அன்றே சொன்னார் மதிவாணன்....அதனை இன்று சொல்கிறது CHQ
2009 -இல் சம்பளப் பேச்சு வார்த்தை நடந்த போது அரசின் 78.2 கிராக்கிப்படி இணைப்புக்கான உத்தரவு இருந்தது. ஆனால், அதிகாரிகளுக்கு 68.8 ஒத்துக்கொண்ட காரணத்தால் நாம் அதனை பெற முடியவில்லை. ஓ.பி.குப்தா காலம்தொட்டு மூன்று மற்றும் நான்காம் பிரிவிற்கு சம்பளப் பேச்சு வார்த்தை முடிந்த பிறகுதான் அதிகாரிகள் சம்பளப் பேச்சு வார்த்தை நடக்கும். ஆனால் நம்பூதிரி சங்கம் அங்கீகாரம் பெற்ற பிறகு அது தலைகீழாக மாறியது.”நாம் 78.2 இணைப்பு பெற தவறினால் திரும்ப அதற்காக பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என அன்றே தோழர் மதிவாணன் கூறினார்.” அவர் கூறியதை நமது சங்கத்தை சேர்ந்த சிலரே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்று நாம் 78.2 பெற ஒருவருடத்திற்கு மேல் பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட்டும் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
”Mistake and injustice done in wage revision is now rectified” என நமது அகில இந்திய தலைமை இன்று தனது வலைதளத்தில் கூறியுள்ளது. அதில் மேலும்
“ஊழியர் கூட்டமைப்பின் தலைமை 78.2 நமக்கு தரப்படவேண்டும் என வலியுறுத்தி 12-6-2012 போராட்ட அறைகூவல் விடுத்தது. ஆனால் இன்று வரை DOT அதனை ஏதோஒரு சாக்கு போக்கு சொல்லி தராமல் ஏமாற்றி வந்தது. அதன் காரணமாக அதிருப்தி அடைந்த BSNL தொழிலாளிகளின் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்பை கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக
6-6-2013 அன்று DOT செயலரை பார்த்தது.
6 மற்றும் 7 தேதிகளில் நமது CMD அவர்களை பார்த்து போட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்தாமல் இருப்பது சரியில்லை என தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் நமது CMD 7-6-2013 மாலை நமது தலைவர் இஸ்லாமை தொலைபேசியில் கூப்பிட்டு 78.2 கிராக்கிபடி இணைப்பை DOT தருவதாக ஒத்துக் கொண்டுவிட்டது என தெரிவித்தார். இதனை பெற உருக்கு போன்று துணை நின்ற தொழிலாளியை பாராட்டுகிறோம். இதுவரை நமக்கு இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டது. இது NFTE-BSNL 6வது அங்கீகாரத் தேர்தல் முடிந்தவுடன் 78.2 கிராக்கிப்படியை மற்ற சங்கங்களின் ஆதரவோடு பெற்றுத்தருவோம் என கூறிய தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.”

No comments:
Post a Comment