WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, December 27

குப்தாவின் தீர்க்க தரிசனம்

MTNL தோழர்களுக்கு ஓய்வூதியம் 

ஏறத்தாழ 43000 MTNL ஊழியர்களின் மிக நீண்ட நாளாக  BSNLக்கு இணையான ஓய்வூதியம் தேவை என்று கோரி வருவது அனைவரும் அறிந்தததே. அதனை  தற்போது மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.. 

BSNL போலவே DOT மற்றும் MTNLலில் பணிபுரிந்த மொத்த சேவைக்காலதமும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதனையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப்படும். 

ஓய்வூதியப்பங்களிப்பு PENSION CONTRIBUTION என்பது 31/12/2005 வரை IDA சம்பளத்தின் அதிகபட்சத்திலும் 01/01/2006க்குபின் ACTUAL PAY ஊழியர்கள் வாங்கிய சம்பளத்தின் அடிப்படையிலும் கணக்கீடு செய்யப்படும்.

இதற்காக ஓய்வூதிய விதி RULE 37Aல் 3 மாதங்களுக்குள் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது.. 

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.. 

இந்த ஓய்வூதியப்பலனை பெற MTNL ஊழியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குப்தா முன்மொழிந்த யோசனை. ஏதாவது ஒன்றை இழந்தால் மட்டுமே மற்றொன்றை பெற முடியும் என அவர் நம்பினார்.

BSNL உருவாக்கத்தின் போது தோழர். குப்தா, ஓய்வூதியத்தை மட்டும் வாங்கி விட்டு MTNL போல உயர் சம்பளம் வாங்கத்தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக ஒலித்தது. ஆனால் உயர் சம்பளம் வேண்டாம் ஓய்வூதியமே போதும் என MTNL ஊழியர்கள் சரியான நிலை எடுத்து தங்களது கோரிக்கையை வென்றுள்ளனர். 

MTNL ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது அவர்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு என்றால் மிகையாகாது.
          செய்தி காஞ்சி வலைத்தளம் ..........

Thursday, December 26
CPIக்கும் , தோழர் RNKஅவர்களுக்கும் 89வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!

The Tamil Nadu unit of the Communist Party of India (CPI) is gearing up to celebrate two anniversaries. Thursday is the 88th anniversary of the founding of the party, and is also the 88th birthday of its veteran leader R Nallakannu. The party is set to celebrate these events at a function to be held at its state headquarters in Chennai, with Nallakannu hoisting the party flag and delivering a speech.

Tuesday, December 24

                                        

 தந்தை பெரியார் நினைவு நாள்!!!!


இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.
மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.
மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள்!!!!

Saturday, December 21

 காரைக்குடி
தோழர். இரா. பூபதி 
SDE அவர்களின்  
பணி நிறைவு விழா 
மற்றும் மணி விழா
22/12/2013 - ஞாயிறு
காலை 10 மணி
அமராவதி மகால் - காரைக்குடி
தலைவர்கள் மற்றும்
தோழர்கள் பங்கேற்பு
தோழர்களே .. வாரீர்..
NFTE-BSNL கொடுத்த முக்கியமான சில பிரச்னைகளை ஊழியர் தரப்பு  செயலர் தோழர் அபிமன்யூ, இந்த கூட்டத்தின் விவாதத்திற்கு அனுப்பவில்லை !

அதில் முக்கியமானவை : மகளிர்க்கு மாதம் ஒரு நாள் சிறப்பு சிறு விடுப்பு, NE-11லிருந்து NE-12 பதவி உயர்வுக்கான காலத்தை 8 ஆண்டுகளாக உள்ளதை குறைக்கவேண்டும் உள்ளிட்டவை.

  இது முறைதானா ? ஊழியர் தரப்பு செயலருக்கு வீட்டோ பவர் உண்டா ? இது போன்ற சூழ்நிலையில் நாம் என்ன
செய்வது என்று BSNL நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கேட்டு
NFTE-BSNL தலைமை கடிதம் எழுதி உள்ளது......... 
..............?
அடுத்து நடைபெறவுள்ள தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு ஊழியர் தரப்பு கொடுத்துள்ள சில பிரச்னைகளை நிர்வாகம் தன்னிச்சையாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் drop  செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று BSNL நிர்வாகத்திற்கு ஊழியர் தரப்பு  செயலர் அபிமன்யூ கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

 ஆனால், இவரோ, தன்னை  ஒரு அதிகாரி போல பாவித்துக்  கொண்டு, NFTE-BSNL கொடுத்த பிரச்னைகளை drop செய்தது சரியா என்று சிந்தித்து பார்ப்பாரா ???????????????!

