார் சிறப்பு  மலரையும்தான் !!

ஆனால், அந்தோ  அங்கீகாரம் பெற்றுத் தந்த
மாவீரன்   மதிக்கு பாராட்டு விழா என்றால் மட்டும்
வயிற்றெரிச்சல்   வந்ததுவே   சில வக்கிரங்கட்கு !

ராமனுக்கு முடி சூட்டுவிழா என்றவுடன்
மந்தரை கூனி சதி செய்து
முடிசூட்டுவிழாவை நிறுத்தியதுபோல

மதியின் மணி விழாவை தடுக்க
நினைத்தார் சில  கூனிகள்
தாய் கைகேயியின் நல்லிதயத்தை
நஞ்சுர வைத்தது போல
நல்ல தலைவர்களை,
நிதி வழங்கும் நல்ல உள்ளங்களை
நஞ்சாக்க நினைத்தார்கள் அக்கூனிகள் !

60 பவுன் தரப்போகிறார்கள் என்று
நஞ்சை கக்கினார் நாக்கிலே நரம்பின்றி

76 லட்சம் வசூலாகி விட்டதென்றும்
பிதற்றினார்  சில  அரைகுறைகள்

போகாதே ! போகாதே !! என் தோழா
என்றெல்லாம் கெஞ்சியும் தான் பார்த்தார்கள் ! 

எடுப்போம் பார்  நடவடிக்கை !! என்று
ஆணவத்தின் உச்சியில் நின்று
மிரட்டியும்தான்  பார்த்தார்கள்

மூத்த முன்னோடிகளாம்.......
திருச்சியிலே சில வக்கிரங்கள்                     

எழுதி வைத்தார் சில வாசகங்களை

அவர்களின் துரதிருஷ்டம்
மூன்று முன்னாள் மாநில செயலர்களின்
பெயர்கள் ஏனோ மிஸ்ஸிங்........

இதுகூட  அம்மூவரும் தியாகம் எதையும் செய்யவில்லை
என்று குத்திக் காட்டும்   ஈனச் செயலன்றோ !!

அனைத்தையும் புறந்தள்ளி
எழுந்தது பார் வீரர் திருக் கூட்டம்
திருவாரூர், தஞ்சை, கும்பகோணம்
உள்ளிட்ட அனைத்து ஊர்களிலிருந்தும்
நிதியோடும் ஊழியர் துணையோடும்
திரண்டது பார் நம் தோழர்களின்  திருக்கூட்டம்
மதுரையிலிருந்து மும்மணியாய்
பாங்குறவே வந்தார்கள் வெற்றித் திருமகள்கள்
    
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும் என்பதுபோல்
கூனிகளின் சதிகள் எல்லாம்
சதிராடி போனதுவே !

நாடு போற்றும் நல்லவர் நல்லகண்ணு அவர்களின்
 மனமார்ந்த நல்வாழ்த்தும்
உலக தொழிற்சங்க தலைவரின் சிறப்பான நல்லுரையும்
புனிதமாக்கி  மேன்மையுறச் செய்ததுவே அத்திருவிழாவை  !

எளிமையாய் ஆயினும் கம்பீரமாய் நடந்தது பார்
எதற்கும் அஞ்சா மாவீரனின் பாராட்டு விழா !
நம் நெஞ்சை விட்டகலா திருச்சி திருவிழா  !

தங்கத் தலைவனுக்கு தங்கத்தால் அல்ல

பாராட்டு மழையால் பட்டாபிஷேகம் செய்தனரே !

காவிரித் தாய், மலைக்கோட்டை  பின்னணியில்
மறக்க முடியா நினைவு பரிசு வழங்கினாரே

நம் தியாகத் தலைவனுக்கு  தமிழகத்தின் தியாகச் செம்மல்

போற்றிடுவோம் நம் திருச்சி தோழர்களை !
CKM பணி நிறைவு பாராட்டு விழாவாய் ,
நெல்சன் மண்டேலா 95 வது பிறந்த நாள் விழாவாய்,
FDI எதிர்ப்பு மாநாடாய் பரிணமித்த
திருச்சி விழாவை எதிர் நீச்சல் போட்டு
வெற்றி கண்ட மாவீரர்களை !  Saturday, July 20

தலைவர்கள் ......தோழர்களின் ......உணர்வுகள் ....உரைகளில் சில.. சில.. !!

