WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, August 31

 CHQ NEWS......
இம்மாதம் சம்பளம் பட்டுவாடா செய்வதற்கான நிதி 30-08-13 இரவு அனுப்பப்பட்டது

  30-08-2013 : Allotment of fund for salary sent to all circles.
    

30-08-2013 : Reception Committee writes - circle Secretaries to note.
    

30-08-2013 : Request for upgradation in NE-12 scake (16390-33830) wef 1st April, 2008 instead of 22nd February, 2012. Letter No.-TF-26/6, Dated:-29-08-2013.
   

 30-08-2013 : Pay erosion of DR TTAs and others - consideration regarding. Letter No.-TF-9/9, Dated:-27-06-2013.
   

 29-08-2013 : Pension of DOT absorbed employees in BSNL - AITUC writes to MOC to remove apprehensions and doubts.
BSNL ஓய்வூதியம் பற்றி கபில்சிபலுக்கு
தோழர். குருதாஸ் தாஸ் குப்தா கடிதம்!!


28/08/2013 அன்று தோழர். குருதாஸ் தாஸ் குப்தா, MP தொலைதொடர்பு அமைச்சர் திரு.கபில்சிபலுக்கு BSNL  ஊழியர்களின் ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி விரிவான கடிதம் எழுதி உடனடியாக அரசின் தலையீட்டைக் கோரியுள்ளார்.

    அரசு செப்டம்பர் 2000 உடன்பாட்டை மதிக்க வேண்டும்.
    ஒய்வூதியச்சுமையை அரசே ஏற்க வேண்டும்.
    சம்பளத்தின் அதிகபட்சத்தில் (MAXIMUM) ஓய்வூதிய பங்களிப்பு செலுத்தும் நடைமுறையை மாற்ற வேண்டும்.
    BSNL செலுத்தும் வரியின் அடிப்படையிலேயே  அரசின் பங்களிப்பு இருக்கும் என்னும் உத்திரவை மாற்ற வேண்டும்.

என்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் மீது அரசு கவனம் செலுத்த
தோழர்.குருதாஸ் தாஸ் குப்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

Friday, August 30


மரம் சும்மா இருக்க விரும்பினாலும்
           காற்று சும்மா இருக்க விடுவதில்லை......  


அதுபோல கொங்குநாட்டார் பண்புக் கிணங்க
மரியாதையோடு நாம் பணியாற்ற முயலும்போது
காரணமின்றி நம்மை வம்புக்கு இழுக்கின்றார்.......
கொங்கான் என்று அடைமொழி வைத்து

வம்புக்கு நாம் போவதில்லை; வம்புக்கு வந்தால் விடுவதில்லை;

காரைக்குடி காமாட்சியும் நம் தோழனே !!
அவருக்கும் நாம் குரல் கொடுப்போம் !!

காமாட்சியின் பேராலே உண்மையான மாவீரனை
கொச்சைப்படுத்த முயல்வதேன் !!

தங்களால்தான் இமாலய ஊழலை தட்டிக் கேட்க முடியவில்லை !
தட்டிக் கேட்டவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதேன் ?

தனது சொந்த நலனுக்காக JE போஸ்டிங் வேண்டாம் என்றதையே
ஏதோ மிகப்பெரிய தியாகம் போல சித்தரிப்போர்,

ஊழலை வெளிக்கொணர தோழர் மதி மேற்கொண்ட
போராட்டத்திற்கு பிரதிபலனாக பென்சன் மறுப்பு, DCRG மறுப்பு
போன்றவற்றை நிர்வாகம் திணிக்க முற்படுவதை
கேலி பேசுவதேன்.........


ஒரு ஆர்ப்பாட்டத்திற்காக பென்ஷனை வெட்டுவதா? பென்ஷன் சலுகைகளை நிறுத்தி வைப்பதா? என இந்த போலிகள் பொங்கி எழ வேண்டாம்.குறைந்தபட்சம் நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டிருப்பதை
பரிகசிக்காமல் இருக்கலாமே?

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்
என்று கவிதை இயற்றினார்  கவிக்கோ கம்பர் !!

பிள்ளையார் பட்டியில் ; " கல்யாணம் செய்த உடனே டைவேர்ஸா"
என்ற காரைக்குடியார் , மனசாட்சியை அடகு வைத்து
திடீரென்று குட்டிகரணம் அடித்ததேன் ?
பெற்ற கடனுக்காகவா ?
பதவி ஆசையாலா !!  பட்டம் பெற்றிடவா !!

  " அவர் " செயல்பாடற்றவர் ........உப்புசப்பற்ற  அந்த பத்திரிக்கையை எனக்கு இனி அனுப்பாதே என்று கூறி விட்டேன் "
என்று தமிழகமெங்கும் பறைசாற்றியவர்
இன்று திடீர் பல்டி அடித்து பொன் விழா என்று பறப்பதேன்...
பதவி ஆசையாலா !!  பட்டம் பெற்றிடவா !!

ஸ்கூட்டர் அட்வான்ஸ் பெற்றதில் முறைகேடு என்று
சாதாரண விஜிலென்ஸ் விசாரணைக்கே 
அஞ்சி நடுங்கியவர்க்கு
மாவீரன் மதிவாணண் அவர்களை கேலி பேச
அருகதை உண்டா என மனசாட்சியை தொட்டு பதில் சொல்லட்டும் !
 

செய்தி கோவை வலைத்தளம் ............

காரைக்குடியில் ஒரு கிறுக்கன்!!


நமது மாநிலச் சங்க செயலாளரை காரணமே இல்லாமல் கீழ்த்தரமாக விமர்சிப்பதையே தனது அன்றாட இணையதள பணியாகச் செய்து கொண்டு இருக்கும் ஒரு கிறுக்கனுக்கு பதில் தரவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டதில் சிறிது வருத்தம்தான் என்றாலும் அந்த
கிறுக்கன் உளரல்களை வெறுமெனே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கவும் இயலவில்லை. செஞ்சோற்று கடன் தீர்க்க அவன்
எவரையும் பல்லக்கில் சுமக்கட்டும். அதுபற்றி நமக்கு அக்கறையில்லை.
ஆனால் “ NFTE சங்கத்தின் ஓய்வு அறியா போராளியை” கேவலமாக சித்தரிப்பதை அவன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காரைக்குடியின் சம்பவங்கள் அம்பலமாகும்.

இந்த கிறுக்கனின் ஆதர்ஷ புருஷர் R.K.
 NFTE  சங்கம் அங்கீகாரம் இல்லாமல் எட்டு ஆண்டாய் அவதிப்பட்டபோது யோகா மாஸ்டர் ஆகி தொழிற்சங்க அரங்கிலிருந்தே காணாமல் போய்விட்டதை மறக்க முடியுமா? ஆனால் இன்று அவரின்றி தமிழ்நாட்டில் அணுவும்
அசைவதில்லையாம்! ஏன் இந்த மாற்றம்?
 NFTE  -க்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டதால்தானே?
 ஓடி ஒளிந்திருந்தவர்கள் எல்லாம்
“பயந்து பதுங்கி” கிடந்தவர்கள் எல்லாம்
 இன்று மேடையேறி
சண்டப்பிரசங்கம் செய்கின்றனர். தமிழகதில் NFTE   சங்கத்திற்கு வாக்கு
அளியுங்கள் என்று சொன்ன அதே திருவாயால் சென்னை தொலைபேசியில் அதுவும் குறிப்பாக STR பகுதியில் கோலி சங்கத்திற்கு
ஆதரவு திரட்டிய R.K-யின் அடாத செயல்
இரட்டை வேடமா?அல்லது பச்சை துரோகமா?.

மதுரை மாநில மாநாட்டுக்கு சில வாரங்களுக்கு முன்பு வரை “ பட்டாபி ஒரு பொட்டை”  என அர்ச்சனை செய்துவிட்டு
தீடீரென்று அந்தர்பல்டி அடித்து அதே பட்டாபிக்கு பட்டாபிஷேகம் செய்திட RK முன் வந்ததற்கு
  எது காரணம்?
பதவி வெறியில்,

வளர்த்த இயக்கத்திற்கு துரோகம் இழைத்தகூட்டம்
 வந்த உயர்பதவியைகூட
இயக்கத்தின் ஒற்றுமைக்காக ஏற்க மறுத்து ஒதுக்கி தள்ளிய
“தோழர்.C.K.M "
அவர்களை பார்த்து ஏளனம் செய்வதா?

தோழர்.C.K.M  பணிஓய்வு பெற்ற பின்னாலும் இதுநாள்வரை அவரது
ஓய்வு ஊதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது நிர்வாகத்தின்
பழி வாங்கும் செயலே.
 இதனை கண்டிக்க மனமில்லாவிட்டாலும்
பரவாயில்லை;
 “மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும்” பரவாயில்லை;
இந்த சோ”மாரி” கள்  தொழிற்சங்க தலைவர்களாக அரிதாரம் பூசிக் கொள்வது இனியும் தேவைதானா?

பட்டாபி மாநிலச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இன்றுவரை
ஒருமுறையாவது மாநில/மாவட்ட நிர்வாகத்தின் ஊழல் முறைகேடுகளை எதிர்த்து போராடி இருப்பாரா? எல்லோரிடமும் நல்லபெயர் வாங்குவதில்தானே அவருக்கு ஆகப்பெரிய அக்கறை.
BSNL நிறுவனத்தை  ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட பேர்வழிகள்
கொள்ளை அடித்ததை பட்டாபி அல்ல, நமது அகில இந்திய சங்கம் அல்ல
வேறு எந்த சங்கமும் கூட எதிர்க்க தயங்கி
கள்ள மவுனம் சாதித்தபோது
தன்னந்தனியாக துணிச்சலுடன்
இந்த கொள்ளையர்களை எதிர்த்ததால்தானே தோழர்.C.K.M  இன்று நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டுள்ளார்.

ஒரு ஆர்ப்பாட்டத்திற்காக பென்ஷனை வெட்டுவதா? பென்ஷன் சலுகைகளை நிறுத்தி வைப்பதா? என இந்த போலிகள் பொங்கி எழ வேண்டாம்.குறைந்தபட்சம் நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டிருப்பதை
பரிகசிக்காமல் இருக்கலாமே?

எவர் காலையும் நக்கி அந்த கிறுக்கன் காரைக்குடியிலேயே காலம் தள்ளட்டும்.எவருக்கும் வால்பிடித்து தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளட்டும். நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால்
NFTE சங்கத்தின்
வளர்ச்சிக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் ஓய்வின்றி பாடுபட்டு கொண்டிருக்கிற
தோழர்.C.K.M அவர்களை
கீழ்த்தரமாக
விமர்சிப்பதை அந்த கிறுக்கன் இனியும் தொடர்ந்தால் உரிய மருத்துவ
சிகிச்சைக்காக நாமே அவனை அனுமதிக்க வேண்டியிருக்கும்.


--S.ஏகாம்பரம், மாவட்டச் செயலாளர்
NFTE-BSNL  காஞ்சிபுரம் மாவட்டம்
சென்னை தொலைபேசி






Wednesday, August 28

C R



      தோழர் சி.ராஜேஸ்வர ராவ் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் தலைவரின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு முழுவதும் நாடெங்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களால் கொண்டாடப்படுகிறது.

    அவரது வாழ்வு, உண்மையான கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஒரு வழிகாட்டியாகும். 

கம்யூனிஸ்ட் கட்சியில் 1950 ஏற்பட்ட திடீர் திருப்பம் காரணமாக பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கபட்டார். கடும் பணியாற்றி கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு போராடும் மக்கள் இயக்கமாக மாற்றினார்.

1951ல் மீண்டும் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது.தோழர் C.R அவர்களுக்கு பதிலாக தோழர் அஜாய் கோஷ் புதிய பொது செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

உடனே C R கட்சியை விட்டு விலகவில்லை; கட்சியையோ, புதிய தலைவரையோ கேவலமாக பேசவில்லை......

அதற்கு மாறாக புதிய தலைமையின் வழிகாட்டுதலை, காட்டில் இருந்த கேடர்களை சந்தித்து விளக்கி ஏற்க வைத்தார்.......மீண்டும் ஆந்திர மாநிலச் செயலராக பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்றி படிப்படியாக முன்னேறினார். 1964ல் மீண்டும் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1990 வரை சிறப்பாக செயலாற்றிவிட்டு 1990ல் உடல்நலம் காரணமாக அந்த பதவியிலிருந்து தானே விலகினார்.

           



Monday, August 26

    




27-08-13மாலை5.30மணி
 கடலூர் ஒருங்கிணைந்த வணிக வளாகம் ,
                                             சிறப்புரை
தோழர் C .K மதிவாணன் அகில இந்திய துணை பொது செயலர்,
தோழர் G .ஜெயராமன் அகில இந்திய செயலர்,

                   அனைவரும்! பங்கேற்போம்!!

அரை குறை !!


Sunday, August 25

கூரை ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்?

 கடந்த 23/08/2013 அன்று BSNLEU தனது பரிவாரங்களுடன் 27 கோரிக்கைகளை வைத்து தர்ணா நாடகத்தை அரங்கேற்றியது. எப்போதும்போல நிர்வாகமும் தொழிலாளர்களும் இதனை கண்டுகொள்ளவில்லை.

அந்த கோரிக்கைகளில் உள்ள முக்கியமான போனஸ் வேண்டும் என்பது அனைத்து ஊழியர்களுக்கும் பொதுவான ஒன்று. அதனை பெற அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து செய்யாமல் தான் மட்டும் செய்தது ஏன் என்ற காரணம் நமக்கு புரியவில்லை. ஒருவேளை BSNLEUதலைமை அந்த கோரிக்கைகளை வென்றெடுப்பதைவிட அதன்மீது தான் அக்கறை இருப்பதுபோல காட்டினால் போதுமானது என்று நினைத்திருப்பார்கள்.