Monday, December 16

டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி-கவர்னர் பரிந்துரைத்தார் !!

கடந்த 4–ந்தேதி நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை. 31 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதாவோ, 28 தொகுதிகளை கைப்பற்றிய ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோ ஆட்சி அமைக்க முன் வரவில்லை.
எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து ஆளுநர் இன்று உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்துமாறு பரிந்துரைத்தார்.

Sunday, December 15

மண்டேலா உடல் இன்று அடக்கம்!!!


மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த ஊரான குனு கிராமத்தில் இன்று (15-12-2013)ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.

புதிய மக்களவை ஜூன் 1ல் அமைக்கப்படும் : மார்ச் மத்தியில் தேர்தல் அறிவிப்புபுதிய மக்களவை அடுத்தாண்டு ஜூன் 1ம் தேதிக்குள் அமைக்கப்பட்டு விடும். பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.  மார்ச் மாதம் மத்தியில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கமிஷன் சூசகமாக கூறியுள்ளது.ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து  முடிந்ததை தொடர்ந்து மக்களவை தேர்தல் பரபரப்பு ஆரம்பமாகி விட்டது. மே மாத மத்தியில், இறுதியில் நடக்கலாம் என்று தெரிகிறது. தேர்தல் கமிஷன் எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க இப்போதே தயாராகி விட்டது. இப்போதுள்ள 15வது நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் மே மாதம் 31 ம் தேதி முடிகிறது. அப்படிப்பார்த்தால் ஜூன் 1 ம் தேதிக்குள் 16 வது நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு விட வேண்டும்.

இப்போதுள்ள கணக்குப்படி 78 கோடி பேர் வாக்காளராக உள்ளனர். மக்களவை தேர்தல் நடத்த நாடு முழுவதும் 8 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போட 11 லட்சத்து 80 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் ஓட்டு போட்டு 543 எம்பிக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.  வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கும் பணி  தொடர்ந்து நடப்பதால் பல மாநிலங்களிலும் புதிய வாக்காளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய வாக்காளர் பட்டியலை அடுத்த மாதம் வெளியிடவும் கமிஷன் முடிவு செய்துள்ளது. 

Friday, December 13

  NFTE ன் பாரம்பரியம் போராட்டப்பாதை என்பதை வலியுறுத்தும் நோக்கில் சுமார் 1000க்கும் மேற்பட்ட NFTE தோழர்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர்.

  100க்கும் மேற்பட்ட சென்னை
NFTE தோழர்களுடன் தோழர் C.K.M.  மற்றும்
    தோழர் பட்டாபி                     


Monday, December 9

4 மாநில தேர்தல்: நோட்டாவுக்கு வாக்களித்த 16 லட்சம் வாக்காளர்கள்!!
இடைத்தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்களுக்கு, ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஓட்டுப் போட வருபவர்கள், ஓட்டுப் பதிவு எந்திரத்தில் தாங்கள் விரும்பும் கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் இடம் பெற்றுள்ள பொத்தானை அமுக்கி ஓட்டுப் போடுகிறார்கள். ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்கு 2009 பாராளுமன்ற தேர்தலில் 49 ஓ என்ற பாரத்தை நிரப்பிக் கொடுக்கும் முறை அறிமுகமானது.

தற்போது நடந்த 5 மாநில மற்றும் ஏற்காடு இடைத் தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப் பதிவு எந்திரங்களிலேயே வேட்பாளர்களின் சின்னங்களையடுத்து, ‘நோட்டா’ பொத்தான் அமைக்கப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்கள் இந்த பொத்தானை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

இதையடுத்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், டெல்லி சட்டசபை தேர்தல்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘நோட்டா’ வுக்கு வாக்களித்துள்ளனர்,. இதன் மூலம் எந்த வேட்பாளர்களையும் விரும்பவில்லை என்பதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் ‘நோட்டா’ பொத்தானை பயன்படுத்தி உள்ளனர். 199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 5 லட்சத்தில் 88 ஆயிரத்து 411 பேர் ‘நோட்டா’வுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

சத்தீஷ்கரில் 90 தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ‘நோட்டா’ ஓட்டுக்களை பதிவு செய்திருக்கிறார்கள். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில தேர்தலில் 47 ஆயிரத்து 972 பேர் ‘நோட்டா’வுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

ஏற்காடு இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான மின்னனு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ‘நோட்டா’ பொத்தான் 12–வதாக இடம் பெற்றிருந்தது. இதில் 4 ஆயிரத்து 431 பேர் வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை அடுத்து யாரையும் விரும்பாததை தெரிவிக்கும் நோட்டாவுக்கு தான் 3–வதாக அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. 9 சுயேட்சை வேட்பாளர்களில் யாருக்கும் இந்த அளவு ஓட்டுக்கள் கிடைக்கவில்லை

Friday, December 6

அஞ்சலி!!

 தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா காலமானார் ........ 


நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி, 94வது பிறந்த நாளை கொண்டாடிய மண்டேலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8-ந்தேதி பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.

 சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக,  கடலூர் லைன் ஸ்டாப் மாநில மாநாட்டில் தோழர் ஜெகன் அவர்கள், நெல்சன் மண்டேலா அவர்களை விடுதலை செய் என்று எழுப்பிய போர் முழக்கம் இன்றும் நம் நெஞ்சில் நிழலாடுகிறது.

நெல்சன்  மண்டேலா மறைவிற்கு
நமது செங்கொடி தாழ்த்திய அஞ்சலி..........

Tuesday, December 3

டெல்லிச் செய்திகள் ..........

   
    SSAக்களை சீரமைக்கபோவதாக நிர்வாகம் 30-11-12 அன்று நடந்த அனைத்துச் சங்க கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

   வருவாய் அடிப்படையில் SSAக்களை இணைப்பதால் ஊழியர்களின் மாற்றல் எல்லை அதிகரிக்கப்படலாம் என்கிற காரணத்தால், சங்கத்துடன் கலந்து பேசிய பிறகே இந்த பிரச்னை பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று NFTE-BSNL வலியுறுத்தி உள்ளது

02-12-2013 : Restructuring of SSAs - Suggestions regarding. Letter No.-TF-21/6, Dated:-02-12-2013


புதிய போனஸ் / PLI திட்டம் பற்றி விவாதிக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் 9-12/13 அன்று நடைபெறவுள்ளது.

    02-12-2013 : Meeting on 9th December on New Scheme of Bonus/PLI based on Performance Management system. Letter No.-1-5/2012-Restg, dt-29-11-2013.

Sunday, December 1

தண்டிப்பதா? கண்டிப்பதா??சேலம்மாவட்டச் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் 16/11/2013-ல் நடைபெற்றதாகவும் அதில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று தோழர்.சி.கே.மதிவாணன் அவர்களை வன்மையாக கண்டித்ததாகவும் புதிதாக துவக்கப்பட்ட சேலம் மாவட்ட சங்க இணையதளத்தின் மூலம் அறிந்தோம்.

உண்மையான விபரங்களை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இதை நாங்கள் எழுதுகிறோம். தற்போது தமிழ் மாநிலச் சங்கத்தின் தலைவராக இருக்கும் தோழர்.ஹெச்.நூருல்லா 16/11/2013 வரை சேலம் மாவட்டச் செயலாளராக சர்வ அதிகாரத்துடன் செயல்பட்டவர் என்பதை தமிழ் நாட்டுத் தோழர்கள் நன்கு அறிவார்கள்.அவர் மாவட்டச் சங்கத்திற்காக ஏற்கெனவே வாங்கப்பட்டிருந்த ஒரு நிலத்தை விற்று எருமைப்பாளையம் என்ற கிராமத்தில் 4043 சதுர அடிக்கு நிலத்தை டிசம்பர்-2009ல் வாங்கியதாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர் இந்த நிலம் சம்பந்தமாக முடிவு எடுப்பதற்கும், நிலத்தில் சங்க கட்டிடம் கட்டுவதற்கு முடிவு எடுக்கவும்  ஐவர்குழு ஒன்று அமைக்கப்பட்டது. தோழர்.நூருல்லா யாருக்கும் தெரியாமல்;ஐவர் குழுவுக்கும் கூடச் சொல்லாமல் கள்ளத்தனமாக மேற்படி நிலத்தில் 2015 சதுர அடியை பிரித்து தனது பெயரில் 19/2/2010-ல் பத்திரபதிவு செய்து கொண்டார். இது ஒரு நம்பிக்கை துரோகமான செயல் என்பதுமட்டுமல்ல அப்பட்டமான மோசடி என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

தொழிற்சங்கத்திடமிருந்து தோழர்.நூருல்லா தன் பெயருக்கு இவ்வாறு கபளீகரம் செய்த 2015 சதுர அடி நிலத்தின் மதிப்பு சுமார் 20 லட்சங்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.இது குறித்து சேலம்மாவட்டச் செயற்குழுவில் பல முன்னணித் தோழர்கள்  கடந்த இரண்டு வருடங்களாக விவாதிக்க வற்புறுத்தியும் தோழர்.நூருல்லா  தந்திரங்கள் பல செய்து இந்த நிலமோசடி குறித்து விவாதம் நடத்த முன்வரவில்லை. எனவே வேறு வழியின்றி 2/08/2013 ல் சேலம்மாவட்டத்தின் முக்கிய தோழரும் தமிழ் மாநிலத் துணைத் தலைவருமான பி.ராசா பகிரங்கமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு ஊழியர்களிடம் அதை விநியோகிக்கவும் செய்தார்.

