WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, June 7

தன்னலம் கருதாத் தகைமையாளர் !
           ஜனசக்தியில் தோழர் டி.ரகுநாதன் அவர்களின் கட்டுரை


தோழர் ஜெகன் கட்டுப்பாடு காப்பதில் கருத்தாக இருந்தார். தான் ஏற்ற அரசியல் கொள்கைகளே தனக்கு பெருமை தேடித் தருபவை என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். தன்னால்தான் அமைப்பு வளர்ந்தது என்ற இறுமாப்பின்றி அமைப்பின் ஒரு சிறிய பணியாளராக கருதியே இறுதி வரை வாழ்ந்தார்.

தனிநபர் எவ்வளவுதான் அறிவார்ந்தவராகவோ, திறமைசாலியாகவோ இருந்தாலும் அமைப்பிற்கு கட்டுப்படுவதே முறை என்று வாழ்ந்தவர்.

 எல்லாப் பண்புகளும், திறமைகளும் தகுதிகளும் நிறைந்து விளங்கிய அத்தோழர்,   NFTE சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக வராதது வியப்பிற்கும் வேதனைக்கும் உரியது. இக்கேள்விக்கு விடை(?) மறைந்த தோழர் குப்தா மட்டுமே அறிவாரோ என்னவோ ?                  

No comments:

Post a Comment