WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, June 30

அனைத்து தொழிற்சங்க கூட்ட முடிவுகள் !!
26/06/2013 அன்று NFTE அகில இந்தியத்தலைவர்
தோழர். இஸ்லாம் அஹமது தலைமையில்
அனைத்து தொழிற்சங்கக்கூட்டம் நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    உத்தர்கண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட BSNL ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவது..
    தன்னுயிர் பொருட்படுத்தாமல் மக்கள் உயிர் காத்திட்ட இராணுவ வீரர்களுக்கும், BSNL சேவையை சீரமைத்திட உழைத்திட்ட ஊழியர்களுக்கும் கூட்டமைப்பு மிகுந்த பாராட்டுதலை உரித்தாக்குகின்றது.
    பாதிக்கப்பட்ட BSNL ஊழியர்களுக்கு நிர்வாகம் உரிய உதவிகள் செய்திட வேண்டும்.
    BSNL சேவையை சீரமைக்க DOT  உரிய நிதி உதவி அளித்திட வேண்டும்.
    டெல்லியில் 03/08/2013 அன்று அகில இந்தியக் கருத்தரங்கம் சீரிய முறையில் நடத்துவது .


                                                                   செய்தி ,காரைக்குடி வலைத்தளம் .......

Friday, June 28

உயர்கின்றது IDA !

விலைவாசிக்குறியீட்டெண் 228 என்ற அளவிற்கு உயர்ந்ததால்
01/07/2013 முதல் விலைவாசிப்படி (IDA)  4 சதம் உயர்கின்றது.
01/07/2013 அன்று மொத்தப்புள்ளிகள் 78.9 சதம் ஆகும்.
செம்மையாக  செயல்பட தொடர்ந்து குரல் கொடுப்போம்!!

அவையால் ஆய்படுபொருள் ஏற்கப் படாமல் நடத்தப்பட்ட ஒரு செயற்குழு, மாற்று கருத்தை மதிக்காமல் நடந்த ஒரு கூட்டம், மாற்று கருத்து கொண்ட பொறுப்பாளர்களை, தலைவர்களை அவதூறு செய்வதற்கு பெரும்பகுதி நேரத்தை எடுத்துக்கொண்ட ஒரு கூட்டம்,  தற்புகழ்ச்சி, தனக்கு பிடித்தவர்களை அவர்களே நெளியும் அளவிற்கு புகழாரம் செய்வது - இது தான் வேலூர் செயற்குழுவின் சாரம்.
            மாநில மாநாடு முடிவு செய்யாத, அமைப்பு விதிகளுக்கு எதிராக, அணி பார்வையில் தன்னிச்சையாக நுழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் என்ற முறை சரியல்ல. இது பற்றி விவாதிக்க ஆய்படுபொருளில் சேர்க்கவேண்டும் என்று தான் கோரினோம்.   
         ஆனால், ஆய்படுபொருளில் சேர்க்க மாட்டோம் என அடம்பிடித்து விட்டு, உத்தம(?) தலைவர்கள் சேது, ஜெயபால் ஆகியோரை செயற்குழுவில் இருந்து நீக்க கோரினோம் என்கிறார்கள் சிலர்.  (இதே தலைவர்கள் பற்றி இன்று பேசுபவர்களின் முந்தைய பேச்சை நாம் நினைவுபடுத்தினால் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்.)
             பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து கட்டப்பட்டுள்ள, மாநில சங்க கட்டிடத்தில்  மாநில செயலர் தங்குவதில்லை. சங்க அலுவலகமாக அது செயல்படுவதும் இல்லை. ஊழியர்கள் தங்குமிடமாக அது இல்லாமல், சங்க அலுவலகமாக, செயல்பாட்டு தளமாக அதை மாற்ற வேண்டும்.இது பற்றி விவாதிக்க ஆய்படுபொருளில் சேர்க்கவேண்டும் என்று தான் கோரினோம்.
            ஆனால் இதுபற்றி பேச அனுமதி இல்லையாம்
            சின்னம்மாள் என்ற தோழியர், நமது சங்கத்தின் மீது இருந்த நன்மதிப்பால்,  தன்னுடைய உடைமைகளை, ஓய்வூதிய பலன்களை நமது சங்கத்திற்கு எழுதிவைத்தார். அதை நிர்வகிக்க அமைக்கப்பட்ட சின்னம்மாள் அறகட்டளையின் நிலை என்ன? அது என்ன ஆயிற்று என விவாதிக்க ஆய்படுபொருளில் சேர்க்கவேண்டும் என்று தான் கோரினோம்.     
      இதுபற்றி பேச அனுமதி இல்லையாம். (கணக்கு சிலருக்கு பிணக்கு ஆயிற்றே!)
           அடாவடி செய்தோம்! அத்துமீறல் செய்தோம்! ஆர்பரிதோம்! என அவதூறு செய்து எல்லாவற்றையும் மறைக்க பார்கிறார்கள். முறைப்படி விவாதிக்க, அமைப்புவிதிகளின் படி செயற்குழுவை நடத்த வேண்டுகோள் வைத்தோம். தொடர்ந்து வலியுறுத்தியும் ஏற்கபடாததால் வெளிநடப்பு செய்து அவைக்கு வெளியே அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தோம்.
           ஆனால், செயற்குழு உறுப்பினர் இல்லாத நூற்றுக் கணக்கானவர்களை திட்டமிட்டு வரவழைத்து, நியாயம் கேட்டவர்களை சூழ்ந்து, "பேசாதே!", "வெளியே போ!" என கத்தி அநாகரிகமாக நடக்க செய்தவர்கள், அவையின் வெம்மை கண்டு வெளியேறினோம் என ஆனந்த படுகிறார்கள்.
           அமைப்பு விதிகளை மிதித்து, மாற்று கருத்துக்கு மதிப்பளிக்காத, ஜனநாயகம் அற்ற இடத்தில வெறும் உபசரிப்பு மட்டும் இருந்து என்ன பயன்? என்று அங்கு கொடுக்கப்பட்ட உணவை ஏற்க மறுத்தோம்.
          இதனால் பலர் அங்கு உண்ணாவிரதம் இருந்தார்களாம். சுண்டலும் கடலை மிட்டாய் , டீயும் மட்டும் சாப்பிட்டால் அது ஜெகன் வழி உண்ணாவிரதமாம்! (ஜெகன் மன்னிப்பாராக!)
"நிறைவான செயற்குழு, வெற்றிகரமான செற்குழு, அடாவடியும்.. அத்துமீறலும்" தொடரக்கூடாது என ஒலித்த செயற்குழு, (நீண்ட பட்டியலிட்டு) இதையெல்லாம் விவாதித்த செயற்குழு"
        என தனக்கு தானே சொரிந்து கொள்ளாமல், நடந்தவற்றை, நியாயத்தை, ஊழியரின் எதிர்பார்ப்பை நாணய உணர்வுடன் ஆராய்ந்து சரியான வழியில் பயணிக்க வேண்டும் எனபதே  நமது விருப்பம். ரொம்ம்பவும் சொரிந்தால் ரணம் மட்டுமே மிஞ்சும்.
 மதிமயக்கம் எமக்கு இல்லை! எந்த "மதி"யின் மயக்கமும் எமக்கு இல்லை! சிலருக்கு தான் மணி(Money)மயக்கம் நியாயத்தை திரை போட்டு மறைக்கிறது.

கடன் பட்டார் நெஞ்சம் போல அவ்வப்போது

கலங்குகிறது.

            தியாக தலைவர்களின் ஈர்ப்பில் NFTE பேரியக்கத்தில் இணைந்து நியாயத்தின் குரலாக, பல ஆண்டுகளாக அன்பை, எதிர்ப்பை, அவமானத்தை எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துகொண்டு தான் இயங்கிவருகின்றோம். நமது இயக்கம் அதன் தியாக பாதையில், வழி தவறாமல்  செம்மையாக  செயல்பட தொடர்ந்து குரல் கொடுப்போம்!

     
                     திருச்சி மாவட்ட வலைதளத்திலிருந்து..........
சங்கத் தலைவனுக்கு விழா எடுக்க
சங்கமித்தோர் ஆயிரம்
மன்றத்திலே (ராஜா அண்ணாமலை) மணிவிழா எடுக்க
அலைகடலென ஆர்ப்பரித்த அனைவரின் வரவால்
ஆனந்தம் பொங்கியது அனைவரின் உள்ளத்தில்
பணிநிறைவு பாராட்டு விழா
பாரோர் போற்ற நடைந்தேறியது
விழா காட்சிகள் வியக்க வைத்தது அனைவரையும்
இதோ உங்கள் பார்வைக்கு சில......















Tuesday, June 25

சிலரின் வேடம் கலைந்தது., ஒற்றுமை நாடகமும் முடிந்தது.

   நமது மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு
வேலூரில் துவங்கியது.
        மாநில செயலர் அறிமுக (ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும்
வகையில் அனைவரும் பேச வழி அமைத்துக்கொடுத்தார்) உரைக்குப்பின்,
பல மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், கீழ் கண்ட பொருள்களை
அஜண்டாவில் சேர்க்க வேண்டுகோள் விடுத்தனர்.

1.  மதுரை மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படாமல், கொல்லைப்புற வழியாக
     உடலுக்கு தேவையற்ற 6 வது விரலைப்போல,
     6 சிறப்பு அழைப்பாளர்களை, (ரிட்டயர்டு தலைவர்கள் உட்பட) தேர்ந்தெடுத்தது,
     நமது சங்க அமைப்பு விதிகளுக்கு எதிரானது, எனவே அவர்கள் அறுவரும்
     தேர்ந்தெடுத்தது சட்டப்படியானதல்ல என்ற பொருளும்,

2.  நமது தமிழ் மாநிலத்தில் பல தோழர்களிடம் வசூல் செய்து,  பல லட்சம் ரூபாய்
     செலவு செய்து கட்டிய கட்டிடத்தில் நமது மாநில செயலர் குடியேற, சால்ஜாப்பு
     சொல்லி பல ஆண்டுகளாக மறுதலிப்பது,  நமது தோழர்கள் அனைவரையும் வருத்தப்பட    வைப்பதாக உள்ளது எனவே, மாநில செயலர் உடனடியாக, சங்க அலுவலகத்தில் குடியேற வேண்டும்
     என்ற அஜண்டாவும்,

3.  சின்னம்மாள் அறக்கட்டளை பற்றி பல மாநில செயற்குழு கூட்டங்களில் விவாதித்தும்
     யார் அதன் பொருப்பாளர்கள் என்பதை, திறையிட்டு  மூடி மறைப்பது ஏன்? என்ற 
     விவாத பொருளும், மாநில செயற்குழுவில் சேர்க்க,

               பல தோழர்கள், மதியம் வரை சேர்க்க கோரியும், மாநில செயலர் பட்டாபிராமன்
ஒற்றை காலில் நின்று, மாநில செயற்குழு சிறப்புடன் நடைபெறாமல் கவனமாக பார்த்துகொண்டார்.

              மாநில செயலர் பட்டாபிராமன் துவக்கவுரை தொடங்கி,  முடிவுரை வரை நமது அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் மதிவாணனையும்,  சம்மேளன செயலர்
தோழர் ஜெயராமனையும், கடுமையான அவதூறு செய்யும் பிரச்சாரமாகவே இருந்தது.

              இந்த மாநில செயற்குழுவின் நோக்கமே!!! நமது சங்கத்தலைவர்களை, தரக்குறைவாக
விமர்சிக்க போடப்பட்டதோ? வேண்டும் என்றே வேலூரில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதோ? என்று சாதாரண தோழர்கள் நினைக்கும் அளவிற்கு இருந்ததது.

