WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, March 27

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு!!

 

இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தீர்மான குறித்து இந்தியா தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் அரசு அதிகாரி தயன் ஜெயதிலகே, 2009ல் விடுதலை புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபின் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு தவறியதால் சர்வதேச நாடுகள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

Wednesday, March 26

  • செய்தி துளிகள்! .
  • TTA ஆளெடுப்பு விதி TTA RECRUITMENT RULES நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்குப்பின்னர் BSNL  BOARD ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

  • ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • டிசம்பர் 2012ல்  JAO தேர்வெழுதி தோல்வியுற்ற பொதுப்பிரிவு OC தோழர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க இயலாது என BSNL நிர்வாகம் கைவிரித்துள்ளது. ஆயினும் புதிய  பாடத்திட்டத்தின் அடிப்படையில் விரைவில் JAO தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
====================================
 CHQ NEWS
  • Guide lines for constitution of Local councils at circle HQR and SSA levels. F. No.-BSNL/1-1/SR/2014, dt-20-03-2014. 
  • Corporate office released final welfare grant to circles for the year 2013-14. Letter No.-13-3/2013-14-BSNL-(WL)/221, Dated:-20-03-2014.
  • BSNL declared 2014-15 as devote year on “Improved Quality of Mobile services”. D.O. from Director(CM). Letter No.-MOB-14/Trai Report/2014, Dated:- 19-03-2014.
  •  
  • JCM மாநில மற்றும் மாவட்ட குழுக்கள் அமைக்கும் போது அந்தந்த மாநில,  மாவட்டம் சார்ந்த உறுப்பினர்களை வைத்து தான் அமைக்க வேண்டும் என BSNL நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது,
  •  2013-14ம் ஆண்டிற்கான இறுதிக்கட்ட சேமநல நிதி ஒதுக்கீடு FINAL WELFARE GRANT இன்று 20/03/2014 அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம்  ரூ.3,95,46,000/= நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
    இதில் தமிழகத்திற்கு 37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    2014-2015 ஆண்டை "செல்பேசி சேவை மேம்பாட்டு ஆண்டாக" (“Improved Quality of Mobile services”) BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tuesday, March 25






கடலூரில்  முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தலைவர்கல் சி.கே.மதிவாணன், மாலி, கடலூர் செயராமன்,கோவை சுப்புராயன், பாண்டியின் அசோக்ராஜ், முதுபெரும் தலைவர் கடலூர் ரகு, கம்யூனிச இயக்கத்தின் தலைவர் அப்பாதுரை மற்றும் தொழிற்சங்க முன்னோடிகள் பங்கேற்றனர். விழா நடந்த கடலூர் தொலைபேசி நிலைய வளாகள் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களால் நிரம்பி வழிந்தது. அவ்விழாவில் சில காட்சிகள் உங்களுக்காக....

பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக அதிமுக எங்களை கை கழுவிவிட்டது: ஆர். நல்லகண்ணு



தமிழக முதல்வரின் நடவடிக்கையை பார்க்கும்போது, எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே எங்களைவிட்டு அதிமுக பிரிந்திருப்பதாகத் தெரிகிறது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு கூறினார்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இதுவரையில்லாத திருப்புமுனையாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்தியப் பொருளாதாரத்தை அந்நிய முதலாளிகளுக்கு அடகுவைத்த காங்கிரஸ் கட்சியையும், மதவெறி  பாஜகவையும் எதிர்த்து இடதுசாரிகள் இணைந்து களம் இறங்கியுள்ளன.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் இந்திய அளவில் 14 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி உருவானது. இதில் அதிமுகவும் பங்கேற்றது. மேலும், தேர்தலின்போது கம்யூனிஸ்டுகளுக்கு இடம் ஒதுக்குவதாகவும் அதிமுக அறிவித்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதிமுகவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் பேச்சையும், நடவடிக்கையையும் பார்க்கும்போது எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே எங்களை கூட்டணியில் இருந்து விலக்கிவிட்டதுபோலத் தோன்றுகிறது. மோடி தலைமையில் ஏற்படும் பாஜக ஆட்சிதான் இந்தியாவுக்கே விமோசனம் அளிக்கும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இது ஆபத்தான நிலை. ஆகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜனநாயக அடிப்படையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இணைந்துள்ளன. தமிழகத்தில் இடதுசாரிகள் போட்டியிடும் 18 இடங்களைத் தவிர்த்து, பிற இடங்களில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார் அவர்.

