WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, November 29

15th December one day strike !!!

To defeat VRS and disinvestment participate and make the one day strike on 15/12/2011 a big success.

பெட்ரோல் விலை குறையும் !!!

பெட்ரோல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.1.02 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Friday, November 25

சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு!!!!!

பலதரப் பெயர் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதில் 51 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு. 
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் கோடி ரூபாய் பணம் புழங்கும் சில்லறை வணிகச் சந்தை வால்மார்ட், டெஸ்கோ, கேரிஃபோர் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் சிறு வணிகர்கள் மட்டுமின்றி சிறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கும். சிறுவணிகர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசி்ன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளி..

Thursday, November 24

58 வது ஆண்டில்!!!!

 NFPTE சம்மேளன தினம் (1954 - 2011) நவம்பர் 24 .

ஜார்கண்ட் மாநிலம் ...


நிலக்கரி நிறுவன ஏஜெண்டிடமிருந்து ரூ.70 கோடி பறிமுதல்.


வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், நிலக்கரி நிறுவன காண்டிராக்டரிடம் இருந்து ரூ.70 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Wednesday, November 23


இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் ஐந்து பேருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் பலரில், ஐந்து தனியார்துறை உயரதிகாரிகளுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட் டுள்ளது. .
யுனிடெக் நிறுவனத்தின் மேலா ண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, சுவான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோய ங்கா, ரி லை யன்ஸ் அம்பானி குழுமத்தின் அதிகாரிகளான ஹரி நாயர், கவுதம் கோஷ் மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
வெளிப்புற பகுதியில் பணியாற்றும் TM களுக்கு வில் போனுக்கு பதில் மாதம்  ரூ 300 க்கு, சிம் கார்டு,   செல் நம்பர், புதுவையில் வழங்கப்படுகிறது . 

Tuesday, November 22

BSNL WORKERS ALLIANCE !!! Notice for Strike on 15 th December, 2011.


1. Withdraw the proposal of VRS to staff.
2. Restore financial viability of BSNL
(a) Compensate for uneconomical activities done by BSNL and continue grant of support
of Rs.2,000 crores in lieu off ADC.
(b) Release BSNL from payment  of Pension liability of 40% as per DOT orders of 15
th
June, 2006.
(c ) Choice for selecting 3G spectrum.
(d)  Reimbursement of License fee as assured at the time of formation of BSNL
(e)  Refund of Rs 8313 crores paid towards BWA spectrum band
(f)  Discontinue and disband all TACS.
3. Immediate procurement of equipments (GSM, Cables, Dropwires, Modem etc)
4. 78.2% IDA fixation 
5. Restoration of Medical Allowance, Leave encashment and LTC facilities.
6. Take steps for early repatriation of non-optee ITS officers.
7. Minimum Bonus to staff akin to CG employees.
8. Ensure dialogue with all  the registered and applicant unions and extend minimum Trade
Union facilities.
We are compelled to serve the strike Notice as these demands are unresolved for a long
time despite pursuance at different levels.
Explanatory notes on demands will follow.

Sunday, November 20

வணக்கம் ! அபி அண்ணே தீபாவளி முடிந்து தோழர்கள் மறந்து போன போனசுக்காக தர்ணா இருந்திங்க சபாஷ்!! அண்ணே எந்த தீபாவளிக்கு போனஸ் கேட்டிங்க? உங்கள போல யாரும் தொழிலாளிய பட்டபகலில் ஏமாற்ற முடியது .
                          போங்கடா .......இதல்லாம் ஒரு பொழப்ப ?
வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என கொழும்புமேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு மூன்று வருடகால சிறைத்தண்டனை .