            சங்கத்தில் ஒற்றுமையான செயல்பாட்டிற்கு குந்தம் விளைந்திடவே,  ஓய்வு பெற்ற சிலரும், திட்டமிட்டு களம் இறங்கி  ஒற்றுமை ஏற்படாமல் உறுதியாக பார்த்துகொண்டனர்.
            இதற்கு மாநில செயலர் பட்டாபிராமன் மிகவும்  உறுதுணையாக இருந்தார்.

           செயற்குழு இறுதிவரை,  நமது சமேளன செயலர் தோழர் ஜெயராமன் அமைதியாக
 இருந்து வாழ்த்துரை வழங்கினார்.தோழர்கள் O.P.குப்தா, ஜெகன் அவர்களின் கொள்கை வழித்தோன்றல், தான் தான் என்பதை இதன் மூலம் நிரூபித்தார்.
                                      செய்தி : கோவை வலைத்தளம் ........

Sunday, June 23


உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல்சன் மண்டேலாவின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் செயலிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

94 வயதான மண்டேலா நுரையிரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

Saturday, June 22

சாதனை புரிந்த ஏழை மாணவ மாணவியருக்கு ஊக்க பரிசு வழங்கிய விழா!



அதிக மதிப்பெண் பெற்ற திருச்சி BSNL ஊழியர் குழந்தைகளுக்கு உற்சாக பரிசு வழங்கிய விழா!

சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் கலந்துகொண்டு வாழ்த்திய சிறப்பு விழா!

அதிக மதிப்பெண் பெற்ற திருச்சி BSNL ஊழியர் குழந்தைகளுக்கு உற்சாக பரிசு வழங்கிய விழாவாகவும் இவ்விழா அமைந்தது. 

தொழிற்சங்க நிகழ்வுகளை தாண்டி சமுக மேம்பாட்டிற்கான செயல்களையும் செய்யவேண்டும் என்ற சிந்தனையுடன் விழா ஏற்பாடுகளை செய்த தோழர்.திருச்சி  s.காமராஜ் அவர்களின் பணி அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

Wednesday, June 19

MOU signed with Oriental Bank of Commerce for extending various loan schemes to BSNL employees. The period of agreement is for 12 moths (i.e. 05-04-2013 to 05-05-2014) signed on 14-06-2013. Letter No.-1-9/BBF/Staff loan/2011-12, dt-17-06-2013
                                                                         chq....

Tuesday, June 18

நடராஜனே நாவை அடக்கு!
இல்லையேல் நாங்கள் அடக்குவோம்!!

தஞ்சாவூர் மாவட்டச் சங்கத்தின் இணையதளத்தை மாவட்டச் செயலருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக தனது பினாமி இணையதளமாக நடத்திவரும் குணசீலர் தமிழ் மாநிலச் சங்கத்தின் துணைச் செயலாளர் நடராஜன். அவர் பட்டாபிராமனுக்கு வால்பிடிக்கட்டும், பல்லக்குத் தூக்கட்டும் ஏன் ஜால்ராகூட அடிக்கட்டும் நமக்கு அதைப்பற்றி கவலையில்லை, அக்கறையில்லை. ஆனால் அவர் நமது சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் C.K.மதிவாணன் அவர்களுக்கு திருச்சியில் நடைபெறும் பாராட்டு விழாவை குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இணையதளத்தில் குரோத மனப்பான்மையுடன் எழுதி உள்ளார். ஏதோ பட்டாபிராமனும் நடராஜனும் தமிழ் நாட்டையே பட்டா போட்டு வாங்கிவிட்டது போல தமிழகத்தில் தோழர் மதிவாணனுக்கு பாராட்டுவிழா நடத்துவதா? என்று திமிராக வினா எழுப்பி உள்ளார். இந்த நடராசன் பள்ளிப்படிப்பு படித்து கொண்டிருந்த காலத்திலேயே  தபால் தந்தி இயக்கத்தின் தலைவராக போராட்டக் களத்தில் நின்றவர் தோழர் மதிவாணன். தமிழகத்தின் கிராமம் தோறும் நகரந்தோறும் NFPTE-ன் கொள்கை பரப்புச் செயலராக NFPTE –ன் சம்மேளனக் குழு உறுப்பினர் என்ற பொறுப்பை மட்டுமே வைத்துக்கொண்டு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓடி உழைத்தவர்.
     இயக்கத் தேவைக்காக சொந்த ஊரான சென்னையைவிட்டு கோவை சென்று குதர்கர்களின் முதுகெலும்பை ஒடித்தவர். சிலர்போல திருவாரூரிலேயே தேர் இழுத்தவர் அல்லர் இவர். தோழர். C.K.மதிவாணன் சூன் முப்பதில்  பணிஓய்வு பெறுகிறார் என்பது உலகறிந்த செய்தி. அது தமிழ்மாநில செயலாளருக்கும், நடராசருக்கும் மட்டும் தெரியாது இருப்பது உண்மையில் ஆச்சர்யம்தான்! கோஷ்டி நடத்தும் பட்டாபிராமன் தனிமனித விரோதத்தின் காரணமாக தோழர்.CKM அவர்களை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தபோதும்கூட 6வது அங்கீகாரத் தேர்தல் பிரச்சாரதிற்கு அழைக்கவோ அவரை பயன்படுத்திக் கொள்ளவோ இல்லை. ஆதலால் யார் அவருக்கு பாராட்டுவிழா தமிழகத்தில் நடத்துவார்கள் என்று நடராசன் நினைத்தார் போலும்? ஆனால் தமிழகத்தில் உள்ள சில நன்றியுள்ள NFTE தோழர்கள் திருச்சியில் சூன் 18ல் விழா எடுப்பது அவருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியது போலும்!! அதனால்தான் ”இது மணிவிழாவா அல்லது ஒரு அணியின் விழாவா? என்று பொருமுகிறார். சென்னை தொலைபேசியில் CKM-க்கு நடைபெறும் விழாவிற்கு பட்டாபிராமனுக்கு அழைப்பில்லையே எனப் புலம்பும் நடராசன் அதே வேகத்தில் அழைப்பு தேவையும் இல்லை என பிதற்றுவது அவர் சிந்தனையில் ஏதாவது கோளாறு ஏற்பட்டுள்ளதா என்று நினைக்கத் தோன்றுகிறது. சென்னை தொலைபேசியில் நடைபெறும் விழாவிற்கு பட்டாபியை அழைக்க அவர் என்ன அகில இந்தியச் நிர்வாகியா? இல்லை அனைவரும் ஏற்று கொள்ளும் தலைவரா? அவர் ஒரு மாநிலச் செயலர். அதிலும் ஒருசில மாவட்டங்களுக்கு மட்டுமே மாநிலச் செயலர். இந்த அழகில் அவரை நாங்கள் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேராசை அல்லவா?
     உயிர், வேலை இதுபற்றி சிறிதும் கவலை கொள்ளாமல்  2ஜி அலைகற்றை ஊழல், 323 சட்ட விரோத ISDN இணைப்புகள் முறைகேடு போன்ற மோசடிகளை எதிர்த்து அமைச்சர்கள் தயாநிதி மாறன், ராசா இவர்களை அம்பலபடுத்திய துணிச்சலுக்குச் சொந்தகாரர் தோழர்.மதிவாணன். தமிழகத்தில் 2011-ல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததற்கு அவரும் ஒரு காரணம் என்பதை அரசியல் தெரிந்தவர்கள் அறிவர். ஆனால் செகுவேரே என நடராசன் போற்றும் பட்டாபிராமனோ கேவலம்CGM அதட்டிப்பேசினால் மவுனமாக வெளியேறும் புரட்சியாளர் அல்லவோ?
       தமிழகத்திற்குள் நீங்கள் சண்டை போட்டுக் கொள்ளுங்கள் அது உங்கள் தனிப்பட்ட விசயம்.ஆனால் சென்னை தொலை பேசியின் தலைவரைப் பற்றி தரம் தாழ்ந்து எழுதினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறோம். பட்டாபிக்கு பல்லக்கு தூக்கும் நடராசன் அந்த வேலையை கவனமாகச் செய்யட்டும். எங்களை சீண்டினால் நாங்கள் எழுதுவது தொடரும்…