Saturday, March 22

இந்தியாவெங்கும் உள்ள தொலைத் தொடர்பு ஊழியர்களை ஒன்று திரட்டி, போராட்ட உணர்வை ஊட்டி, உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக விஸ்வரூபம் எடுக்க உள்ள அமைப்பான NFTCLன் கொடி

web site: nftcltn.blogspot.in

Felicitation to newly elected state office bearers of NFTCL:

There will be felicitation function for the newly elected state office bearers of NFTECL at Cuddalore on 24/03/2014 evening. All are requested to mobilize the contract labours for this function in which Com. Mali of Erode who is the working president of state body will introduce the flag of NFTCL and the flag hoisting will be done by Com. M. Appadurai Ex MP and state vice president of AITUC. Com C.K.Mathivanan Dy GS and Com. G.Jayaraman, Secretary(CHQ) will address.

Thursday, March 20



இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செய்தியாளர்களைச் சந்தித்த தா. பாண்டியன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.அதன் விவரம்:
தென்காசி (தனி) - பொ. லிங்கம், நாகப்பட்டினம் (தனி) - கோ. பழனிச்சாமி, திருப்பூர் - கே. சுப்பராயன், தூத்துக்குடி - அ. மோகன்ராஜ், கடலூர் - கு. பாலசுப்ரமணியன், சிவகங்கை - எஸ்.கிருஷ்ணன், ராமநாதபுரம் - ஆர்.டி. உமாமகேஸ்வரி, திருவள்ளூர் (தனி) - ஏ.எஸ். கண்ணன், புதுச்சேரி - ஆர். விஸ்வநாதன்.
தென்காசி (தனி) தொகுதியில் தற்போதைய எம்.பி.யான பொ. லிங்கத்துக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடலூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கு. பாலசுப்ரமணியன், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில துணைச் செயலாளருமான கோ. பழனிச்சாமி, திருப்பூரில் முன்னாள் எம்.பி.யும், மாநில செயற்குழு உறுப்பினருமான கே.சுப்பராயன், புதுச்சேரியில் அம்மாநிலச் செயலாளர் ஆர். விஸ்வநாதன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தா. பாண்டியன், வரும் 24-ஆம் தேதி பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிரதமர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்த மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

Wednesday, March 19

இஸ்ரத் ஜஹான் என்கவுன்டர் விவகாரம்: குஜராத் மாஜி அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு!!!

குஜராத்தில் நடந்த இஸ்ரத் ஜஹான் ரசா என்கவுன்டர்  வழக்கில், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக முக்கிய சி.டி. ஆதாரம்  கிடைத்ததால், அவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.  குஜராத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட என்கவுன்டரில்  மும்பையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் இஸ்ரத் ஜஹான் ரசா மற்றும்  3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர் அமைப்புடன்  தொடர்புடைய தீவிரவாதிகள் எனவும், குஜராத் முதல்வர் நரேந்திர  மோடியை கொலை செய்ய திட்டிமிட்டிருந்தவர்கள் எனவும்  தெரிவிக்கப்பட்டது. இஸ்ரத் ஜஹான் ரசா அப்பாவி என்றும், அவரை  போலி என்கவுன்டரில் குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் குற்றம்  சாட்டப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி  குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011ம் ஆண்டு அறிக்கை தாக்கல்  செய்தது.

அதில் என்கவுன்டர் உண்மையானது அல்ல எனவும், என்கவுன்டர் நடந்த  தேதிக்கு முன்பே, 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர் எனவும்  தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள், குஜராத்  அமைச்சர்கள் ஒன்று கூடி, இந்த வழக்கை திசை திருப்பது குறித்து  விவாதித்துள்ளனர். சுமார் 70 நிமிடங்கள் இவர்கள் ஆலோசனை நடத்திய  ஆடியோ சி.டி ஆதாரம் சிபிஐக்கு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்  குஜராத் முன்னாள் அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.  இவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.  மக்களவை தேர்தல் அடுத்தமாதம் நடக்கவுள்ள நிலையில் நரேந்திர  மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் மீது சிபிஐ  வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால், மோடிக்கு அரசியல் ரீதியாக  நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Tuesday, March 18


அவதூறு பரப்பாளர்கள்  தோல்வி தழுவுவர்  !
      