இதன் பின்னரும் தோழர்.நூருல்லாவின் மவுனம் தொடர்ந்துதான் மர்மம்.இதை தொடர்ந்து நமது சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் நான்குபேர் ”மவுனம் ஏன்” என்ற தலைப்பில் இதே விஷயத்தை ஊழியர்களிடம் அறிக்கையாக கொண்டு சென்றனர்.  ஆனாலும் “திருடனுக்கு தேள் கொட்டினால் சத்தமிட்டு கதற முடியாது” என்பது  போல தோழர்.நூருல்லாவும் அவரது நண்பர்களும் கள்ள மவுனம் சாதித்தனர்.

நேர்மைக்குப் புகழ்பெற்ற தோழர்.பட்டாபிராமன் தமிழ் மாநிலச் செயலாளராக இருக்கும்போதே இப்படிபட்ட மோசடிகள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் மூடிமறைக்க முயற்சிகள் நடந்ததுதான் இந்த திடுக்கிடும் கதையில் எதிர்பாராத திருப்பம்.இதுதவிர பல முன்னாள் மாநிலச் செயலாளர்கள், மாநிலப் பொருளாலர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் சேலத்தில் முகாமிட்டு இந்த மோசடியை மூடி மறைக்கவும் தோழர்.நூருல்லாவை காப்பாற்றவும் படாதபாடு பட்டனர். அவர்களின் மேலான ஆலோசனைப்படிதான் தோழர்.நூருல்லா 04/11/2013-ல் விருப்ப ஓய்வில் வெளியேறிவிட்டார். இத்தகைய சோதனை காலத்தில் சேலத்தில் உள்ள பல முக்கிய தோழர்கள் சம்மேளத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர்.சி.கே.மதிவாணனிடம் இந்த மோசடி குறித்து உடனடியாக நடவடிக்கை  எடுக்க கோரினர். அவரும் தனது பொறுப்பை தட்டிக் கழிக்காமல் காவல் துறையில் இதுகுறித்து 15/10/2013-ல் புகார் மனு அளித்தார். NFTE-BSNL சங்கத்திற்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலம் ஒரு நபரால் களவாடப்பட்டது குறித்து அக்கறையுடன் காவல் துறையில் புகார் அளித்த காரணத்திற்காக தோழர்.சி.கே.மதிவாணனை சேலம்மாவட்டச் செயற்குழு கூட்டம் வன்மையாக கண்டித்திருக்கிறது.

நிலம் மோசடி மட்டுமல்லாமல் இதுகாறும் வசூலான பல லட்ச ரூபாய்க்குப் கணக்கு எதையுமே காட்டாத பழக்கத்தில் இருந்தவர்தான் தோழர்.நூருல்லா.அவர் திடுதிப்பென ஒரு போலிக் கணக்கை; பொய்யான கணக்கை 16/11/2013-ல் சமர்பித்ததும் அதனை அந்த மாவட்டச் செயற்குழு ஒப்புக் கொண்டதாக அறிவித்திருப்பதும் மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை.

தமிழ் நாட்டின் மாநிலச் சங்கத்திற்கு எத்தனையோ உத்தமர்கள் தலைமை தாங்கி வழி நடத்தி இருக்கிறார்கள். இன்று காலம் செய்த கோலம் நிலமோசடிக்காரர்; சங்கப் பணத்தை சுருட்டியவர்; பொய் கணக்கை சமர்ப்பித்தவர் மாநிலச்சங்கத்தின் தலைவர் பொறுப்பில் வீற்றிருக்கிறார். தவறுகளை சுட்டிக்காட்டிய பிறகும் தவறுக்கு துணைபோகும் தவறினை சேலம்மாவட்டச் சங்கம் தொடர்ந்தால் அது  NFTE-BSNL புகழ்மிக்க பாரம்பரியத்திற்கு பெரும் அவமானத்தையே தேடித் தரும்.எனவே மிகுந்த அடக்குத்துடன் நாங்கள் அந்த மாவட்டச் சங்க தலைமைக்கு விடுக்கும் வேண்டுகோள் இதுதான். தோழர்.சி.கே.மதிவாணனை கண்டிப்பதை விட்டுவிட்டு தவறிழத்த தோழர்.நூருல்லாவை தண்டிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

வெளியீடு: காஞ்சி மாவட்டச் சங்கம், சென்னை தொலைபேசி மாநிலம்,.
NFTE வட சென்னை மாவட்டம்