----காஞ்சி மாவட்டச் சங்கம், சென்னை தொலைபேசி, 17-06-2013

Monday, June 17

New Subscription Rate for NFTE-BSNL
NFTE-BSNL Union’s subscription 
increased  to Rs. 15/- per month. 
Options be filled up accordingly. 
 District Secy will distribute quota 
at the rate of Rs. 3/- per member to 
Branch. 
File . No.-BSNL/39-6/SR/2013(PT)
 Dated:-17-06-2013
CHQ   : Rs.5/-
Circle : Rs.4/-
District Rs.3/-
Branch Rs.3/-
78.2
மறுக்கப்படும் நியாயம் 

78.2 இணைப்பு பலன் ஊழியர்களின் சம்பளத்தில் கிடைப்பதற்கு  மாவட்டங்களில் மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த பலன் கிடைக்காத தோழர்களை நினைக்கும்போது இப்பலனை  அனுபவிப்பதில் 
நமக்கு சங்கடம் நேருகின்றது.

01/01/2007க்குப்பின் பணியில் வந்த தோழர்களுக்கு குறிப்பாக 
TTA தோழர்களுக்கு 78.2 இணைப்புக்கு எற்ப  அவர்களது அடிப்படைச்சம்பளம் உயர்த்தப்படவில்லை. அடிப்படைச்சம்பளம் ரூ.16450/= என்று நிர்ணயிக்கப்படவேண்டும்.
அல்லது கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட வேண்டும்.

GR'D, RM  தோழர்களில் பலருக்கு STAGNATION  வந்து விட்டது. 
அவர்களது சம்பளத்தின் அதிகபட்சம் - MAXIMUM உயர்த்தப்பட வேண்டும்.
இல்லையேல் அவர்களுக்கு 78.2 இணைப்பின் பலன் கிடைக்காது. 
STAGNATION  என்பது அடிமட்டத் தொழிலாளிக்கு இழைக்கப்படும் அநீதி.

 மத்திய, மாநில சங்கங்கள் உரிய நடவடிக்கை 
எடுத்திட வேண்டுகின்றோம்
                                                                 காரைக்குடி வலைத்தளம் .......

Sunday, June 16



  நமது சங்கத்தலைவனுக்கு  மணி விழா !!

  வருகிற ஜூலை 18 அன்று

தமிழகத்திலே பாராட்டு விழா !!

தங்கத் தலைவனுக்கு பாராட்டு விழா !!

தனது இலாகா பயிற்சி காலத்திலேயே
சங்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று
வீ ரத்  தழும்பை பெற்ற போராளி !!

அன்று முதல் இன்று வரை
அநீதி கண்டு வெகுண்டெழுந்து
ஆர்ப்பரித்து களம் அமைக்கும்
ஒப்பற்ற தலைவர் அவர் !!

சொஸைட்டியில் ஊழலை எதிர்த்து
ஊழியர்களை திரட்டி தடுத்தாண்டவர் !!
பல லட்சத்தை காட்டியபோதும்
சோரம் போகாத தலைவர் அவர் !!
சொசைட்டி  நிலம் உறுப்பினர்களுக்கே
என உறுதியோடு போராடிய
ஒப்பற்ற தலைவர் அவர் !!