சென்ற ஆண்டு நடந்த  சங்கத் தேர்தலின்போது அவதூறு நாயகர்களான BSNLEU சங்கத்தார் தோழர் C.K.மதிவாணன் அவர்களைப் பற்றி ஒரு அவதூறைப்  பரப்பி ஆதாயம் பெற முயற்சித்தனர்.  தேர்தல் முடிந்தவுடன் அது புஸ்வானமானது ! 

 தற்போது அதே அவதூறு பரப்பாளர்கள், வேலூர் BSNLEU வெப் சைட்டில் ஒரு அவதூறை பரப்பி டிஜிட்டல் பேனர் வெளியிட்டுள்ளனர்.

அதில் தோழர் மதிவாணன் மற்றும் தோழர் வீரராகவன் ஆகியோர் 1300 கோடி ரூபாய் மெகா ஊழல் நடத்த திட்டமிட்டு இருப்பதை தடுக்க BSNLEUவுக்கு வாக்களிக்க வேண்டுமாம் !

  நமது கேள்வியெல்லாம், தோழர் வீரராகவனை தலைவராக முன் மொழிந்து தேர்ந்தெடுத்து நான்கு ஆண்டுகள் அவரை நல்லவர், வல்லவர் என்று புகழ்ந்தது யார் ?  BSNLEU சங்கத்தினர் தானே ?


 இவர்களின் கட்சிக் கட்டளையை ஏற்று இயக்குநர் குழு கூட்டத்தில், ஜனநாயகத்திற்கு விரோதமாக டைரக்டர் என்ற முறையில் ஒரு ஓட்டும், தலைவர் என்ற முறையில் இன்னொரு ஓட்டும் போட்டு மைனாரிட்டியை மெஜாரிட்டி ஆக்க ஒத்துழைக்காத காரணத்தால் தானே இன்று வேறு மாதிரி பேசுகின்றனர் ?

  நான்கு வருடங்களாக இவர்களின் முழுக் கட்டுப்பாட்டில் தானே சொஸைட்டி இருந்தது ? 

இந்த காலத்தில் ஏன் இவர்களால்  நிலத்தை பிரித்து கொடுக்க முடியவில்லை ?  

நிலத்தை சைட்டாக பிரிக்க CMDA வின் அனுமதியை ஏன் பெற முடியவில்லை ? 

நிலத்தை  விற்று அதில் வரும் லாபத்தில் 40000 ரூபாயை ஊழியர்க்கு இனாமாக வழங்க முடியவில்லை ?

 700 உறுப்பினர்களுக்கு நிலத்தை  பிரித்து கொடுப்பது அதிகமான உறுப்பினர்களுக்கு பலன் தருமா ?

  ஆயிரக்கணக்கான  அடுக்கு மாடி கட்டுவதால் அதிகமான உறுப்பினர்களுக்கு பலன் தருமா ?

 சொஸைட்டி விதிகளின்படி டிவிடெண்ட் தவிர வேறு வகைகளில் உறுப்பினர்களுக்கு பணமாக 
 தர முடியாது  என்பது இவர்களுக்கு தெரியாதா ? இல்லை தெரிந்தும் நடிக்கிறார்களா ?


அடுக்கு மாடி கட்டும் பணி வெளிப்படையாக நடக்கும், அனைத்து சங்க மாநிலச் செயலர்களும் கொண்ட கண்காணிப்பு குழு அதனை மேற்பார்வை இடலாம் என்று கூறிய பின்னும் அவதூறு பரப்புவது உள்நோக்கம் கொண்ட கண்டிக்கத்தக்க செயலாகும்

    2G ஊழலை, தயாநிதி மாறனின்  323 ISDN முறைகேட்டை   எதிர்த்து சமரசமின்றி போராடிய 
Whistle Blower தோழர் மதிவாணன் அவர்களைப் பற்றி, 2G ஊழலுக்கு ஒத்து ஊதிய BSNLEUவின் இந்த அவதூறு பிரச்சாரம்   சென்னை மற்றும் தமிழக  BSNL ஊழியர்களிடம் எடுபடாது. 

    NFTE கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

        BSNLEUவின் கூட்டணி மோசமான தோல்வியைத் தழுவும் என்பது உறுதி.                     