தபால் தந்தி ஊழியர்கள் வரலாற்றில் தலைவர்கள் ஞானையா மற்றும் குப்தா உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வேண்டும் என்று கூறியபோது நம்பூதிரி போன்றவர்கள் அதனை எள்ளி நகையாடியது மட்டுமல்லாமல் அதனால் எதிர்காலத்தில் போனஸ் என்பது இல்லாமல் போகும் என கூக்குரல் இட்டனர். போனஸ் என்பது “கொடுபடா ஊதியம்” என்று கோஷம் எழுப்பினர்.

2004-இல் அங்கீகாரத்தை பெற்ற இவர்கள் போனஸை இலாபத்துடன் இணைந்த போனஸாக பெற கையெழுத்து இட்டனர். “போனஸ் என்பது கொடுபடா ஊதியம்” என்ற கோரிக்கையை வங்காள விரிகுடா கடலில் போட்டனர்.  நம்பூதிரி செய்த இந்த மாபெரும் தவறால் நாம் கடந்த மூன்றுவருடங்களாக போனஸ் என்பது மறந்து போகும், நிலைக்குத் தள்ளப்பட்டோம். கடந்த 9 வருடங்களாக நிர்வாகம் சொன்ன “லாபம் இருந்தால் போனஸ்” என்ற கோட்பாட்டை BSNLEU எந்த மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டது.

ஆனால் எந்தவித அங்கீகாரம் இல்லாவிட்டாலும் NFTE-BSNL இலாபம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருமாத சம்பளம் போனஸாக தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டு இருந்தது. கடந்த சரிபார்ப்பு தேர்தல் பிரச்சாரத்தின் போது NFTE-BSNL போனஸ் பிரச்சனையை முன்வைத்து பிரச்சாரம் செய்தது. NFTE-BSNL அங்கீகாரம் பெற்றால் BSNLEU போட்ட போனஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இலாபம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் “ ஒருமாத சம்பளம் போனஸ் தரவேண்டும்” என்ற ஒப்பந்தம் போடப்படும் என்று உறுதி அளித்தது.

NFTE-BSNL இதுகுறித்து நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது. வரும் தசாரா பண்டிகைக்கு முன்னால் போனஸ் தர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி உள்ளது. இந்த சூழலில் BSNLEU சங்கம்  NFTE-BSNL, FNTO மற்றும் அதிகாரிகள் சங்கம் இவர்களை கலந்து ஆலோசிக்காமல் தனிஆவர்த்தனம் பாடியுள்ளது. இதிலிருந்து இந்த தர்ணா விளம்பரத்திற்காக செய்த ஒன்று என்று தெரிய வருகிறது.

நம்மை பொறுத்தவரை அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு மாபெரும் போராட்டம் செய்தாலே அன்றி கோரிக்கைகளை வென்று எடுப்பது கடினம் என்று கருதுகிறோம். அப்போதுதான் நிர்வாகம் அடிபணிந்து போனஸிற்கான புதிய உடன்படிக்கை போடும்.

இப்போதாவது BSNLEU மறு யோசனை செய்யுமா?


C.K. மதிவாணன், மாநிலச் செயலர்
Bonus:
             BSNL Employees union along with its partners in the united forum concluded its 3 days Nationwide dharna on 23/08/2013 for   27 odd demands including payment of Bonus.  By and large both the employees and the management have ignored its 3 days dharna as was expected.  When most of the demands including payment of Bonus is common to all Employees/ Executives we cannot find any justification for not planning a united struggle under the banner of forum. May be,the leadership of BSNLEU is more interested in proving its interest on those demands than the settlement of demands itself.

 When Comrades Gnanaiah and Gupta signed agreement for the first time in the history of P&T Employees  for payment of Bonus under the Productivity linked scheme(PLB), Comrades Namboodri and his friends made hue and cry and questioned the logic behind the linking of Productivity with Bonus. They also propagated that since productivity was linked with payment of Bonus and in future Bonus amount will be reduced. They shouted from the roof tops that “Bonus is the deferred wage”.

      But when these comrades gained the status of recognized union in 2004 they mearely surrendered to the management by accepting the profit linked incentive scheme. They never hesitated to throw their   own slogan of “ Bonus is a deferred wage” to the Bay of Bengal. Since Com. Namboodri committed the sin of linking the payment of Bonus( Incentive) to the profitability of the company our employees were denied Bonus ever since 2009-2010 financial year. All these nine years BSNLEU accepted the arguments of the management that “ Bonus will be paid to the Employees only When the Company earns profit". However NFTE-BSNL although not a Recognized union from 2004-2012 opposed the wrong approach of BSNLEU and demanded one month salary as Bonus irrespective of whether company runs on Profit or loss. During the campaign for the recent membership verification also NFTE-BSNL   highlighted the Bonus issue and assured the Employees the payment of minimum Bonus   even if company runs on loss by changing the Bonus formula which was agreed by BSNLEU.

