இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செய்தியாளர்களைச் சந்தித்த தா. பாண்டியன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.அதன் விவரம்:
தென்காசி (தனி) - பொ. லிங்கம், நாகப்பட்டினம் (தனி) - கோ. பழனிச்சாமி, திருப்பூர் - கே. சுப்பராயன், தூத்துக்குடி - அ. மோகன்ராஜ், கடலூர் - கு. பாலசுப்ரமணியன், சிவகங்கை - எஸ்.கிருஷ்ணன், ராமநாதபுரம் - ஆர்.டி. உமாமகேஸ்வரி, திருவள்ளூர் (தனி) - ஏ.எஸ். கண்ணன், புதுச்சேரி - ஆர். விஸ்வநாதன்.
தென்காசி (தனி) தொகுதியில் தற்போதைய எம்.பி.யான பொ. லிங்கத்துக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடலூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கு. பாலசுப்ரமணியன், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில துணைச் செயலாளருமான கோ. பழனிச்சாமி, திருப்பூரில் முன்னாள் எம்.பி.யும், மாநில செயற்குழு உறுப்பினருமான கே.சுப்பராயன், புதுச்சேரியில் அம்மாநிலச் செயலாளர் ஆர். விஸ்வநாதன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தா. பாண்டியன், வரும் 24-ஆம் தேதி பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிரதமர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்த மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment