WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, June 16

  நமது சங்கத்தலைவனுக்கு  மணி விழா !!

  வருகிற ஜூலை 18 அன்று

தமிழகத்திலே பாராட்டு விழா !!

தங்கத் தலைவனுக்கு பாராட்டு விழா !!

தனது இலாகா பயிற்சி காலத்திலேயே
சங்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று
வீ ரத்  தழும்பை பெற்ற போராளி !!

அன்று முதல் இன்று வரை
அநீதி கண்டு வெகுண்டெழுந்து
ஆர்ப்பரித்து களம் அமைக்கும்
ஒப்பற்ற தலைவர் அவர் !!

சொஸைட்டியில் ஊழலை எதிர்த்து
ஊழியர்களை திரட்டி தடுத்தாண்டவர் !!
பல லட்சத்தை காட்டியபோதும்
சோரம் போகாத தலைவர் அவர் !!
சொசைட்டி  நிலம் உறுப்பினர்களுக்கே
என உறுதியோடு போராடிய
ஒப்பற்ற தலைவர் அவர் !!

BSNLஐ  கபளீகரம் செய்ய நடக்கும் முயற்சிகளை
அஞ்சாது அம்பலமாக்குபவர் !
ரௌடிகள், மாபியாக்கள் என
 யாருக்கும் அஞ்சாமல் 
இமாலய 2G ஊழலை 
தமிழகமெங்கும் அம்பலமாக்கிய 
உண்மையான ஊழல் எதிர்ப்பாளர் !!

" தமிழக ஆட்சி மாற்றத்திற்கே காரணமானவர் "

என்று வசிஷ்டை வாயாலேயே 
பேரும் புகழும் பெற்றவர் !
அதற்கு ஈடாக கொடுத்த  
  எம்.எல்.ஏ பதவியை மறுதலித்தவர்.


நமது சங்கம் இன்று அங்கீகாரம் பெற
அயராது   பணியாற்றிய கிரியா உக்கி !

தங்கத்தலைவனுக்கு பாராட்டு விழா !!
60 கிலோ   தங்கத்தை  துலாபாரமாக தந்தாலும்  
அவரது      வீ ரமிகு சேவைக்கு ஈடாகாது !! 
ஆனால், அவரோ அதையெல்லாம் 
விரும்ப மாட்டார்  அன்றோ !!



தனக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் 
பவுன் பெற்றுக் கொள்ளும் சங்கத்
தலைவர் உள்ள காலத்தில், 
நமது தலைவரோ அந்த ரகத் 
தலைவர் அல்லர் !

ஒரு கோடியை தமிழகத் தோழர்கள் தந்தபோது
அதில் ஒரு பைசாவைக்கூட தொடாமல் 
அதை அப்படியே  உழைக்கும் வர்க்க
கட்சிக்கு கொடுத்த நல்லாசான்
நல்லகண்ணு  பரம்பரை அவர் !!

உடலிலே குண்டைத் தாங்கிக் கொண்டே
வாழ்நாள் முழுதும் உழைக்கும் மக்களுக்காக
ஓடாய் உழைத்த தோழர் A.M. கோபுவுக்கு
வழங்கிய பல லட்சத்தோடு தனது 
சேமிப்பு தொகையையும் சேர்த்து
கட்சிக்கு வழங்கிய AMG பரம்பரைக்கு 
சொந்தக்கார தலைவர் அவர் !

வயிற்றெரிச்சலில் சிலர் தம் 
வழக்கம்போல் வதந்தியை பரப்புகிறார்  
60 தங்க காசுகளை தரப் போகிறார்கள் என்று !!

தங்கக் காசுகளால் அல்ல !! 
அளவற்ற அன்பால், தோழமையால்
ஆராதிப்போம் நம் தலைவனை !!

அணி அணியாய் வருக !! 
தமிழக தோழர்களின் அளவற்ற பாசத்தையே
தங்கத்திற்கும் மேலாக கருதும் 
தங்கத் தலைவனுக்கு நன்றியுடன் 
வாரி வழங்குவோம் 
அன்புமிகு  பாராட்டையே !! 

திருச்சி மலைக்கோட்டை மாநகரிலே !! 
ஜூலை 18 மதியம் !!   வாரீர் !! வாரீர் !!!
என வரவேற்கிறோம் !!

No comments:

Post a Comment