BSNLஐ  கபளீகரம் செய்ய நடக்கும் முயற்சிகளை
அஞ்சாது அம்பலமாக்குபவர் !
ரௌடிகள், மாபியாக்கள் என
 யாருக்கும் அஞ்சாமல் 
இமாலய 2G ஊழலை 
தமிழகமெங்கும் அம்பலமாக்கிய 
உண்மையான ஊழல் எதிர்ப்பாளர் !!

" தமிழக ஆட்சி மாற்றத்திற்கே காரணமானவர் "

என்று வசிஷ்டை வாயாலேயே 
பேரும் புகழும் பெற்றவர் !
அதற்கு ஈடாக கொடுத்த  
  எம்.எல்.ஏ பதவியை மறுதலித்தவர்.


நமது சங்கம் இன்று அங்கீகாரம் பெற
அயராது   பணியாற்றிய கிரியா உக்கி !

தங்கத்தலைவனுக்கு பாராட்டு விழா !!
60 கிலோ   தங்கத்தை  துலாபாரமாக தந்தாலும்  
அவரது      வீ ரமிகு சேவைக்கு ஈடாகாது !! 
ஆனால், அவரோ அதையெல்லாம் 
விரும்ப மாட்டார்  அன்றோ !!



தனக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் 
பவுன் பெற்றுக் கொள்ளும் சங்கத்
தலைவர் உள்ள காலத்தில், 
நமது தலைவரோ அந்த ரகத் 
தலைவர் அல்லர் !

ஒரு கோடியை தமிழகத் தோழர்கள் தந்தபோது
அதில் ஒரு பைசாவைக்கூட தொடாமல் 
அதை அப்படியே  உழைக்கும் வர்க்க
கட்சிக்கு கொடுத்த நல்லாசான்
நல்லகண்ணு  பரம்பரை அவர் !!

உடலிலே குண்டைத் தாங்கிக் கொண்டே
வாழ்நாள் முழுதும் உழைக்கும் மக்களுக்காக
ஓடாய் உழைத்த தோழர் A.M. கோபுவுக்கு
வழங்கிய பல லட்சத்தோடு தனது 
சேமிப்பு தொகையையும் சேர்த்து
கட்சிக்கு வழங்கிய AMG பரம்பரைக்கு 
சொந்தக்கார தலைவர் அவர் !

வயிற்றெரிச்சலில் சிலர் தம் 
வழக்கம்போல் வதந்தியை பரப்புகிறார்  
60 தங்க காசுகளை தரப் போகிறார்கள் என்று !!

தங்கக் காசுகளால் அல்ல !! 
அளவற்ற அன்பால், தோழமையால்
ஆராதிப்போம் நம் தலைவனை !!

அணி அணியாய் வருக !! 
தமிழக தோழர்களின் அளவற்ற பாசத்தையே
தங்கத்திற்கும் மேலாக கருதும் 
தங்கத் தலைவனுக்கு நன்றியுடன் 
வாரி வழங்குவோம் 
அன்புமிகு  பாராட்டையே !! 

திருச்சி மலைக்கோட்டை மாநகரிலே !! 
ஜூலை 18 மதியம் !!   வாரீர் !! வாரீர் !!!
என வரவேற்கிறோம் !!

Friday, June 14

                         இன்று சே குவேரா பிறந்த நாள் !!!


                 புரட்சி யாளனின் நினைவுகள் !                                  புதைக்கபடுவதில்லை !!
                       விதைக்கப்படுகின்றனர் !!!



Monday, June 10

 DOT உத்திரவு வெளியானது !!
    78.2 சத IDA அடிப்படையில் 1.1.2007 முதல்  ஊதிய

மாற்றத்தை அனுமதி அளித்து DOT   உத்திரவு

வெளியாகிவிட்டது.

  நிதிப்பபலன்  இன்று முதல் கிடைக்கும்.

உத்திரவு எண்:No.61/01-2012/SU dated 10.06/2013
78.2 இணைப்பும்!!
78 மாத தாமதமும்!!!


78.2 சத IDA இணைப்பிற்கு DOT  ஒப்புதல் அளித்துள்ளதாகவும்
இன்று 10/06/2013 DOT  உத்திரவு வெளியிடப்படும் என்றும்
நமது முதன்மை  மேலாண்மை இயக்குநர் CMD அனைத்து  தொழிற்சங்கத்தலைவர்களிடமும்
உறுதி அளித்துள்ளதாக அறியப்படுகின்றது.

78.2 சத இணைப்பு என்பது சரியாக 01/01/2007ல் இருந்து 78 மாத தாமதத்திற்குப் பின் BSNL ஊழியர்களுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 78 மாதத்தில் ஆயிரக்கணக்கான தோழர்கள் பணி நிறைவு பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த பலன் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இருப்பினும்
SOMETHING IS BETTER THAN NOTHING 
என்ற ஆங்கிலப்பழமொழிக்கொப்ப
சென்றவருக்கு இல்லையென்றாலும் 
இருப்போருக்கேனும் கிடைக்கின்றதே
என நாம் ஆறுதல் கொள்வோம்.

                                                                       காரை குடி வலைத்தளம் ......

Sunday, June 9

மாநில செயலர் தோழர் பட்டாபி அவர்களுக்கு ஒரு மேலான வேண்டுகோள் !!!

மாநில பொருளர், மாநில செயலருக்கு, 
எழுதிய மடலை.......
 பாண்டி காமராஜ் விமர்சனம் செய்திருந்தார்,  மாநில அமைப்பில் விவாதிக்க வேண்டியதை மடல் எழுதலாமா என்றவர் .......

