WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, August 22

அநீதி களைய.. 
மாநிலச்செயலர் அறப்போர்.. 
  • மதுரை மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்யூர் முடித்த 3 TM களுக்கு மாற்றல் தர இழுத்தடிக்கும்  மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • மாற்றுச் சங்கத்திற்கு சாதகமாக தினம் ஒரு கொள்கையை உருவாக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பின்பு இரவு 10மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்ட 2 TMகளின் மாற்றல் உத்தரவை மறுநாள் மறுக்கும்  மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் 
  • மாற்றல் கொள்கை பற்றி  கருத்துக் கேட்பு கூட்டம் என்று சொல்லி அனைத்துச் சங்கங்களையும் அழைத்து கருத்து திணிப்பு கூட்டம் நடத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • பிரச்னையைத் தீர்ப்பதிற்குப் பதில் NFTE சங்கத்தை பழிவாங்க நினைக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • கார்ப்பரேட் உத்தரவு, மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல் எதையும் மதியாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • மாநிலச் செயலரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி 28/08/2014 முதல் 

காலவரையற்ற  உண்ணாவிரதம் 

......மதுரை SSA, NFTE-BSNL இணைய தளத்திலிருந்து.....

Thursday, August 14


அகில இந்திய மாநாடு 

நமது சங்கத்தின் அகில இந்திய மாநாடு, 
2014 - அக்டோபர் 10 முதல் 12 வரை மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் நடைபெற உள்ளது என்று முறையான அறிவிப்பை நமது அகில இந்திய சங்கத் தலைமை வெளியிட்டு  ள்ளது. 

       சார்பாளர்கள் தங்களது பயணத்திற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம்.  

Notice for All India Conference. Letter No.-TF-1/2/AIC, Dated:-06-08-2014. 

Wednesday, August 13

 


மத்திய மாநில அரசுகளை எதிர்த்து, இந்தியக் கம்யூனிஸ்டுகள் போராட்டம்


Share on facebook
Share on twitterMore Sharing Service
s
மத்திய மாநில அரசுகளை எதிர்த்து, இந்தியக் கம்யூனிஸ்டுகள் போராட்டம்
மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போராட்டங்களை நடத்தப்போபவதாக அறிவித்துள்ளன.

தற்போதைய நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசு முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பின்பற்றிய அதே தாராளமயக் கொள்கையைப் பின்பற்றுவதை எதிர்த்தும், அதே போன்ற கொள்கைகளையே தமிழக அரசும் பின்பற்றி வருவதை எதிர்த்தும் தமிழ்நாடு முழுவதும் கிராமங்களிலும் நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான குழுக்களின் மூலம் மக்களைப் பெருமளவில் சந்தித்து விளக்கப்போவதாக சிபிஐ - சிபிஎம் கட்சிகள் அறிவித்துள்ளன.
 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணனும் இன்று கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, மத்திய - மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நடத்தும் போராட்டம் குறித்த அறிவிப்பை இவர்கள் வெளியிட்டனர்.
 
போராட்டத் தேதிகள்
 
ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழுக்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் மக்களைச் சந்தித்து, மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்போவதாக இவர்கள் அறிவித்தனர்.
 
இது தவிர, செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று, தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துவதாகவும் இந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன. சென்னையில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஜி. ராமகிருஷ்ணன், தா. பாண்டியன் ஆகிய இருவரும் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றமில்லை என்றும் குற்றம் சாட்டினார். பெண்கள், குழந்தைகள், தலித்துகள் மீதான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
 
அழைப்பு
 
தமிழகத்தில் ஆளும் கட்சி வலுவானதாக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாதது ஏன் என கேட்டபோது, பதிலளித்த தா. பாண்டியன், கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே இணைந்து செயல்பட முடியுமென்றும், தங்கள் கொள்கைகளை ஏற்பவர்கள் தங்களுடன் சேர்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
 
சி.பி.ஐ. -சி.பிஎம். கட்சிகள் தொடர்ந்து இணைந்து செயல்பட்டுவருவதாகவும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது என்றும் இந்தத் தலைவர்கள் தெரிவித்தனர்.