தோழர் மதிவாணன் சிறந்த மதிநுட்பமிக்க,  நெஞ்சுரம் கொண்ட  உண்மையான கம்யூனிச போராளி.... அவருக்கு சிறப்பாக நடக்கும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்பதை எனது கடமையாகவே கருதுகிறேன்......கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் வயதில் மூத்தவன் என்ற அடிப்படையிலும் மதிவாணன் தம்பதியார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்........

" போராளிகளை அவர்களின் மார்பிலே உள்ள தழும்பை வைத்துதான் இனங்காண முடியும் ; பணி துவங்கிய நாள் முதல் பணி ஓய்வு பெறும் நாள் வரை எண்ணற்ற போராட்ட தியாக விழும்புகளை தாங்கியவர்தான் தோழர் மதிவாணன்.....

தெருவிலே நடந்து போனால் தென்றல் காற்று
தெருவிறங்கி போராடினால் புயல் காற்று
வாய் திறந்தால் வந்து வீசும் அனல் காற்று
அதிகார வர்க்கத்திற்கு ஒவ்வாத வாடைக் காற்று

பகைவரெல்லாம் பயந்து நடுங்கும் குளிர் காற்று
பாட்டாளி தோழனுக்கு பரவசமூட்டும் கடற் காற்று
சுற்றுப்பயணம் செய்வதிலே சூறைக்காற்று
சுற்றியுள்ள அனைவருக்கும் நீ சுவாசக் காற்று.........
 
இடியென்ன மழையென்ன எதிர்த்து நில்லு,
எது வந்த போதும் துணிந்து  நில்லு,
உனக்கென்று ஒரு வழியை வகுத்துக் கொள்ளு,
அதில் யார் குறுக்கிட்டாலும் எதிர்த்து வெல்லு !.......

எளிமையாய் ஆனால் கம்பீரமாய்..... பாராட்டு விழா !!

CKM பணி நிறைவு பாராட்டு விழா !!!!!!!!!!!!!


      

CKM பணி நிறைவு பாராட்டு விழாவாய் , நெல்சன் மண்டேலா 95 வது பிறந்தநாள் விழாவாய் , FDI எதிர்ப்பு மாநாடாய் பரிணமித்த திருச்சி விழா!

   எளிமையாய் ஆனால் கம்பீரமாய்.....
லட்சம் லட்சமாய் வசூலாகி விட்டது !
60 பவுன் தரப்போகிறார்கள் ! என்று                 
பிரச்சாரம் ஒருபுறம் !!
நிதி தராதே !! கூட்டத்திற்கு போகாதே
என்று பிரச்சாரம் மறுபக்கம் !

  தடை கற்கள் உண்டென்றால், அதை தகர்க்க தடந்தோள்கள் 
எமக்கு உண்டென்று ! தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 
ஆர்ப்பரித்தது பார் ! உண்மைத் தோழர்களின் திருக்கூட்டம் !!

உணர்வுகளின் பிம்பமாய் தோழர் காமராஜ் தலைமை ஏற்க,
அமைதியின் திருவுருவம், ஆற்றலின் மறு வடிவமாம்
தோழர் எஸ்.பழனியப்பன் வரவேற்புரை நல்க,
 திருச்சி மாநகரின் வரலாற்று சிறப்புமிக்க தேவர் ஹால் நிரம்பி வழிய,

நாடறிந்த நல்லோன் நல்லகண்ணு அவர்கள்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நீ !
என்று வாழ்த்துப் பா இசைத்திடவே !!

திருச்சி CPI மாவட்டச் செயலர் தோழர் இந்திரஜித்,
உன்னை சீதனமாய ஏற்க நாங்கள் தயார் என்று வரவேற்க,

உனது இரண்டாவது இன்னிங்க்ஸ்,
சிங்கம் இரண்டு போல மேலும் சிறப்பாய் அமைந்திடவே
என்று  வாழ்த்துப்பா இசைத்திட்டார் !
உலக தொழிற் சங்க தலைவர் தோழர் எச். மகாதேவன் !