               NFTE-BSNL  has already written letter to CMD BSNL demanding payment of minimum Bonus for our Employees and preparing for a joint struggle on this  crucial issue since ”Pooja” holidays are fastly approaching. But suddenly the leadership of BSNLEU embarked on agitations unilaterally without consulting NFTE-BSNL, FNTO  and other Unions/Associations only for publicity and propaganda. NFTE_BSNL sincerely believe that  only a united struggle under the banner of Forum could force the management to change Bonus formula  and ensure the payment of Bonus for our Employees/ Executives atleast this year. Whether  BSNLEU will rethink?

C.K.Mathivanan, CS

Wednesday, August 21





          
                                                     இலக்கிய பேராசான்
                               ஜீவா 107வது பிறந்த நாள்

              தமிழ் ஆட்சிமொழியாகவேண்டும் ; சென்னை மாகாணத்திற்கு  " தமிழ்நாடு " என்று பெயர் சூட்ட வேண்டும் என்று சட்ட சபையில் முழங்கியவர் ஜீவா.

" ஜனசக்தி "யை தொடங்கி அதன் ஆசிரியராகவும் பொறுப்பேற்று தமிழக அரசியலில் தடம் பதித்துச் சென்றவர் ஜீவா.

தரமான இலக்கியத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வதற்காக ' தாமரை "இதழை தொடங்கியவர் ஜீவா.

அனைத்து முற்போக்கு கலைஞர்களையும் ஒன்றிணைப்பதற்காக "தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் " என்ற அமைப்பை உருவாக்கியவர் ஜீவா.

    இயக்க கட்டுப்பாடு என்பதை கண்ணிண் மணிபோல காத்தவர் தோழர் ஜீவா. ஒருமுறை கட்சி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தபோது, கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல எனக்கு மனமில்லை, ஆகவே கட்சி அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியை எனக்கு தாருங்கள் ; அதை செய்கிறேன் என்று சொல்லி பணியாற்றியவர் ஜீவா.

தேசபக்தர்களுக்கும் சுயமரியாதை சிந்தனையாளர்களுக்கும் பொதுவுடமையாளர்களுக்கும் இன்றும் கலங்கரை விளக்கமாக திகழ்பவர் ஜீவா.

குரங்கு கையில் பூமாலை!!!


                                              
 குரங்கு கையில் பூமாலை என்பது ஒரு பழமொழி.......பூமாலை என்பது எல்லோரும் விரும்புவது. மிகவும் நறுமணம் மிக்கது.ஆனால் குரங்கு கையில் அது கிடைத்து விட்டால் அது யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்.

  அதுபோல சில நல்ல விஷயங்கள் ஒரு சிலரின் கையில் சென்று விட்டால் அது யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்.

78.2 பிரச்னை அப்படித்தான். Fix it Right First Time  என்று ஆங்கிலத்தில் சொல்வது போல 1-1-2007ல் லாபம் வரும்போது அதை வாங்காமல் கோட்டை விட்ட காரணத்தால் இன்று அது சின்னா பின்னமாகி விட்டது. முதலில் அரியர்ஸ் இல்லை என்று சொன்னார்கள், பிறகு அதற்கு HRA AND ALLOWANCES கிடையாது என்று சொன்னார்கள்..... தற்போது அது பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பொருந்தாது என்று சொல்கிறார்கள்......... இந்த உண்மைகளையெல்லாம் நாம் அம்பலப்படுத்தினால் ஒரு சிலருக்கு கோபம் வருகிறது. ஆனால் எட்டு ஆண்டு ஒரு சங்க அங்கீகாரம் என்பது நமக்கு பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

        சொன்னால் வெட்கமடா ! சொல்லாவிட்டால் துக்கமடா !!                              
செய்தி ; கோவை வலைத்தளம்...........

Saturday, August 17


இளையவர்களுக்கு 78.2
மூத்தவர்களுக்கு 111


78.2 சத IDA இணைப்பு என்பது 10/06/2013 தேதியில் 
இருந்து மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ளதால்
01/01/2007ல் இருந்து 09/06/2013 வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு
  78.2 சத IDA இணைப்பு வழங்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை என BSNL நிர்வாகம் DOT க்கு பதில் அளித்துள்ளது.

உரிய வாதங்களும் உரத்த குரலும் எழுப்பப்படாமல் 78.2 நமது
மூத்த குடிமக்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
குறைந்த பட்சம் உடன்பாடு கையெழுத்தான 12/06/2012ல் இருந்தாவது ஓய்வு பெற்றவர்களுக்கு  78.2 உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டியது BSNL நிர்வாகத்தின் கடமையாகும்

காரைக்குடி வலைத்தளம் ..........

Thursday, August 15

சிதைந்து போன கனவுகள் ?


