WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, January 27

கனரா வங்கிக்கடன் நீட்டிப்பு 

BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன் வழங்குவதற்காக 
கனரா வங்கியுடன் 27/01/2014  அன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

01/12/2013 முதல் 31/12/2014 வரை உடன்பாடு அமுலில் இருக்கும்.

தனிநபர் கடன் அதிகபட்சம் 10 லட்சம் வழங்கப்படும்.
தற்போதைய தனிநபர்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.

வீட்டுக்கடன் 75 லட்சம் வரை வழங்கப்படும்.
வட்டி விகிதம் 10.2 சதம் ஆகும்

Saturday, January 25


சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிப்பு!

மனு தாக்கல் :     பெப்ரவரி 19 முதல் 21 வரை.

தகுதியுள்ளவர்கள் அறிவிப்பு: பெப்ரவரி 24

மனு திரும்ப பெற கடைசி நாள்:  பெப்ரவரி 25 முதல் 27 வரை.

போட்டி இருந்தால் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு : பெப்ரவரி 28.

தேர்தல் மார்ச் மாதத்தில் இருக்கும்.

இது தொடர்பாக செய்தி தாள் விளம்பரம் பெப்ரவரி 27 அன்று வெளியிடப்படும்.


தகவல்: அன்பழகன், கடலூர். சென்னை கூட்டுறவு சங்க  பொதுகுழு உறுப்பினர்.

Sunday, January 19

1.1.2014 முதல் IDA உயர்வு : BSNL உத்திரவு


BSNL endorses DPE's orders for increase in IDA w.e.f. 01.01.2014 : 

TOTAL IDA = 85.5%  + 5 = 90.5%W.E.F. 01-01-2014

ORDER NO: 14-1/2012-PAT(BSNL) DATED: 16-01-2014

அஞ்சலி!!!

 
 
 
நமது NFTE-BSNL சங்கத்தின் 
அகில இந்திய பொருளாளர்
தோழர் P.L.துவா
அவர்கள் 17-01-2014 இன்று 
அதிகாலை உடல் நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.

அவருக்கு நமது கொடிதாழ்த்தி... 

நமது நெஞ்சார்ந்த அஞ்சலியை... 

உரித்தாக்குகின்றோம்.

Tuesday, January 14

பொங்கல் வாழ்த்துக்கள் !!!!!.......


பி.எப் வட்டி 8.75% ஆக உயர்வு !!!

 பி.எப்.  தொகைக்கான வட்டி விகிதம், நடப்பு 2013-14ம் ஆண்டிற்கு 8.75 சதவீதமாக உயர்த்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நேற்று முடிவு செய்தது. இதனால், சுமார் 5 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்.எம்பிளாய்ஸ் பிராவிடென்ட் பண்டு ஆர்கனசேஷனில் (இபிஎப்ஓ) நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கும் அந்த தொழிலாளர் பணிபுரியும் நிறுவனம் அவருக்கு செலுத்தும் தொகைக்கும் (வருங்கால வைப்பு நிதி)2011-12ம் ஆண்டில் 8.25 சதவீதமும், 2012-13ல் 8.5 சதவீதமும் வட்டி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பிஎப் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்திற்கும் அதிக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தொழிலாளர் சங்கங்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி பரிசீலனை செய்வதாக அவ்வப்போது மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், பி.எப். அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பிஎப் வட்டி விகிதத்தை உயர்த்துவது, பிஎப் தொகையை நல்ல முறையில் பராமரிப்பது   உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஓராண்டுக்கு பிறகு நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிஎப் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. தற்போதுள்ள 8.5 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு பிறகு இந்த தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் தெரிவித்தார்.

Friday, January 10


ஊழல்களை அம்பலப்படுத்தும் WhistleBlower 

C K .மதிவாணன் அவர்களுக்கு பாதுகாப்பு

 தரவேண்டும் ! 

இரு நல்ல உள்ளங்கள் நீதி மன்றத்தில் 

வலியுறுத்தல் ! 

