நிரூபித்தது காஞ்சி
வெறும் சங்க அங்கீகார தேர்தலில் தாம் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எந்த கொள்கைகளோ கோட்பாடுகளோ இல்லாமல் NFTE
சங்கத்தை கூறு போட்டு விட்டதாக மாய தோற்றத்தில் குளிர் காய்ந்த BSNLEU சங்கம் இன்று இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இனியாவது பாடம் கற்க வேண்டும். NFTE சங்கத்தை உடைத்துவிட்டோம் என்று பெருமிதம் அடைந்த BSNLEU சங்கம் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும். BSNL தொழிலாளர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்றால் இதில் கிடைக்கும் பாடம் நிச்சயம் பயனளிக்கும்.
08.08.14 அன்று காஞ்சி மாவட்டத்தின் சார்பாக முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. NFTBE சங்கத்திலிருந்து முழுமையாக விலகி தாய்சங்கமாம் NFTE ல் தோழர். ராம்பிரபு மற்றும் தோழர். பஞ்சாட்சரம் தலைமையில் இணைந்தனர்.
விழாவில் நமது மாநில செயலர். தோழர். C.K.மதிவாணன் மூத்த தோழர்.ஆர்.கே. மற்றும் கூட்டுறவுசங்க தலைவர்.வீரராகவன் ஆகியோர்
சிறப்புரையாற்றினர்.
காஞ்சிமாவட்டத்தை நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறோம்.
NFTE சென்னை வடக்கு மாவட்டம்.
No comments:
Post a Comment