நாம் அறுபத்தி ஏழாவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த தருணத்தில் 1947 வருடத்திலிருந்து ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுபற்றி சிறிது பரிசீலனை செய்வது நல்லது. சுமார் நம்மை ஐம்பது வருடங்களாக ஆண்ட காங்கிரஸ் கட்சி ஒருவேளை சோறு கூட இல்லாத ஏழை மக்களைப் பற்றி இப்போதுதான் நினைக்க ஆரம்பித்திருக்கிறது.

நம் நாட்டின் பொருளாதாரம் டாக்டர்.மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளின் வழிகாட்டுதலில் மிக மிக மோசமான நிலைமையை அடைந்துள்ளது. ஒருகிலோ வெங்காயத்தின் விலை கிலோ எண்பது ரூபாயும் வார வாரம் பெட்ரோல் டீசல் விலையேற்றமும் அத்தியாவசிய பொருள்களின் விண்ணை முட்டும் விலையும் சாதாரண மனிதனை கடுமையாக பாதித்துள்ளது.

நாம் சுதந்திரம் அடைந்த 1947-இல் ஒருரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு சமமாக இருந்த நிலைமை மாறி இன்று ஒரு டாலர் அறுபத்திஒரு ரூபாய்க்கு ஆகி உள்ளது.

இருபது வருடத்திற்கு முன்பு திரு.நரசிம்மராவ் அவர்களால் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நம்மை சொர்கத்திற்கே அழைத்துச் செல்லும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று ஏழைக்கும் பணக்காரணக்கும் உள்ள இடைவெளி பெரிதானதுமட்டுமல்லாமல் வேலையில்லா திண்டாட்டம் நம்மை பயமுறுத்துகிறது.

சுருக்கமாக சொல்லப் போனால் ஏழை மேலும் மேலும் பிச்சைகாரனாகவும் பணம் படைத்த பெரு முதலாளிகள் மேலும் மேலும் செல்வத்தை குவித்தவண்ணமும் உள்ளனர். இதுதான் நாம் காந்தி போன்ற தேசத் தலைவர்களால்  பெற்ற சுதந்திரத்தின் பலன்.

சுதந்திரத்தின் பலன் என்பது நம்முடைய நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான ஏழைகளின் வாழ்வை உயர்த்தி அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வருவது நமது தலையாய கடமை ஆகும்.

நம்முடைய சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்க வந்துள்ள பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் நமது அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள் இவற்றிலிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை  காப்பாற்றுவது நமது உடனடி வேலையாகும்.


--கட்டுரை : தோழர்.C.K.மதிவாணன், NFTE-BSNL , அகில இந்திய உதவி பொதுச் செயலர். 15/08/2013

சுதந்திர தின வாழ்த்துக்கள் !!!!!!!!



Tuesday, August 13


ONGC நிறுவனத்தில் VRS !!!

ONGC  நிறுவனத்தில் VRS அறிவிக்கப்பட்டுள்ளது

அதன் சில சிறப்பு அம்சங்கள்:

1.40 வயது அல்லது 15 வருட சர்வீஸ் .

2. EX-GRATIA தொகைஇதுவரை சர்வீஸ் செய்த வருடங்களுக்கு வருடத்திற்கு 60 நாள் சம்பளம் அல்லது மீதி இருக்கும் வருடங்கள் X VRS APPLY MONTH சம்பளம் எது குறைவு அந்த தொகை (Salary Means only Basic Pay + DA only)
(VRS= 60 day Salary x total years of service
(OR) VRS apply on date salary x Balance months
whichever is less)

மற்றபடி GPF, Leave Encashment, Commutation, கிராஜுவிட்டி  முதலியன வழக்கம் போல் தரபடும்.

தொழர்களே , இதேபோல் நமக்கும் வருமா? என்று கேட்டால் தெரியாது. நம்மை பொறுத்தவரை VRS அனைத்து சங்ககளாலும் கடுமையாக எதிர்க்கபடுகிறது ?

Sunday, August 11

CBI raids the Residence of former CGM, M.P.Veluchamy on 08/08/2013:


       A CBI taem from  New Delhi raided the residence of Shri M.P.Veluchamy at his  native place Salem in connection with the illegal provision of 323 ISDN lines at the residence of former telecom minister Dayanidhi maran which was allowed to be misused by SUN TV Network owned by Shri Kalanidhi Maran there by causing Rs 400 Cr revenue loss to BSNL, Chennai telephones. When the raid took place it seems to be Shri Veluchamy was not at his residence but staying in his son’s house at USA. The CBI  search team took away several important documents and sealed the the residence after pasting a notice on the door with instructions to Shri Veluchamy to report immediately at the New Delhi CBI head quarters on his arrival from  America.