Monday, March 17

2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியிலும் மாற்றலாம் ரிசர்வ் வங்கி விளக்கம்!!!





வங்கிகளுக்கு அறிவுரை........

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வங்கிகள்  அவற்றை கவுன்டர்கள் மூலமாகவோ, ஏடிஎம்கள் மூலமாகவோ திரும்பவும்  புழக்கத்தில் விட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.  இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் விளக்கங்கள்........

2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை 2015 ஜனவரி 1ம்  தேதி வரை மக்கள் எந்த தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம். எத்தனை  ரூபாய் நோட்டுக்களை வேண்டுமானாலும் மாற்றலாம். எண்ணிக்கையில்  கட்டுப்பாடு இல்லை. ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில்  வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றுபவர் வங்கியில்  கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.  2005க்கு முந்தைய நோட்டுக்களுக்கு பதில் வேறு நோட்டுக்களை  வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. விருப்பப்பட்டால்,  ஒருவரது கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம். பணத்தை  மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Friday, March 14

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து 18 தொகுதிகளில் (தலா 9 தொகுதிகள்) போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருப்பூர், சிவகங்கை, புதுவை, கடலுர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, வட சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. மார்ச் 16-ந் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மார்க்சிஸ்ட் செயலாளர் தெரிவித்தார்.

இதேபோல் 17-ந்தேதி தங்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் அறிவித்தார். இந்த 18 தொகுதிகள் தவிர பிற தொகுதிகளில் பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், யாரை ஆதரிப்பது? என்பதை பின்னர் அறிவிப்பதாகவும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Wednesday, March 12

Meeting of all Unions and Associations of the Non-Executives of BSNL, held at New Delhi. A meeting of all the unions and associations of the Non-Executives of BSNL was held at New Delhi, yesterday the 11-03-2014. The meeting was held in the office of BSNL MS and was attended by the general secretaries of BSNLEU, NFTE BSNL, FNTO, BTEU BSNL, SNATTA, NFTBE and BTU BSNL. It was also attended by com.V.A.N.Namboodiri, President, BSNLEU and representatives of BSNL MS, TEPU, BSNL ATM and ITEF. Com. Chandeswar Singh, GS, NFTE BSNL presided over the meeting. Com.P.Abhimanyu, GS, BSNLEU, welcomed every one and explained about the purpose of the meeting. Thereafter, a detailed discussion took place on the pending burning issues of the Non-Executives as well about the indifferent and insensitive attitude of the BSNL Management, towards the settlement of them. The issues that are to be taken up with the Management were identified. It was decided to immediately submit a memorandum on the pending issues to the Management and also to go on struggle, demanding settlement. It was decided that the struggle will take place after the forthcoming elections to the parliament. However, in view of the urgency of the issues, it was decided to conduct a dharna by the General Secretaries in the Corporate Office, in this month itself.
                                                          chq...... 
Joint Action Committee (JAC) of the Unions and Associations of the Non-Executives of BSNL formed. With a view to conduct sustained struggles for the settlement of the important and burning problems of the Non-Executives, it was decided to form a platform of the Unions and Associations of the Non-Executives of BSNL. Accordingly the Joint Action Committee of the Unions and Associations of the Non-Executives of BSNL was formed in yesterday's meeting. The following comrades are unanimously elected as the office bearers of the JAC. 

President: Com.Chandeswar Singh, GS, NFTE BSNL
Convener: Com.P.Abhimanyu, GS, BSNLEU
Joint Convener: Com.Jayaprakash, GS, FNTO
Joint Convener: Com.Pawan Meena, GS, SNATTA
Treasurer: Com.R.C.Pandey, GS, BTEU BSNL
All the General Secretaries of the affiliated Unions and Associations will be the members of the JAC.

                                                     chq...... 

Tuesday, March 11

  சென்னை கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல்...!

              நடைபெறும் தேதிகள் அறிவிப்பு...!


தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

தேர்தல் நாள்
இடம்
மார்ச் 27
சேலம், வேலூர், தர்மபுரி, தஞ்சாவூர், கும்பகோணம்.
ஏப்ரல் 1
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில், காரைக்குடி.
ஏப்ரல் 3
சென்னை அனைத்து இடங்களுக்கும்
ஏப்ரல் 10
CGMT, STR, Project
ஏப்ரல் 15
Civil, கோலார், மைசூர்
ஏப்ரல் 17
கோயம்புத்தூர், ஈரோடு
ஏப்ரல் 21
கடலூர், புதுச்சேரி, திருச்சி.
ஏப்ரல் 24
பெங்களூர்

Saturday, March 8

மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் ...!!


