WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, June 30

TTA Exam Result: Process going on, Results expected any day in July
                  tn,circle........

Thursday, June 28

தமிழ் மாநில சங்கத்திற்கு என்று ஒரு பெருமை உண்டு. அதை பதவி ஆசை பிடித்த சிலர் சீர்குலைக்க அனுமதியோம் !
சரிதான் ?இதை பாண்டி மாவட்டசெயலர் போட்டிருப்பது தகுதியற்றது. 
வணக்கம் !
கணிபொறி மானிட்டர் பழுதடைந்ததால்
தொடர்ந்து தொடர்புகொள்ளமுடியவில்லை
இனி தொடர்வோம் !!!

Saturday, June 23


கோவா BSNLல் பணியாற்றும் 200 ஒப்பந்த ஊழியர்கள்
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.270/-, ஓவர் டைம் அலவன்ஸ்,
வார விடுமுறை ஆகிய சட்டபூர்வமான உரிமைகளை வழங்கிட வலியுறுத்தி AITUC (GOA) சங்கத்தின் மூலம் வேலைநிறுத்தப் போராட்டம் 18-6-2012 முதல்
நடைபெற்று வருகிறது.
தகவல் : Times Of India dated 21-6-12

Thursday, June 21

BSNLDEU celebrates 1st Anniversary in Chennai telephones!!

On 16/06/2012 BSNLDEU celebrated its first anniversary in a grand maaner at Flower bazaar telephone exchange. Com. C.K.Mathivanan, Com.Lingamurthy,CS (FNTO) and Com. Udayasuriyan (AIBSNLOA)  participated in this function  in which more than 350 comrades took part. Nearly thousand comrades quit BSNLEU last year and formed BSNLDEU due to the undemocratic attitude of Com. Abhimanhu, the General secretary of BSNLEU. Since then their number is increasing day by day and BSNLEU is losing the ground steadily in Chennai telephones.

IPTA KALAIVIZHASaturday, June 16

விமர்சணங்களை தாங்கமுடியாத செல்லப்பாவுக்குஒருகேள்வி?

அகில இந்திய செயலர் அபிமன்யு ஏன் வேலை நிறுத்தம் செய்ய புதுச்சேரிக்கு வரவில்லை ?
வேலைநிறுத்தம் வராதுஎன்று CMD இடம் ரகசிய ஒப்பந்தமா ?
உங்களுக்கு எங்கள் மதிவாணனை விமர்சிக்க அருகதை இல்லை.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் கருப்பு பணம் ரூ.3,500 கோடி அதிகரித்தது!!


சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியரின் கருப்பு பணம் கடந்த 5 ஆண்டில் முதல்முறையாக அதிகரித்துள்ளது.


கடந்த 2006ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.40,000 கோடி இருந்தது. அது 2010ம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு பகுதி குறைந்தது. 2010ல் இருந்த தொகையைவிட 2011ம் ஆண்டில் ரூ.3,500 கோடி அதிகரித்து மொத்தம் ரூ.12,740 கோடியானது. கருப்பு பண விவகாரம் விஸ்வரூபம் எடுத்த கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக இந்தியருக்கு வழங்கப்பட்ட அமெரிக்க அதியுயர் சட்டத்துறை பதவி!!


அமெரிக்காவின் அதியுயர் சட்டத்துறை பதவியொன்று இந்தியரான சிறீகாந்த் சீனிவாசன் என்பவருக்கு வழங்கபட்டுள்ளது


சண்டிகாரில் பிறந்து வளர்ந்த சீனிவாசன், அமெரிக்காவில் குடியேறி அங்கு ஸ்டான்போர்ட் சட்டகல்லூரியில் சட்டக்கல்வி பயின்று பட்டம் பெற்றார்.  தற்போது கன்சாஸ் மாகாணத்தின் முதன்மை துணை சொலிசிட்டர் ஜெனரலாக உள்ளார்.ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க!! ரூ.86.56 கோடி செலவு செய்த மாயாவதி!!


முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி தான் முதல்வராக இருந்த போது தனது பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


5 ஏக்கரில் அமைந்துள்ள மாயாவதியின் பங்களாவை கட்ட அரசு கஜானாவில் இருந்து ரூ.86 கோடி எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க ரூ.86.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, June 13

சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா !!


நித்யானந்தா இன்று கர்நாடகத்தில் உள்ள ராம்நகரா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில்  இன்று சரண் அடைந்தார். கர்நாடகக் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று சரண் அடைந்துள்ளார். 
07.06.2012 அன்று பெங்களூருவில் உள்ள அவரது ஆசிரமத்தில் பத்திரிகையாளர்களுக்கும் நித்யானந்தாவின் சீடர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு, நித்யானந்தா மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்குகளில் அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற நித்யானந்தாவின் மனுவை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம் திரும்பப் பெற மறுத்து விட்டது. 


நான்கு நாட்களாக தலை மறைவாக இருந்த நித்யானந்தா இன்று சரண் அடைந்துள்ளார்.

Strike deferred !!!

 Agreement signed on strike demands and strike deferred. congratulations and greetings to all comrades.
                                                                              chq....
உடன்பாடு,மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.
 சங்க நிர்வாகிகளின் கடின உழைப்பு, விழலுக்கு
இரைத்த நீராக ஆகிவிட்டது.

Tuesday, June 12

poster


Strike !!


 Strike will begin from “0” hours on 13th June,2012.                 Strikers will neither sign in the attendance register nor sit in office.

Thursday, June 7

தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் தேர்வு!!!

 நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரான எஸ்.ஒய். குரேஷி, வரும் 10ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வந்த வீரவள்ளி சுந்தரம் சம்பத்தை, தலைமைத் தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேற்று நியமித்தார். 

Tuesday, June 5

06-06-2012... மாபெரும் தர்ணா !!!தாமதமின்றி அனைத்து அலவன்ஸைகளையும் வழங்கிடு!


01-01-2007 முதல்,

78.2 சதவீத IDA  வை இணைத்திட வேண்டும்!.

பறிக்கப்பட்ட மெடிக்கல் அலவன்ஸ்,LTC  ஆகியவற்றை வழங்கு!

LTCசலுகையைப் பயன்படுத்தும்போது பெறப்பட்ட லீவ்   
       என்கேஷ்மெண்ட்டை வழங்கு!

06/06/2012 அன்று மாவட்ட 
          தலைமையகங்களில் பெருந்திரள் தர்ணா.

13/06/2012 அன்று முதல் கால வரையற்ற  
                       வேலை நிறுத்தம்.

Saturday, June 2

பெட்ரோல் ரூ2 விலைக்குறைப்பு : நள்ளிரவு அமலுக்கு வருகிறது!!!

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லீட்டருக்கு ரூ.2  குறைக்கப்படவுள்ளது. தற்போதுள்ள  விலையிலிருந்து பெட்ரோலிய நிறுவனங்கள் ரூ 1.68 விலைக்குறைப்பு மேற்கொள்ள இணங்கிய நிலையில் 20 % வீத VAT சேர்க்கப்பட்டு இவ்விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக சஸ்பெண்ட் ஆன நீதிபதி கைதாகிறார்!!


கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை ஜாமீனில் விடுதலை செய்ய ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிபதியை கைது செய்ய சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐகோர்ட் உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையும் தொடங்கி உள்ளது. 

Friday, June 1

போராட்டம் உறுதி !!

CMD அவர்களின் அழைப்பின் பேரில் அனைத்து சங்கங்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு
உள்ளது.