முழு மதியாய் நீ பிரகாசிக்க வேண்டும்,
உனது இரண்டாம் பகுதி பிறையினிலே,
என்று வாழ்த்துபா வாசித்தார் !!
நமது எளிய பாராளுமன்ற உறுப்பினர் தோழர் பொ .லிங்கம், M.P,
உன்னைப்போல் ஒரு மதிநுட்பம் மிக்க வீர தீரனுண்டோ என்று
வியந்திட்டார் மக்கள் தொண்டன் குணசேகரன்,MLA அவர்கள்....

தமிழக மூத்த முன்னோடிகள் R.V, ரகு, மாலி, பூபதி ஆகியோர்
போற்றிப் புகழ்ந்திடவே,
AIBSNLOA தலைவர் குணசேகர் அவர்களின் ,
மதி ! நீ எத்தனை வகையான  காற்று என்று
அருமையான கவிதை வாசிக்க,

மதியின் வழித்தோன்றல்கள், சென்னை எம்.கே.ராமசாமி,
புதுவை அசோகராஜ், கோவை சுப்பராயன், நெல்லை பாபநாசம்,
மதுரை தோழியர் பரிமளம், கடலூர் அன்பழகன்,
மற்றும் சம்மேளனச் செயலர் ஜெயராமன் அவர்களின்  உணர்ச்சிமிகு உரையோடு
சிறப்புற்றது  திருச்சி திருவிழா !!

உலகறிந்த சமத்துவத்திற்கான போராளி
நெல்சன் மண்டேலா அவர்களின் ,
95வது  பிறந்த நாளை இனிதாக கொண்டாடியதும்
நாட்டிற்கு கேடு விளைவிக்கும் மத்திய அரசின்
FDI கொள்கைக்கு எதிராக
Declaring  War On FDI என்ற கொள்கை முழக்கத்தோடு
மேலும் சிறப்புற்றது திருச்சி விழா !!

இரண்டாவது இன்னிங்ஸில் மேலும்
சிறப்பாக விளையாடுவேன் என்று
ஏற்புரையில் முழக்கமிட்டார் !
தோழர் மதிவாணன் அவர்கள்..

விழா மலரை தோழர் RNK வெளியிட
தோழர்கள் GJ, திருச்சி சுந்தரம் பெற்றுக்கொள்ள 

 விழா சிறக்க பொறுப்பேற்று செயலாற்றிய
தொழிலாளர் கல்வி மைய திருச்சி செயலர்
அருமைத் தோழர் பாலகுரு நன்றி கூற
மன நிறைவோடு நிறைவுற்றது
திருச்சி திருவிழா.....

கடும் எதிர்நீச்சல் போட்டு,
போற்றுதலுக்குரிய செயலாற்றிய
அனைத்து திருச்சி தோழர்களயும்
வணங்கி மகிழ்கிறோம் நாமெல்லாம் !!                                                                     
      

Saturday, July 13


சிம்மக்குரலோன் ! சீர்மிகு தலைவன் !!     தோழர். CK மதிவாணன், DGS, NFTE அவர்களுக்கு இலாக்கா பணி ஓய்வு பாராட்டு விழா!
18-07-2013, அன்று திருச்சி தேவர் மகாலில் !
அனைவரும் பங்கேற்போம்! திரளாக வருக!!

Friday, July 12நீடிக்கிறது ஸ்டிரைக்: நாளை முதல் உண்ணாவிரதம்!!


என்எல்சி நிறுவனப் பங்குகள் விற்பனையைக் கண்டித்து தொழிலாளர்கள் ஜூலை 3 முதல் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், நாளையுடன்(ஜூலை.13) 11-வது தினத்தை எட்டியுள்ளது.

போராட்டத்தை தீவிரப்படுத்தும்விதமாக நாளை முதல் நெய்வேலி மெயின்பஜாரில் உள்ள காமராஜர் திடலில் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குகின்றனர்.என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தொழிலாளர்கள் கடந்த 10 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தும் முகமாக 6-ஆம் தேதி தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம், 9-ஆம் தேதி அனல்மின் நிலைய முற்றுகைப் போராட்டம், 10-ஆம் தேதி விதிவிலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கை ரத்து செய்தல் உள்ளிட்டப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.போராட்டம் 11-வது தினத்தை எட்டியுள்ள நிலையில் தொழிற்சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த 150 நிர்வாகிகள் காலவரையற்ற போராட்டம் மேற்கொள்ளவுள்ளனர்.

நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளை, முன்னதாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டு வரும்படி தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ராஜவன்னியன் கேட்டுக்கொண்டுள்ளார்.


உத்ரகாண்ட் நிவாரண நிதி அளிப்போம்!!

இந்துக்களின் புனித தலம் பக்தி யாத்திரைக்கு பெயர் பெற்ற இடம் பேரிடர் துன்பத்தில் சிக்கியுள்ளது .இயற்கையின் கோரதாண்டவம் மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது .மக்கள் வாழ்வு நிலைகுலைந்துபோய் உள்ளது .                                

பேரிடர் துன்பம் துடைக்க அரசும் ,மனிதாபிமானிகளும் முயற்சிகள் எடுத்து வரும் பணியில் BSNLகார்ப்பரேட் அலுவலகமும் நமது    ஊழியர்களிடமும் ஒரு நாள் சம்பளத்தை நிவாரண பணிக்கு கேட்டுள்ளது. நமது உறுப்பினர்களும் தங்களது பங்களிப்பை கொடுத்து உதவுவோம்.

Wednesday, July 10

BSNL Roaming free !!!

NEW DELHI, JULY 10: 
Following rivals, state-run BSNL today said it has launched special plans offering customers free incoming calls and cheaper rates for outgoing calls and SMS while roaming in the country.
Other mobile operators have announced such schemes in order to comply with directions by the Telecom Regulatory Authority of India (TRAI) last month to give consumers the option of discounted roaming plans.
BSNL is offering two special tariff vouchers for roaming wherein customers will get unlimited free incoming calls for Rs 5 a day and Rs 69 for 30 days. Outgoing local and national calls will be charged at Rs 1.5 paise per second.
In addition, BSNL has launched two Roaming Tariff Plans (RTP) for post-paid customers for Rs 145 and Rs 625 which come with services such as free calls and SMS.
It has also launched RTPs for Rs 149 and Rs 825, which include free unlimited incoming calls for a month.
For pre-paid customers, BSNL has announced an RTP for Rs 405 and free roaming RTP for Rs 705.

Saturday, July 6

4வது நாளாக வேலை நிறுத்தம்!!!

 

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 4வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக 340 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் மற்றும் 15 தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 23 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

புதுச்சேரியில் என்எல்சி தொழிலாளருடன் அதிகாரிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று 4வது நாளாக நீடித்தது.

CKM.....


Thursday, July 4

ஐகோர்ட் தடையை மீறி என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!!என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில்

 மாலை 7 மணி அளவில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நெய்வேலியில் 5 சதவீத பங்குகள் விற்பனை வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் மத்திய அரசு வாபஸ் பெறாத காரணத்தினால்,

ஏற்கனவே அறிவித்தபடி இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த பேராட்டங்களை தொடங்க உள்ளதாகவும் அவர் அறிவித்தார். தொழிலாளர்களுக்கு ஒரு வழி பிறக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான், போராட்டத்தை நடத்துவதாகவும், எனவே மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.”

Monday, July 1

 பணி நாள் முழுதும் போராளியாய் வாழ்ந்த பாட்டாளி தோழனுக்கு !
              தொழிலாளர் கல்வி மையம்  நடத்தும் !!                 
                                        பணி ஓய்வு பாராட்டு விழா !!!  

    1972-ல்  PI பயிற்சி வகுப்பிலேயே போராட்ட பாதையை தேர்ந்தெடுத்த ஒரு போராளிக்கு,
    விழுபுண்ணுடன்  இலாக்கா பணியை தொடங்கிய ஒரு போராளிக்கு,
    பணி நாள் முழுதும் தொழிலாளி நலனுக்காக போராடிய ஒரு போராளிக்கு,
    2013-ல் பணி முடிக்கும் போதும் நிறுவன நலனுக்காக போராடி ஓய்வூதியம் மறுத்த விழுபுண்ணுடன் பணி ஓய்வு பெரும் ஒரு போராளிக்கு,

பணி ஓய்வு பாராட்டு விழா!
ஆம்! தோழர். CK மதிவாணன், DGS, NFTE அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா!
18-07-2013, அன்று திருச்சியிலே!
அனைவரும்பங்கேற்போம்!     திரளாக வருக!!                                                                                                                                                
அன்புடன் அழைப்பது,

 தொழிலாளர் கல்வி மையம், தமிழ்நாடு.