WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, February 20

தோழர் ஜெகன் தலைமையில் 06-09-1989அன்று எனது திருமண விழாவில் தோழமை கலந்த பாசத்தோடு எங்களை வாழ்த்தியது இன்றும் நினைவில் நிழலாடுகிறது ...எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை சமர்பிக்கிறோம் ....!!!!!!!

Sunday, February 14

திவாலாகிப்போன BSNLEUவின் நிலைபாடுகள் !


BSNLEU  சங்கத்தின் தமி ழ் மாநில சங்க கிளையும் சென்னை தொலைபேசி மாநில சங்க கிளையும் 7 வது அங்கீகாரத் தேர்தலுக்கான முதல் நிகழ்வை  அரங்கேற்றியுள்ளன. 
ஆம் !  தமிழக BSNL ஊழியர்களின் கூட்டுறவு சொஸைட்டியை எதிர்த்து 
தனித் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே கூட்டுறவு சங்கம்  BSNLEU சங்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அமலில் இருந்த வட்டி விகிதம் 16.5 %
தற்போது நமது சங்க கூட்டணியின் ஆதரவோடு  செயல்படும்போது,
அதைவிட 0.5 சதம் குறைவாக 16 சத வட்டிதான் அமலில் உள்ளது.
இருந்தாலும் BSNLEU சங்கத்தினர்  வட்டியை குறைக்க கோரி  ஆர்ப்பாட்ட நாடகம் நடத்தியுள்ளனர்.
BSNLEU  சங்க  கட்டுப்பாட்டில்  இருந்தபோது வசூலிக்கப்பட்ட  16.5 சத வட்டியை  குறைக்க நாம் வலியுறுத்தியபோது, அது சாத்தியமில்லை 
என்று உறுதியாக கூறியதோடு,  அதை  பல காரணங்களைக் கூறி நியாயப்படுத்தியதையும் ஊழியர்கள் மறந்துவிட மாட்டார்கள்.
2004லிருந்து 12 ஆண்டுகள் தொடர்ந்து அங்கீகாரத்தில் இருக்கிறது  BSNLEU சங்கம்.
 இந்த 12 ஆண்டுகளில் BSNLEU சங்கம்  ஊழியர்களுக்கு கொடுத்த 
எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.அதற்கு மாறாக 
கடந்த காலங்களில் நமது சங்கம் போராடிப் பெற்ற பல உரிமைகளயும் சலுகைகளையும் நிர்வாகத்திடம் சரண்டர் செய்தனர் என்பதே உண்மை..   
அதில் ஊழியர்களின் கண்ணை உறுத்தும் சில உதாரணங்கள் :

1. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக போனஸ் இழப்பு 
2. பதவி உயர்வில் SC/ST ஊழியர்க்கு இட ஒதுக்கீடு ரத்து 
3. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் என்பது
  10 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று ஆனது.
4. அபிமன்யூவின் அர்த்தமற்ற எதிர்ப்பு காரணமாக LTC செல்லும்போது
     ELஐ பணமாக பெறும் வசதி ரத்து ஆனது.  
5. நமது சங்கம் பெற்ற சகல வசதிகளுடன் கூடிய மருத்துவ திட்டம்    
   சின்னாபின்னமானதோடு , மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்ட
  வெளிப்புற சிகிச்சைக்கான மெடிக்கல் அலவன்ஸ்  ரத்து  ஆனது.
 தங்களது செயல்பாட்டின்மையை குற்ற உணர்வோடு பரிசீலிக்காமல் ,
 16 ஆண்டுகள் ஓடிய பிறகும், இதற்கெல்லாம் கார்ப்பரேஷன் ஆனதுதான் காரணம் என்று  தோழர் குப்தா அவர்கள் இறந்த பின்னும் அவர் மீது வீண்பழி சுமத்துவது ஒன்றே அவர்களது  ஒற்றை வரி பதிலாக உள்ளது .  
பொய்யான வாக்குறுதி அளித்து ஊழியர்களை தொடர்ந்து ஏமாற்றி வருவது ஒன்றே அவர்களது சாதனையாக உள்ளது.
அவர்கள்  நிறைவேற்றாத ஒரு சில வாக்குறுதிகள் ..... 
1.அனைத்து ஊழியர்களுக்கும் 5 கட்ட பதவி உயர்வு 
2. அனைத்து நிர்வாக அலுவலகங்களிலும் 5 நாள் வேலை திட்டம்
3. பரிட்சை இல்லாமல்  பதவி உயர்வு.  அனைத்து T.Mech  ஊழியர்களுக்கும்  
     சீனியாரிட்டி அடிப்படையில் TTA பதவி உயர்வு . 
4.குறைந்த பட்ச போனஸ் ரூ.10,000/-
5.MTNL ஊழியர்க்கு இணையான ஊதியம்
இந்த முறையும் அதுபோன்ற பொய்யான வாக்குறுதிகள் வழங்கி ஊழியர்களை ஏமாற்ற முடியாது.  
ஊழியர்கள் விழித்துக் கொண்டு விட்டதால், கடந்த ஐந்து முறை பொய்யான வாக்குறுதிகளை நம்பியதைப்போல இம்முறை ஏமாற 
மாட்டோம் என்ற உறுதியுடன் உள்ளனர்.
அச்சங்கத்துடன் கடந்த காலங்களில் கூட்டணி வைத்தவர்கள்கூட இம்முறை அவர்களுடன் கூட்டணி அமைக்க   தயக்கம் காட்டுகின்றனர்.  
கடந்த 12 ஆண்டுகளில் எந்த உருப்படியான சாதனையையும் செய்ததாக அவர்களால் நெஞ்சு நிமிர்த்தி கூற முடியாததால்தான், BSNLவளர்ச்சியில் அதீத அக்கறை உள்ளபவர்கள் போல காட்டிக் கொள்கின்றனர். 
BSNLEU சங்கத்தினரின் தொடர்ந்த எதிர்மறைப் பிரச்சாரம் ஊழியர்களிடையே 
சலிப்பை ஏற்டுத்தியுள்ளது.
BSNLEU சங்கத்தின் துரோகத்திற்கும் செயல்பாடின்மைக்கும் பாடம் புகட்ட  ஊழியர்கள்  தயாராகி விட்டனர்.
அந்த நல்ல முடிவு எடுத்துள்ள அனைத்து  ஊழியர்களை அணி திரட்டுவோம் !

ஒரு மகத்தான  வெற்றி மே 12 அன்று நமக்கு காத்திருக்கிறது.

Tuesday, February 2



7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் அறிவிப்பை BSNL நிர்வாகம் 01/02/2016 அன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 26/04/2016 அன்று தேர்தல் நடைபெறும்  என்று சொல்லப்பட்டு தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

01/02/2016 தேதி அறிவிப்பின்படி...

  • தேர்தல் நாள் : 10/05/2016
  • முடிவு அறிவிக்கும் நாள் : 12/05/2016
  • சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.
  • வாக்காளர் பட்டியல் 01/03/2016க்குள் இறுதி செய்யப்பட வேண்டும்.
  • 30/04/2016 வரை பணி ஓய்வு பெறுவோருக்கு  வாக்காளர்  பட்டியலில்இடமில்லை.
  • தேர்தல் அறிவிப்பு செய்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்களுக்கு இலாக்கா மாற்றல் இடக்கூடாது.