மாவட்ட செயலராக இருந்துகொண்டு மாவட்ட அமைப்பு கூட்டத்தை கூட்டாமல் புதர் மறைவில் பூங்காவில் குழு கூட்டம் போடுவது சரிதானா ?
                                                                           இரா.த........
 அன்றே சொன்னார் மதிவாணன்....அதனை இன்று சொல்கிறது CHQ

2009 -இல் சம்பளப் பேச்சு வார்த்தை நடந்த போது அரசின் 78.2 கிராக்கிப்படி இணைப்புக்கான உத்தரவு இருந்தது. ஆனால், அதிகாரிகளுக்கு 68.8 ஒத்துக்கொண்ட காரணத்தால் நாம் அதனை பெற முடியவில்லை. ஓ.பி.குப்தா காலம்தொட்டு மூன்று மற்றும் நான்காம் பிரிவிற்கு சம்பளப் பேச்சு வார்த்தை முடிந்த பிறகுதான் அதிகாரிகள் சம்பளப் பேச்சு வார்த்தை நடக்கும். ஆனால் நம்பூதிரி சங்கம் அங்கீகாரம் பெற்ற பிறகு அது தலைகீழாக மாறியது.”நாம் 78.2 இணைப்பு பெற தவறினால் திரும்ப அதற்காக பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என அன்றே தோழர் மதிவாணன் கூறினார்.” அவர் கூறியதை நமது சங்கத்தை சேர்ந்த சிலரே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்று நாம் 78.2 பெற ஒருவருடத்திற்கு மேல் பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட்டும் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
”Mistake and injustice done in wage revision is now rectified” என நமது அகில இந்திய தலைமை இன்று தனது வலைதளத்தில் கூறியுள்ளது. அதில் மேலும்
“ஊழியர் கூட்டமைப்பின் தலைமை 78.2 நமக்கு தரப்படவேண்டும் என வலியுறுத்தி 12-6-2012 போராட்ட அறைகூவல் விடுத்தது. ஆனால் இன்று வரை DOT  அதனை ஏதோஒரு சாக்கு போக்கு சொல்லி தராமல் ஏமாற்றி வந்தது. அதன் காரணமாக அதிருப்தி அடைந்த BSNL  தொழிலாளிகளின் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்பை கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக
 6-6-2013 அன்று DOT செயலரை பார்த்தது.
 6 மற்றும் 7 தேதிகளில் நமது CMD அவர்களை பார்த்து போட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்தாமல் இருப்பது சரியில்லை என தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் நமது   CMD  7-6-2013 மாலை நமது தலைவர் இஸ்லாமை தொலைபேசியில் கூப்பிட்டு 78.2 கிராக்கிபடி இணைப்பை  DOT  தருவதாக ஒத்துக் கொண்டுவிட்டது என தெரிவித்தார்.  இதனை பெற உருக்கு போன்று துணை நின்ற தொழிலாளியை பாராட்டுகிறோம்.  இதுவரை நமக்கு இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டது. இது NFTE-BSNL  6வது அங்கீகாரத் தேர்தல் முடிந்தவுடன் 78.2 கிராக்கிப்படியை மற்ற சங்கங்களின் ஆதரவோடு பெற்றுத்தருவோம் என கூறிய தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.”

மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு- பரிசு!

சமேளன செயலர் கலந்துகொள்ளும்  - AIBSNLOA நடத்தும் சிறப்பு விழா!





 

 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லை : விஜய் மல்லையா!!
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க தன்னிடம் பணமில்லை என்று கூறியுள்ளார் விஜய் மல்லையா.

கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணியாற்றி, பல மாத ஊதிய நிலுவையில் உள்ள ஊழியர்கள், தங்களது சம்பளத்தைக் கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேசிய மல்லையா, உங்களுக்கு ஊதியம் அளிக்க என்னிடம் பணமே இல்லை என்று கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிலுவையில் இருக்கும் ஊதியத்தைத் தரக் கோரி மல்லையாவின் வீட்டு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கிங்பிஷர் ஊரியர்கள்.


பணம் இல்லாட்டி எதாவது சொத்தை விற்று சம்பளம் கொடுக்கவேண்டியது தானே.அரசு இந்த பிரச்னையை எடுத்து அந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும்.இல்லாவிடில் மல்லியாவை தூக்கி உள்ளே வையுங்க.

பதிவுசெய்தவர் சுதீர்  06/08/2013 19:38

இந்த பயல உள்ள தூக்கி போடுங்க..பல பேரு சாபம் இவன மாதிரி அல்ல்களை விடாது ..விடாது குஞ்சு..மல்லையா ஒரு பஞ்சு ...

பதிவுசெய்தவர் குஞ்சு kumar  06/08/2013 22:50

எல்ல சொத்து களையும் முடக்க வேண்டும் ...........பெண்களை போட்டோ எடுத்து காலன்டர் போடுவது ஊர் ஊரக சுற்றுவது இப்படி செலவு செய்தல் எப்படி சம்பளம் கொடுப்பது....

பதிவுசெய்தவர் bhoobalakrishnan  06/08/2013 22:18

Friday, June 7

Happy Ending for our long wait:

        NFTE-BSNL is happy to convey the approval of DOT for the merger of 78.2% IDA for which the Unions /Associations signed agreement a year ago. The approval of the DOT was officially communicated to Com. Islam Ahamad, president, NFTE-BSNL by CMD, BSNL over phone at 06.30PM today. We congratulate all the leaders of the “FORUM” for achieving this without going in for an indefinite strike from 12/06/2013. May be we would have got this a year back if we had not withdrawn the strike on 12/06/2012.


          There is a slight confusion   about the date of effect. Whether it will be from 01/01/2007 as we demanded or from 07/06/2013, the date of DOT’s approval will be clear only after the release of official written communication by DOT. We thank all the members of NFTE-BSNL who participated very enthusiastically in all the programs conducted for the merger of 78.2% IDA in Chennai telephones on 22/05/2013 (demonstrations) and on 05/06/2013 (dharna) and meetings in support of strike demands at Nine centers on 07/06/2013 throughout Chennai telephones. NFTE-BSNL promised the employees to get 78.2% IDA merger immediately   after getting the status of recognized union. Now the first promise of NFTE-BSNL stands fulfilled with the help of all Unions/Associations. Let us move forward to get Bonus for our employees as our next agenda.