மகளிர் சமுதாயத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும் "உலக மகளிர் நாள் விழா" 8-.3.-2014 அன்று நம்நாடு உட்பட உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டின் மார்ச்த் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, "உலக மகளிர் நாள்" என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை உறுதியோடு எதிர்கொண்டு அவற்றை வெற்றிப் படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட உறுதியேற்போம்......!

Monday, March 3

62! - முடிவு இல்லை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் பஞ்சப்படி உயர்வு
  • EPFO  திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் ஆயிரம்
  • ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி


இவையே 28.02.2014 அன்று 2014 தேர்தலுக்கு முன் கூடிய கடைசி மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட ஓய்வு வயது 62 என்பது பற்றி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
NFTE-CHENNAI TELEPHONES
BSNL-MTNL  MERGER OUR VIEW POINTS
ஊழியர் சங்கங்களோடு கலந்து பேசாமல் BSNL & MTNL ஆகிய இரு அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் அரசு தன்னிச்சையாக இணைக்கும்  வழிமுறையை நாம் கடுமையாக எதிர்க்கும் அதே வேளையிலே, இத்துறையில் இரண்டு அரசு நிறுவனங்கள் செயல்பட வேண்டியது இல்லை என்பதே நமது ஆழமான கருத்து.

ஆகவே, இது குறித்து நிர்வாகம் சங்கங்களோடு கலந்து பேசும்போது, கவனிக்க வேண்டியகீழ்க்கணட ஆலோசனைகளை முன் வைக்கிறோம் .....

 1. BSNL
மற்றும் MTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கிடையே பென்சன் மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) திட்டங்களில்  பாரபட்சம் கூடாது. ( No discrimination ) 

MTNL
ல் பணியாற்றுவோர்க்கு BSNLல் பணியாற்றும் erstwhile DOT    ஊழியர்க்கு வழங்குவதுபோல, அரசு பென்சன் வழங்க சமீபத்தில் அமைச்சர்கள் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.ஆனால், 1-10-2000 க்கு பிறகு வந்த ஊழியர்க்கு  அரசு பென்சனும் கிடையாது, GPF  திட்டமும் கிடையாது. இணைப்பு வரும்போது இந்த பாரபட்சம்  நீக்கப்பட  வேண்டும்.

 2.
தற்போது MTNLல் பணியாற்றுவோர், BSNLல் பணியாற்றுவோரைவிட அதிகமான சம்பளம் பெறுகின்றனர். இந்த பாரபட்சம் நீக்கப்படவேண்டும்

3.
பங்கு மார்கெட்டில் விற்கப்பட்ட MTNL  பங்குகளை அரசு திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும்.   (Buy back th shares of MTNL). புதிய நிறுவனம் 100% அரசு நிறுவனமாக, ஷேர் மார்கெட்டில் லிஸ்ட் செய்யபடாத (unlisted ) நிறுவனமாக இருக்கவேண்டும்.

4. BSNL & MTNL
ஆகிய இரண்டு நிறுவனங்களும் தொடர்ந்து நஷ்டம் அடைவதால், அரசு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு சிறப்பு பொருளாதார சலுகைகள் வழங்கிட வேண்டும்.  அதன் பிறகே இணைப்பு அமலாக்கப்
பட  வேண்டும் 

5.
இணைப்பை ஏற்றுக் கொள்ளும் முன் மேற்கண்ட பிரச்னைகளைப் 
  பற்றி சங்கங்கள் தீவிரமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண 
வேண்டும்

 
மேற்கண்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்க அரசு முன்வராத பட்சத்தில் 
FORUM தலைமை, MTNL சங்கங்களோடும் கலந்து பேசி வேலைநிறுத்த செய்திட வேண்டும்.

 
சில  விஷயங்களை வெறுமே எதிர்ப்பதால் மட்டுமே பயன் ஏதும் இராது என்பதே நமது ஆழமான கருத்து.நமது கருத்துக்கு ஃபோரம் தலைமை செவிமடுக்கும் என்று நம்புகிறோம் .