   During Oct-2011 our circle union conducted a protest demonstration in front of the CGM office to oppose the activity of Shri M.P. Veluchamy   even after  his retirement  he was allowed to freely move to the CGM  chamber and to destroy the vital documents regarding the illegal provision of 323 ISDN lines at the residence of former telecom minister Dayanidhi Maran. The management instead of stopping this malpractice unleashed  victimization on the protest. Nearly 70 comrades were issued with FR-17A with break in service punishment. Com. C.K.Mathivanan who lead the agitation was charged with Rule-36 of CDA rules for Maximum punishment. An enquiry was conducted against him and his retirement benefits with held till this date and the disciplinary case against him is pending at  Corporate office.

           Atleast now the CBI has acted and vindicated our charges against Shri. M.P. Veluchamy, former CGM, Chennai telephones.  When all union at every level on this loot of BSNL kept silent and we are proud that our circle union highlighted this issue due to which action is being   initiated  on this fraud.

Friday, August 9








 சென்னை தொலைபேசியின் முன்னாள் தலைமை மேலாளர் திரு.M.P.வேலுச்சாமி அவர்களின் வீட்டை CBI அதிகாரிகள் திரு.தயாநிதி மாறன் வீட்டிற்கு 323 ISDN இணைப்புகள் வழங்கிய புகார் சம்மந்தமாக சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு தஸ்தாவேஜ்களை கைப்பைற்றினர். வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
     2011 அக்டோபரில் நம்முடைய மாநிலச் செயலர் தோழர்.C.K.மதிவாணன் தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். எதற்காகத் தெரியுமா? தயாநிதி மாறன் வீட்டிற்கு சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட 323 ISDN இணைப்புகள் சம்மந்தமான CBI விசாரணை துவங்கிய நேரத்தில் திரு.வேலுச்சாமி பணி ஓய்வில் சென்றபிறகும் CGM அலுவலகத்திற்கு வந்து முக்கியமான கோப்புகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதை அப்போதைய பொது மேலாளர் திரு.A.சுப்ரமணியன் கண்டும் காணாமல் அனுமதித்தார். இந்த மோசடியை கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற நிர்வாகம் 70க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு FR17-A விதியின் கீழ் சேவை முறிவு தண்டனையை தந்தது. தோழர். C.K.மதிவாணன் மீது மட்டும் CDA விதி 36 பிரிவின் கீழ் விசாரணை என்ற நாடகம் நடத்தப்பட்டு அவர் பணிஓய்வு பெற்றபோது ஓய்வுகால பலன்கள் கிடைக்காதவாறு முடக்கப்பட்டது.
     தோழர். C.K.மதிவாணன் 30/6/2013 பணிஓய்வு பெற்றபோதிலும் இன்றுவரை அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய ஓய்வுகாலப் பலன்கள் திட்டமிட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
     எனினும் காலம் கடந்த பிறகாவது நமது குற்றச்சாட்டில் உள்ள நியாயத்தை CBI –இன் இன்றைய Raid-உம் வீட்டை சீல்செய்த நடவடிக்கையும் நீரூபித்துள்ளன. அந்த வகையில் நமது மாநிலச் சங்கத்தின் முன்முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. இந்த பிரச்சனையில் வேறு எந்த அகில இந்திய சங்கமும் ஏன் எந்த மாநிலச் சங்கமும் எடுக்கத் துணியாத நடவடிக்கைகளை அசாத்திய துணிச்சலுடன் மேற்கொண்ட தோழர். C.K.மதிவாணன் அவர்களின் தனிப்பட்ட முயற்சிகளுக்கு நிச்சயம் வெற்றி இறுதியில் கிடைத்தே தீரும் என்று உறுதியாக நம்புகிறோம்.


--NFTE-BSNL , சென்னை காஞ்சி மாவட்டச் சங்கம்.

Thursday, August 8

 Financial Assistance for implementing VRS in BSNL/ MTNL:
          It is reliably learnt that the Government has agreed to extend financial help for implementing the VRS scheme(Retrenchment Scheme) for employees in BSNL/MTNL.


Internal Meeting of the CHQ office bearers:
       After the New Delhi Convention on  03/08/2013.  The 8 central office bearers including the President, GS   and  Dy-GS  and few Circle secretaries met Federation office on Saturday evening and Sunday morning to discuss some  urgent organizational issues and works demands.  After through discussion the following   decisions were taken.

    To demand change in the faulty Bonus formula and to ensure a minimum of one month salary as Bonus to our Employees without linking the same to profitability since BSNL is a unique PSU where revenue loss is caused due to the decisions of Govt of India.
     After the implementation of 78.2% IDA merger with effect from 10/06/2013 many Gr.D Employees wage reduction and huge recoveries. Many Employees also started stagnating in their pay as  they reached their maximum of their scale. This issue will be discussed first with the management and then struggle will be  discussed  first with the management and then struggle will be organized if necessary.
     Extension of 30% fitment benefit for the left out employees who are facing discrimination in pay  and allowances as they were recruited after 01/10/2007. Even though   a high power committee has been formed to review this matter NFTE will spare no effort to settle this vital issue which causing concern among the all direct recruited   employees.