Dated:07/06/2013
                                     FROM CHENNAI WEBSITE........                     
78.2 சத IDA இணைப்பு
78.2 சத IDA இணைப்பிற்கு DOT  ஒப்புதல் வழங்க
முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
ஆயினும் DOT உத்திரவு இன்னும் வெளியிடப்படவில்லை.

உரிய உத்திரவு வெளிவரும் வரை
உருவப்பட்ட  போராட்ட வாள்
உறையில் இடப்பட வேண்டாம் .
உங்கள் கரங்களிலேயே இருக்கட்டும்.


அனைத்து தொழிற்சங்கக்கூட்டம்
06/06/2013 அன்று NFTE அகில இந்தியத்தலைவர்
தோழர். இஸ்லாம் அகமது தலைமையில்
அனைத்து தொழிற்சங்கக்கூட்டம் நடைபெற்றது.
 கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. 07/07/2013 அன்று BRPSE செயலரைச் சந்தித்து விவாதிப்பது.
2. மாவட்ட மாநில மட்டங்களில் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிப்பது.
3. 11/06/2013 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
4. முழுவீச்சில் 12/06/2013 வேலை நிறுத்தத்தை நாடு முழுக்க நடத்துவது.
                                      செய்தி ....காரைக்குடி வலைத்தளம்
ஜூன் - 7
                       தோழர். ஜெகன்

                        நினைவு நாள் .......
நெஞ்சம் மறப்பதில்லை
                                                                                 -தோழர் மாலி

அவர் குடியிருந்த வீட்டில் ஒரு வீட்டின் முன்அறை வரவேற்பரையாக, தொழிற்சங்க அலுவலகமாக செயல்பட்டது. அன்று தோழர்களுடன் அவரை சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். தொலைக்காட்சியில் கர்ணாடக இசை வழிந்தது. எங்களுடன் பேசியவாரே அவர் அதையும் வெகுவாக ரசித்தார். சொந்த குழந்தைகளுடன் பேசிட நேரமில்லாமிலிருக்கும் அவருக்கு  இசையில் அதுவும் கர்ணாடக இசையில் இவ்வளவு ஈடுபாடா? அவரிடமே கேட்டுவிடுவோமே என்று எனக்கு தோன்றியது. ஆமாம் கர்ணாடக இசையினை இவ்வளவு ஆர்வமாக ரசிக்கிறீர்களே உங்களுக்கு அந்த இசையில் அவவளவு ஈடுபாடா? இது நான். ஏன் இந்த கேள்வி? இது அவர். இல்லை இந்த பாட்டு எந்த ராகம் என்று சொல்வீர்களா? இது எனது கேள்வி. அவர் அதற்கு பதில் சொல்வதற்கு பதிலாக ஒரு கேள்வி கேட்டார். உங்களில் யாருக்காவது இந்த பாட்டு என்ன ராகம் என்று தெரியுமா என்று கேட்டார். நாங்கள் அனைவரும் அப்பாவிகள் என்று ஒரு சேர சொன்னோம். அப்படியா! இந்த பாட்டு ’காபி’  ராகத்தில் அமைந்தது என்று சொன்னார். எங்கள் தலைவர் சகலகலா வல்லவர் என்ற பெருமிதம் எங்களுக்கு. உங்கள் இசை அறிவுக்கு பாரட்டுகள் என்றேன். அதெல்லாம் இல்லை எனக்கு ஒரு விசயம் முதலில் தெரிந்து விட்டது அதனால் எனக்கு பதில் சொல்வதில் சிக்கல் இல்லாமல் போய்விட்டது என்றார் அவர். அப்படி என்ன தெரிந்து கொண்டீர்கள் என நான் கேட்டேன். வழக்கமான அந்த மந்தகாசமான சிரிப்பு அறை முழுக்க பரவியது. சிரிப்பை நிறுத்தி விட்டு சொன்னார் ‘உங்களில் யாருக்கும் ராகம் பற்றிய ஞானம் ஏதுமில்லை என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிந்து கொண்டேன். எனவே நான் எந்த ராகம் பற்றி சொன்னாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனவே எனக்குத் தெரிந்த ஒரு ராகத்தின் பெயரைச் சென்னேன் அவ்வளவு தான்’ என்றார். கேள்விக்கு எதிர் கேள்வி போட்டு பதில் சொன்ன அவரது திறமை வியப்பாக இருந்தது.  இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்.  அவர் மறைந்து விட வில்லை. அனைவரின் நெஞ்சங்களில் நினைவுள்ளவரை வாழ்வார்.
தன்னலம் கருதாத் தகைமையாளர் !
           ஜனசக்தியில் தோழர் டி.ரகுநாதன் அவர்களின் கட்டுரை


தோழர் ஜெகன் கட்டுப்பாடு காப்பதில் கருத்தாக இருந்தார். தான் ஏற்ற அரசியல் கொள்கைகளே தனக்கு பெருமை தேடித் தருபவை என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். தன்னால்தான் அமைப்பு வளர்ந்தது என்ற இறுமாப்பின்றி அமைப்பின் ஒரு சிறிய பணியாளராக கருதியே இறுதி வரை வாழ்ந்தார்.

தனிநபர் எவ்வளவுதான் அறிவார்ந்தவராகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும் அமைப்பிற்கு கட்டுப்படுவதே முறை என்று வாழ்ந்தவர்.

 எல்லாப் பண்புகளும், திறமைகளும் தகுதிகளும் நிறைந்து விளங்கிய அத்தோழர்,   NFTE சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக வராதது வியப்பிற்கும் வேதனைக்கும் உரியது. இக்கேள்விக்கு விடை(?) மறைந்த தோழர் குப்தா மட்டுமே அறிவாரோ என்னவோ ?                  
அமைதி போராளி ஜெகனுக்கு

             அஞ்சலி செலுத்துவோம்  !