Saturday, November 19



நரசிம்மராவ் அமைச்சரவையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராமுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

Friday, November 18

டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளின் வீடுகளில் இன்று நடந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Thursday, November 17

கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள கிங்பிஷர் நிறுவனத்துக்கு எக்காரணத்தை கொண்டும் நிதியுதவி செய்யக் கூடாது என்று அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 


இந்திய மது விற்பனையில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்தும் அளவு ஆதிக்கம் உள்ளனர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல். அணியின் உரிமையாளராகவும் உள்ளார். ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் பெரும் அரண்மனை ஒன்றையும் கர்நாடகத்தில் இவர் கட்டி வருகிறார். அழகிகளின் அரை நிர்வாண காலண்டர் அடிப்பதற்கே பல கோடிகள் செலவிடும் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் இந்திய விமான போக்குவரத்து ஆணையத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாக செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிக் கடனைத் திரும்ப செலுத்தாத தொழிலதிபர்கள்: பட்டியலை வெளியிட உத்தரவு

அதிக அளவு கடன் வாங்கியுள்ள பெரும் தொழிலதிபர்களில் முதல் 100 பேர் அடங்கிய பட்டியலை கண்டிப்பாக ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டுமென்று மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஷைலேஸ் காந்தி கூறியுள்ளார். அவர்கள் வாங்கியுள்ள கடன் அளவு, அதற்கான வட்டி, அவர்கள் செய்யும் தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆண்டுதோறும் இந்த விவரங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Wednesday, November 16



 2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்து தணிக்கை செய்தபோது, தணிக்கையின் பல்வேறு கட்டங்களில் ரூ.2,645 கோடி முதல் 4 லட்சத்து 19 ஆயிரம் கோடி வரை இழப்பு விவரங்கள் கிடைத்தன. எனினும், அனைத்து விதமான வரைவு அறிக்கைகளையும் கவனமாக ஆய்வு செய்து இறுதி அறிக்கை தயாரித்தபோது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. எனவே, இழப்பு ஏற்பட்டதில் எந்த மாற்றமும் கிடையாது 
.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதில் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது உண்மையே என்றும், ரூ.2,645 கோடி இழப்பு என்பது சரியல்ல என்றும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் நேற்று மீண்டும் உறுதியாக தெரிவித்தார்

Tuesday, November 15

BSNL relieved 234 officers under repatriation to DoT.



BSNLCO: 37,MP: 11,ALT: 11,AP: 11,BRBRAITT: 4,CHTD: 7,   CGH: 6,GJ: 13,HP: 3,HR: 12,JKD: 3,JK: 2,KR: 8,KOLTD: 2,       KTK: 12,NTR: 4,MH: 17,OR: 4,RJ: 21,STR: 6,TN: 10,UCH: 9,     UPE: 16,UPW:19, WB: 7,WTR: 4,
                                                               =TOTAL: 234.

Sunday, November 13

Immediate conduct of LDCE for the cadre of TTA under 40% quota for the Recruitment year 2008 by TN, Assam, Jharkhand and UP(E) Circle
Extension scope of family pension to widowed/unmarried daughter and dependent disabled siblings of Central Government servants/pensioners. letter No. 40-13/2011-Pen(B) dated 08.11.2011 
மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அரசு சார்பில் திருச்சியில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் எனும் மிகப்பெரிய பொறுப்பை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எனக்கு கொடுத்துள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. அதன்படி செயல்பட்டு கட்சியை வலுப்படுத்துவேன். என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் ஞானதேசிகன் கூறினார்.

Thursday, November 10

10ஆம் வகுப்பு பள்ளித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாகியுள்ள புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் கல்யாணசுந்தம்

Wednesday, November 9

விழுப்புரத்தில் விழா !!!

        தோழர் ;S.தமிழ்மணி , தோழர் ;N.K.சீனுவாசன் 
இருவருக்கும் பணி ஓய்வு பாராட்டு விழா 12-11-2011 சனிக்கிழமை மாலை விழுப்புரம் தொலை பேசி நிலையத்தில் நடைபெறுகிறது . 
தோழர் ;ரகு ,தோழர் ;ரங்கநாதன் ,தோழர் ;பட்டாபி  
ஆகிய தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர் .
          மாநில செயலர் தோழர் ; பட்டாபி அவர்கள் ஜனசக்தியில் எழுதிய கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது, படித்து பயன் பெறுவோம் !!!

Monday, November 7



தொழிற்சங்க மையங்களின் ஒன்று
            பட்ட அறைகூவல்!!!

சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆதரவாய்!!!
              நவம்பர் 8 அன்று 
ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

 இன்று நவம்பர் 07  புரட்சி தினம் !!!!
உலகிற்க்கு பொதுஉடமையை
           கொடுத்த நாள் 
    நவம்பர் புரட்சி (அக்டோபர் 17 )       

Sunday, November 6

பக்ரீத் பண்டிகை வாழ்த்து !!!





தொழிலாளர் வர்கத்தின் போர்வாள் ஜனசக்தி கலைஇலக்கிய பேராசான் ஜீவா அவர்களால் உருவாகிய நாள்      (06 -11-1937)  74 ஆண்டுகள் நிறைவுசெய்து 75 ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது .

Saturday, November 5

Demonstration on 8th November 2011 !!!!!

      All Circle and district secretaries are requested to hold massive lunch hour demonstration on 8th November 2011 in front of all exchanges/offices as per the decision of NEC at Coimbatore, in support of the charter of demands including opposing VRS/disinvestment/outsourcing in PSU’s and price rise submitted by eleven major central trade unions in India including AITUC, CITU, INTUC, HMS & BMS. Make the programme a grand success.

NFTE still stands for indefinite strike !!!!


        After conclusion and decision of National Executive Meeting of NFTE BSNL the H.Q. wrote to the General Secretaries of almost all unions suggesting for indefinite strike to ensure financial viability and survival of BSNL. The Government had promised in September 2000 to keep the BSNL financially viable. NFTE also suggested that strike should take place when parliament is in session. No one will dispute that dangers are grave as such united and serious struggle is necessary. NFTE feels One-day strike may not serve the purpose due to obvious reasons. It will be difficult to mobilize the workers for indefinite strike after one day strike and that too without securing any result. Therefore, NFTE is still of considered view that united indefinite strike is need of the hour so that BSNL gets financial packages as well as other concessions from the Govt. Once BSNL is financially viable and in profit the issues of VRS as well as facilities of medical allowance without voucher will be automatically settled. Therefore, NFTE still and firmly stands for do or die struggle. 

Wednesday, November 2

தோழர் NKS  பணி ஓய்வு ....
தோழர் சிவசங்கரன் பணி ஓய்வு ..
இருவரும் NFTE சங்கத்தின் மைல் கல்கள் ...
மறக்கமுடியாத அந்த நாட்க்கள் ...
வாழ்த்தி வணங்குகிறோம்!!!! 

தொழில் நிறுவனங்களைக் காப்பதற்காக மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் நிலை குறித்து பிற நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் மாநாட்டில் தொடர்ந்து 6-வது முறையாக பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கையில் பிற நாடுகள் தாமாக முன்வந்து தகவல்களை அளிக்க வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 85 சதவீத பங்களிப்பை ஜி 20 நாடுகள் அளிக்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இந்த கூட்டமைப்பு நாடுகளில் வாழ்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு வரி ஏய்ப்பு தொடர்பான வழிமுறைகளை அடைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்படும் என தெரிகிறது

அதிகபட்சமாக 100 குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற வரம்பை 200 குறுஞ்செய்திகளாக உயர்த்தியது டிராய்.
தொலை தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய், ஒரு சிம் கார்டில் இருந்து நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பலாம் என கட்டுப்பாட்டு விதித்திருந்தது.


தற்பொழுது அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு அதிகபட்சமாக 200 குறுஞ்செய்திகள் வரை அனுப்பலாம் என டிராய் அறிவித்துள்ளது.


செல்போன் சேவை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளால் குறுஞ்செய்தி வரம்பு மாற்றியமைப்பட்டுள்ளதாக டிராய் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


இன்று முதல் நாளோன்றுக்கு அதிகபட்சம் 200 குறுஞ்செய்திகள் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, November 1

இந்தியா எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளை தீர்க்கக் கூடிய உடனுக்குடன் முடிவெடுக்கும் தலைமை நாட்டில் இல்லை என்று விப்ரோ நிறுவனத் தலைவர் அசீம் பிரேம்ஜி கூறியுள்ளார். ...