NFTE-BSNL சங்க அகில இந்திய துணைச் செயலர்  தோழர் சி.கே. மதிவாணன் அவர்கள் தயாநிதி ,மாறன்  சன் டிவிக்கு கள்ளத்தனமாக 323 ISDN இணைப்புகளை வழங்கியதால் BSNL நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை தைரியமாக வெளிக்கொணர்ந்த காரணத்தால் பழி வாங்குதலுக்கு ஆட்படுத்தப்பட்டார். பென்சன் தொகையை வழங்காமல் பழிவாங்கியது,  அவருடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 76 தோழர்களுக்கு FR17A தண்டனை வழங்கி நிர்வாகம் பழிவாங்கியது.     

  அதை கேள்விப்பட்ட இரண்டு டெல்லி வழக்கறிஞர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் தமிழகத்தை சர்ந்த சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் திரு. என்.ராஜாராம் மற்றும் ட்ராபிக் கே.ஆர். ராமசாமி ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அதில் ஊழலை வெளிக்கொணர்ந்த தோழர் சி.கே.எம் மற்றும் அவருக்கு துணையாக செயல்படும் அவரது சகாக்களுக்கு, (Whistleblowers Act) ஊழலை உரத்து கூறுவோர்க்கு  பாதுகாப்பு சட்டப்படி  அரசு பாதுக்காப்பு தர வேண்டும்  என்று வலியுறுத்தி உள்ளனர்.


  சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதில் தருமாறு CBI, தமிழக உள்துறைச் செயலர், DOT, மற்றும் BSNL நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.    

Thursday, January 2

TWO DAYS FAST UNDERTAKEN BY COM C K MATHIVANAN HAS ENDED AFTER AN AGREEMENT REACHED WITH CGM CHENNAI TELEPHONES:
Chennai Telephones Circle Secretary began fast at 9 AM on 30th December 2013 for demanding settlement of SIX important demands. After two Rounds of discussion with Chief General Manager, Senior GM (HR & Admn) an agreement was reached with CGM and a letter signed by the CGM was handedover to the Circle Secretary on the settlement of demands. At about 10 PM on 31st December 2013 Com C.K.Mathivanan after consulting the circle office bearers announced the end of his fast and thereafter Com.R.K,former Secretary NFTE gave the fruit juice to Com CKM and thus twodays his fast for 37 hours came to an end with an agreement.

Leaders of various Unions/Associations extended their support to the agitation particularly Comrades RK, Pattabiraman (TN CS NFTE), P Udayasooriyan (CS AIBSNLOA), S.Lingamurthi (CS FNTO), J Vijayakumar (CS TEPU) and R.Gunasekaran (CS BSNLDEU). Nearly 400 comrades came to the agitation spot and sat all through the two days and supported the agitation. Senior Comrades V.K.Gopalan, K Sabapathy, P Ganapathy and M Munusamy also addressed the meeting which was presided over by Com.M.K.Ramasamy Circle President.

The Main issue of empanelling the reputed hospitals such as BILLROTH, MIOT, M V DIABATICS etc was agreed upon by the Management and within three months the process of empanelment will be completed. The average age of the BSNL employees being 50 years now, there is an urgent need for a very effective medical scheme and reputed hospitals as empanelled hospitals for BSNLMRS. In Tamil Nadu Circle & STR, STP Telecom Circles number of reputed hospitals in Chennai are in the empanelled list. However, these hospitals are not finding a place in the empanelled list of hospitals for Chennai Telephones. This discrimination has to be removed immediately and NFTE Circle union has taken this issue with all sincerity. The Management although recognised more than 70 hospitals in Chennai majority of these hospitals are under payment fecility. The Circle union demanded the inclusion of reputed hospitals in the empanelled list so that our employees not require to pay for their medical treatment in these reputed hospitas and claim reimbursement later..

WE hope the management will implement this agreement within THREE MONTHS so that our employees are not facing acute financial difficulties and financial loss for taking Medical treatment under BSNLMRS.

C,K MATHIVANAN CIRCLE SECRETARY
-NFTE BSNL CHENNAI TELEPHONES