Monday, August 11

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு


பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) செலவினத்தைக் குறைக்கும் வகையில், அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு சேவைக்குரிய நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துப்பூர்வ பதில் வருமாறு:
இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல்லுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,206.65 கோடி அளவுக்கு நிலுவைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில், ரூ.1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சில முறையீடுகளை செய்துள்ளன.
நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன் சேவைக்கு வேகமாக மாறி வருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது.
பிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக, அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,411 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தவும், அதன் ஊழியர் செலவினத்தைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியாக புனரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கான செலவினம் குறையும். இந்தத் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்த பிறகு, பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

 நிரூபித்தது காஞ்சி

வெறும் சங்க அங்கீகார தேர்தலில் தாம் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எந்த கொள்கைகளோ கோட்பாடுகளோ இல்லாமல் NFTE 
சங்கத்தை கூறு போட்டு விட்டதாக மாய தோற்றத்தில் குளிர் காய்ந்த BSNLEU சங்கம் இன்று இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இனியாவது பாடம் கற்க வேண்டும்.    NFTE சங்கத்தை உடைத்துவிட்டோம் என்று பெருமிதம் அடைந்த BSNLEU சங்கம் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்.   BSNL தொழிலாளர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்றால் இதில் கிடைக்கும் பாடம் நிச்சயம் பயனளிக்கும்.


08.08.14 அன்று காஞ்சி மாவட்டத்தின் சார்பாக முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. NFTBE சங்கத்திலிருந்து முழுமையாக விலகி தாய்சங்கமாம் NFTE ல் தோழர். ராம்பிரபு  மற்றும் தோழர். பஞ்சாட்சரம் தலைமையில் இணைந்தனர்.


விழாவில் நமது மாநில செயலர். தோழர். C.K.மதிவாணன் மூத்த தோழர்.ஆர்.கே. மற்றும் கூட்டுறவுசங்க தலைவர்.வீரராகவன் ஆகியோர் 
சிறப்புரையாற்றினர்.

காஞ்சிமாவட்டத்தை நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறோம்.

NFTE சென்னை வடக்கு மாவட்டம்.

Wednesday, August 6

CONGRATULATIONS!:

 We are happy to know that the Govt Telecom Employees Co-Operative Society at Chennai has been selected as the “ Best Managed” Co-Operative society by the Govt of India. We also understand that the said society has been chosen for the “ Indo- Nepal Friendship award” and Com. S.Veeraraghavan will receive the award in person at Katmandu, the capital of Nepal in a function on 02/08/2014. NFTE_BSNL congratulate President and his team for this achievement.

சொத்து


நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள நிலத்தின் அளவு 48,52,02,459 சதுர அடிகள். 11,128.497 ஏக்கர்.

நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள கட்டிடங்களின் அளவு 13,15,36,259 சதுர அடிகள். 301.6802 ஏக்கர்.
            -நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த தகவல்

Tuesday, August 5

DE  URBAN BRANCH...புதுச்சேரி 

தோழர்களே ,தோழியர்களே ...

தர்மத்தின் வாழ்வதனை சூது கவும் ...
இறுதியில் தர்மமே வெல்லும் ... 

பல ஒற்றுமை முயற்சிக்கு முயன்றும் விடா பிடியாக  தான் நினைப்பதை மட்டும் செய்யவேண்டும் என்கிற அகந்தையை....தோழர்கள் உணர்ந்ததால் ,

02-08-2014அன்று நடைபெற்ற கிளை மாநாட்டின் நிர்வாகிகள் தேர்வில் ,தோழர் மாலி வகுத்த 9-6 நியதின்  படி.

 செயலர் பதவிக்கு  04-08-2014அன்று  போட்டி நடைபெற்றது ,

 நமது தோழர்  M கிருஷ்ணன்  வெற்றி பெற்றார் .
     
மேலும் ஒன்று பட்ட புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு     செய்யப்பட்டனர்

NFTCL SPREADS WINGS IN MAHARASTRA:

  On 03/08/2014 the District Committee of NFTCL will be formed at the convention for both Bheed and Jalgon Districts.As we all know already many District committee of NFTCL formed throughout the country including Aurangabad(Maharastra), South Cennai( Tamil Nadu), Cuddalore(Tamil Nadu). Pathanamthitta(Kerala) and Trichur etc.

 A SPECIAL MEETING OF TELECOM 

 

CONTRACT LABOURS ON 21/08/2014 AT CHENNAI:

  A special meeting of Telecom contract labours under the banner of NFTCL will be held at 02.00 PM in Chennai on 21/08/2014. In this meeting National Co- Ordinator, Tamil Nadu, State Secretary of NFTECL will participate and address the Telecom contract labours about the demands and struggles for achieving them.