   ஆயிரம் ஜகன்கள்
        
                   அவசியம் இங்கு தேவை .

 இனிய மொழி உன் வழி என்பதால்

சாதனைகள் நீ படைத்திட்டாய் 
           
     ஆயிரம் ஆயிரம் !

 சாமான்யன் மனதிலும் வெரூன்றி

நின்றவனே 

 போராடும் எண்ண த்தை , பொதுவுடைமை  தத்துவத்தை  நீ விதைத்த காரணத்தால்

 உன் வழியில் நாங்களெல்லாம் பணி  முடிப்போம் என்று சொல்லி சபதமேற்போம் . 

                                        NFTE    சென்னை மாவட்ட சங்கம் ...........

Thursday, June 6

வெளுத்தது சாயம்?
5 வருடமா ? 10 வருடமா ??


5 வருட ஊதிய உடன்பாடு போடுகிறேன் பேர்வழி என்று 3 ஆண்டுகளை வீணடித்த அன்றைய ஒரே அங்கீகார சங்கமான BSNLEU, இறுதியில் 5 வருடங்களுக்கு பிறகு ஊதிய உடன்பாடு போட ஒரு Openingஐ வைத்துள்ளோம்

என்று பெருமை பேசியது. தற்போது மத்திய அமைச்சரவை 5 வருட ஊதிய உடன்பாடு போட்ட Coal India போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் அடுத்த ஊதிய உடன்பாடு போட அனுமதி அளித்துள்ளது.


இனி  BSNLEUவின் உடன்பாடு 5 வருடத்திற்கா ? 10 வருடத்திற்கா என்று தெரிந்து அதன் சாயம் வெளுத்திவிடும் !! என்று அகில இந்திய சங்க வெப் சைட்டில் எழுதப் பட்டுள்ளது.  

மற்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கு அடுத்த ஊதிய உடன்பாடு போட அனுமதி அளிக்கும் மத்திய அரசு, BSNL ஊழியர்க்கு மட்டும் 1-1-2007 முதல் தந்து இருக்க வேண்டிய 78.2 சத ஊதிய நிர்ணயப் பலனை தர மறுப்பது ஏற்க முடியாத அநியாய மன்றோ ?!   
ஜூன் 11ல் கூடுகிறது அமைச்சர்கள் குழு!!
                                
நஷ்டத்தில் இயங்கிவரும் அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றின் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் குழு ஜூன் 11-ஆம் தேதி விவாதிக்க உள்ளது.
 

புது தில்லியில் இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: நடப்பு நிதி ஆண்டில் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தின் (பி.எஸ்.என்.எல்.) இழப்பு ரூ. 8,198 கோடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மற்றொரு அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான மஹாநகர் டெலிபோன் நிகம் நிறுவனத்தின் (எம்.டி.என்.எல்.) நஷ்டம் ரூ. 3,300 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 

இந்நிறுவனங்களை நிதி நிலையை சீரமைத்து மீண்டும் லாபகரமாக இயங்க வைக்க மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் இது குறித்து திட்டமிட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கபில் சிபல், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி, பிரதமர் அலுவலக துணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் உள்ளனர்.
 

இவ்விரண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுப்பதற்கான இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. மொபைல் போன் மற்றும் பிற வயர்லெஸ் சேவைகளுக்காக ஏற்கெனவே கூடுதலாக அலைக்கற்றை பெற்றுள்ள இந்நிறுவனங்கள் அதற்காக ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 10,000 கோடியை கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

 மேலும் 4ஜி சேவைகளுக்கான அலைக்கற்றைக்கு இரு நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 13,000 கோடியை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வசமுள்ள கூடுதல் வயர்லெஸ் பிராட்பேண்ட் அலைக்கற்றையை அரசிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறும்.

ஊழியர்கள் ஊதியம், விருப்ப ஓய்வுத் திட்டம் ஆகியவை குறித்தும் அமைச்சர் குழு ஆலோசனை நடத்தும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கும் எம்.டி.என்.எல். நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கும் விருப்ப ஓய்வு தருவது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும்.
 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைப் பொருத்தவரை, அதன் வருவாயில் 49 சதவீத நிதியை ஊதியத்துக்கு ஒதுக்க வேண்டியுள்ளது. எம்.டி.என்.எல். நிறுவனத்தின் வருவாயில் 103 சதவீத நிதி ஊழியர் ஊதியத்துக்கு ஒதுக்கப்படுகிறது.

Monday, June 3

Appreciable Court Order !!!

At the outset we congratulate the leadership of FNTO for obtaining an interim direction from the Kerala Highcourt directing the BSNL management not to accept any nominations and include the nominees of unions which did not qualify for said nomination since they fail to get a minimum of 7% of votes in the just concluded membership verification for placement in National/ Circle / Local councils.
      We are glad that our efforts which begun in 2004 against the formation of alliance and pooling of votes on one common symbol  is atleast  now accepted by a law Court. This judgment is land mark one and certainly cut the root of alliance of unions in future atleast. We hope the same logic will be extended and followed to the nominations in all bodies including work committees.

Saturday, June 1

 BEST WISHES!!!!!
           
TO ALL THOSE WHO ARE ATTENDING THE
JTO LICE Exam  on  2nd June, 2013.

விலைவாசிப்புள்ளி!!

 விலைவாசிப்புள்ளி 224இலிருந்து 226 ஆக உயர்ந்த காரணத்தால் நமக்கு வரும் சூலை மாதம் முதல் கிராக்கிப்படி 3.5 சதவீதம் உயரும் என எதிர்பார்ககப்படுகிறது ........
ஜனசக்தி படியுங்கள் !! (28-05-13),(01-06-13)
 தோழர் ,C K M ன்,  
சிவன் கழத்துப்  பாம்பு .....?
மாற்று அணி எழும் ....!