WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, September 28

புரட்சி என்பது உலகத்தின் ஒரு சட்டம். அது மனிதவர்க்க முன்னேற்றத்தின் ரகசியம். தனிநபர்களைப் பழிவாங்கும் நோக்கம் புரட்சி நடவடிக்கைகளின் அம்சமாகாது. »

சிகரம் தொட்டவை............ 

செவ்வாய்க்கு செல்லும் பயணம் கடினமானது. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில், 30 தோல்வி கண்டிருக்கின்றன. 21 ஓரளவு வெற்றியைக் கண்டுள்ளன. சமீபத்தில் ஜப்பான், சீனா அனுப்பியவையும் தோல்வியே கண்டன. உலகில் செவ்வாய்க்கு சென்ற நான்காவது நாடு என்ற பெருமை மட்டுமல்ல, முதல் ஆசிய நாடு, முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட நாடு என்ற கூடுதல் பெருமைகளையும் இந்தியாவுக்கு இஸ்ரோ ஈட்டித் தந்துள்ளது.  

இப்போது திட்டமிட்ட பாதையில் மங்கள்யான் சென்றுள்ளது மட்டுமல்ல, இதுவரை மங்கள்யானில் எந்தப் பழுதும் இல்லை. அதில் உள்ள ஐந்து அறிவியல் கருவிகளும் சரிவர இயங்குகின்றன. திட்டமிட்ட பாதையில் மங்கள்யான் சென்றுகொண்டிருக்கிறது. செவ்வாய் பாதையில் மங்கள்யான் புகுந்துள்ள இந்தத் தருணம், இந்திய அறிவியல் புதிய சகாப்தம் படைப்பதற்கான அடையாளம் என்பதில் சந்தேகம் இல்லை.
முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், விக்யான் பிரசார், புதுடெல்லி

Friday, September 26

எந்த தேசத்துக்கும் இளைத்ததல்ல இந்தியா என்ற உண்மையை உரக்கச் சொல்லியிருக்கும் மங்கள்யான் வெற்றியை அனைவரும் கொண்டாடுவோம்! »

Saturday, September 20

ஒரு காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் தமிழகத்திலேயே மிகச் சிறந்த நூலகங்கள் பல இருந்தன. அவை எல்லாமே இன்று அழிந்துவிட்டன. »


Thursday, September 11

பாரதியை இளைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு அவர்களிடம் கொண்டுசெல்லவில்லை என்றால், அவர்கள் பாரதியைக் கிழித்துப் போடுவார்கள் அல்லது கடந்துபோவார்கள். »
காஷ்மீரில் குடியிருப்புப் பகுதிகளில் சூழந்த வெள்ளத்தில் தவிக்கும் மக்கள். | படம்: நிஸார் அகமது
காஷ்மீரில் குடியிருப்புப் பகுதிகளில் சூழந்த வெள்ளத்தில் தவிக்கும் மக்கள். | படம்: நிஸார் அகமது
வெள்ளம் வெகுவாக வடிந்து வருவதால் மீட்புப் பணியில் முன்னேற்றம் இருந்தாலும்,6 லட்சம் மக்கள் உதவியை எதிர்நோக்கி தவித்து வருகின்றனர். »