வங்கிகளுக்கு அறிவுரை........
2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வங்கிகள் அவற்றை கவுன்டர்கள் மூலமாகவோ, ஏடிஎம்கள் மூலமாகவோ திரும்பவும் புழக்கத்தில் விட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விளக்கங்கள்........
2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை 2015 ஜனவரி 1ம் தேதி வரை மக்கள் எந்த தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம். எத்தனை ரூபாய் நோட்டுக்களை வேண்டுமானாலும் மாற்றலாம். எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றுபவர் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. 2005க்கு முந்தைய நோட்டுக்களுக்கு பதில் வேறு நோட்டுக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. விருப்பப்பட்டால், ஒருவரது கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம். பணத்தை மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.
No comments:
Post a Comment