நடராஜனே நாவை அடக்கு!
இல்லையேல் நாங்கள் அடக்குவோம்!!
தஞ்சாவூர் மாவட்டச் சங்கத்தின் இணையதளத்தை மாவட்டச் செயலருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக தனது பினாமி இணையதளமாக நடத்திவரும் குணசீலர் தமிழ் மாநிலச் சங்கத்தின் துணைச் செயலாளர் நடராஜன். அவர் பட்டாபிராமனுக்கு வால்பிடிக்கட்டும், பல்லக்குத் தூக்கட்டும் ஏன் ஜால்ராகூட அடிக்கட்டும் நமக்கு அதைப்பற்றி கவலையில்லை, அக்கறையில்லை. ஆனால் அவர் நமது சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் C.K.மதிவாணன் அவர்களுக்கு திருச்சியில் நடைபெறும் பாராட்டு விழாவை குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இணையதளத்தில் குரோத மனப்பான்மையுடன் எழுதி உள்ளார். ஏதோ பட்டாபிராமனும் நடராஜனும் தமிழ் நாட்டையே பட்டா போட்டு வாங்கிவிட்டது போல தமிழகத்தில் தோழர் மதிவாணனுக்கு பாராட்டுவிழா நடத்துவதா? என்று திமிராக வினா எழுப்பி உள்ளார். இந்த நடராசன் பள்ளிப்படிப்பு படித்து கொண்டிருந்த காலத்திலேயே தபால் தந்தி இயக்கத்தின் தலைவராக போராட்டக் களத்தில் நின்றவர் தோழர் மதிவாணன். தமிழகத்தின் கிராமம் தோறும் நகரந்தோறும் NFPTE-ன் கொள்கை பரப்புச் செயலராக NFPTE –ன் சம்மேளனக் குழு உறுப்பினர் என்ற பொறுப்பை மட்டுமே வைத்துக்கொண்டு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓடி உழைத்தவர்.
இயக்கத் தேவைக்காக சொந்த ஊரான சென்னையைவிட்டு கோவை சென்று குதர்கர்களின் முதுகெலும்பை ஒடித்தவர். சிலர்போல திருவாரூரிலேயே தேர் இழுத்தவர் அல்லர் இவர். தோழர். C.K.மதிவாணன் சூன் முப்பதில் பணிஓய்வு பெறுகிறார் என்பது உலகறிந்த செய்தி. அது தமிழ்மாநில செயலாளருக்கும், நடராசருக்கும் மட்டும் தெரியாது இருப்பது உண்மையில் ஆச்சர்யம்தான்! கோஷ்டி நடத்தும் பட்டாபிராமன் தனிமனித விரோதத்தின் காரணமாக தோழர்.CKM அவர்களை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தபோதும்கூட 6வது அங்கீகாரத் தேர்தல் பிரச்சாரதிற்கு அழைக்கவோ அவரை பயன்படுத்திக் கொள்ளவோ இல்லை. ஆதலால் யார் அவருக்கு பாராட்டுவிழா தமிழகத்தில் நடத்துவார்கள் என்று நடராசன் நினைத்தார் போலும்? ஆனால் தமிழகத்தில் உள்ள சில நன்றியுள்ள NFTE தோழர்கள் திருச்சியில் சூன் 18ல் விழா எடுப்பது அவருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியது போலும்!! அதனால்தான் ”இது மணிவிழாவா அல்லது ஒரு அணியின் விழாவா? என்று பொருமுகிறார். சென்னை தொலைபேசியில் CKM-க்கு நடைபெறும் விழாவிற்கு பட்டாபிராமனுக்கு அழைப்பில்லையே எனப் புலம்பும் நடராசன் அதே வேகத்தில் அழைப்பு தேவையும் இல்லை என பிதற்றுவது அவர் சிந்தனையில் ஏதாவது கோளாறு ஏற்பட்டுள்ளதா என்று நினைக்கத் தோன்றுகிறது. சென்னை தொலைபேசியில் நடைபெறும் விழாவிற்கு பட்டாபியை அழைக்க அவர் என்ன அகில இந்தியச் நிர்வாகியா? இல்லை அனைவரும் ஏற்று கொள்ளும் தலைவரா? அவர் ஒரு மாநிலச் செயலர். அதிலும் ஒருசில மாவட்டங்களுக்கு மட்டுமே மாநிலச் செயலர். இந்த அழகில் அவரை நாங்கள் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேராசை அல்லவா?
உயிர், வேலை இதுபற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் 2ஜி அலைகற்றை ஊழல், 323 சட்ட விரோத ISDN இணைப்புகள் முறைகேடு போன்ற மோசடிகளை எதிர்த்து அமைச்சர்கள் தயாநிதி மாறன், ராசா இவர்களை அம்பலபடுத்திய துணிச்சலுக்குச் சொந்தகாரர் தோழர்.மதிவாணன். தமிழகத்தில் 2011-ல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததற்கு அவரும் ஒரு காரணம் என்பதை அரசியல் தெரிந்தவர்கள் அறிவர். ஆனால் செகுவேரே என நடராசன் போற்றும் பட்டாபிராமனோ கேவலம்CGM அதட்டிப்பேசினால் மவுனமாக வெளியேறும் புரட்சியாளர் அல்லவோ?
தமிழகத்திற்குள் நீங்கள் சண்டை போட்டுக் கொள்ளுங்கள் அது உங்கள் தனிப்பட்ட விசயம்.ஆனால் சென்னை தொலை பேசியின் தலைவரைப் பற்றி தரம் தாழ்ந்து எழுதினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறோம். பட்டாபிக்கு பல்லக்கு தூக்கும் நடராசன் அந்த வேலையை கவனமாகச் செய்யட்டும். எங்களை சீண்டினால் நாங்கள் எழுதுவது தொடரும்…
----காஞ்சி மாவட்டச் சங்கம், சென்னை தொலைபேசி, 17-06-2013
No comments:
Post a Comment