                 The internal meeting noted the agitational program decided by united forum independently and decided to write the leadership of the BSNLEU   to have a joint struggle along with NFTE-BSNL as most of the issues are   common in nature. However it was also decided that incase BSNLEU does not show any interest for joint struggle NFTE-BSNL will plan its own struggle on the urgent and long pending issues of the employees independently after discussing the whole thing in the next National Executive Committee   meeting.

பொது வாழ்வில் நேர்மை, தூய்மை அவசியமன்றோ !


பாரம்பரியமிக்க தமிழக NFTE-BSNL மாநில சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் தோழர் H.நூருல்லா அவர்களின் மீது ஊழல், சங்க நிதியை கையாள்வதில் முறைகேடு செய்ததாக சேலம் மாவட்டதிலிருந்து  முக்கியமான தோழர் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டை அச்சில் அடித்து வெளியிட்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றோம்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும் என்ற நீதிக்கு ஏற்ப, தமிழ் மாநில சங்கத்தின் பெருமைமிகு மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள தோழர் நூருல்லா, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தானே முன்வந்து உரிய விளக்கங்களை அளித்தால் அவர் வகிக்கும் பதவியின் மாண்புக்கு பங்கம் வராமல் தடுத்திட இயலும் என்று நம்புகிறோம்.

மாவட்ட சங்கத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தில் பாதியை தனது மகன் பெயரில் பத்திர பதிவு செய்துவிட்டு மீதியை  சங்கத்தின் பெயரில் பதிவு செய்ததாக அந்த நோட்டீசில் குற்றச்சாட்டப் பட்டுள்ளது. தனது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்ட அந்த பாதி நிலத்தை பின்னாளில் விற்று காசாக்கி விட்டதன் மூலம்  சுமார் 15 லட்சம் ரூபாய் லாபமடைந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இது தவிர கடந்த பல ஆண்டுகளாக ஊழியர்களிடம்  கோவை மாநில மாநாட்டிற்காகவும் வேறு சமயங்களிலும் வசூலித்த நன்கொடைகளுக்கும், காண்ட்ரேக்ட் ஊழியர்களிடம் வசூலித்த தொகைக்கும் கணக்கு  எதையும் காட்டியதாக வரலாறே இல்லை என்றும் .வரவு செலவு கணக்கு என்பதே அவர் சொல்வதுதான் என்ற அவல நிலை அம்மாவட்டத்தில் நிலவுவதாக  சேலம் தோழர்கள் குமுறுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 

கடலூரில் நடக்காத முறைகேட்டிற்கு விசாரணைக்குழு அமைத்த மாநிலச் செயலர் தோழர் ஆர்.பட்டாபிராமன், அவருடைய மாநிலத்  தலைவர், சேலம் மாவட்டத்தில் பெரும் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருப்பது கண்டு மௌனம் சாதிப்பது ஏனோ ?

மாநிலத் தலைவரின் மீது கூறப்பட்டுள்ள மோசடி புகார் குறித்து விசாரிக்க உடனடியாக ஒரு நடுநிலையான, நம்பகத்தன்மை கொண்ட விசாரணைக் குழுவை மாநிலச் செயலர் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

  மாநிலத் தலைவர் நூருல்லா அவர்களும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள  மோசடி புகார் மீதான விசாரணை முடியும் வரை அவர் வகிக்கும் தலைவர் பதவியிலிருந்தும், சேலம் மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்தும் விலகி நின்று ஒரு சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்பதே நியாயமான அணுகுமுறையாக இருக்கும்.

  ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஏன், நிர்வாகத்தின் ஊழல் பற்றி வெளிச்சம் போட்டு காட்டும் தொழிற்சங்கம், தன்னிடத்தில் எழும் முறைகேடுகளை மூடி மறைத்திட முயன்றால், தொழிற்சங்கத்தின் மீதான நம்பகத்தன்மை கெட்டுவிடும் அல்லவா ?
                  
            ஆகவே மாநிலச் செயலர் உடனே நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் !
                                              செய்தி ....கோவை வலைத்தளம்

ஓய்வூதியதாரர் குடும்ப நிதி ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு!!


ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது அவர்களது வாரிசுகளுக்கு ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு வரும் நிதி உதவியை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.

ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து, ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 2

அமெரிக்க மேயர் பதவிக்கு போட்டியிடும் சென்னை பெண்!!
                  


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் பதவிக்கு சென்னை பெண் ஒருவர் போட்டியிடுகிறார்.

சென்னையில் பிறந்த சுஜா லொவெந்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள லாங் பீச் நகர மேயர் பதவிக்கு 5 வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறார்.

லாங் பீச் மாநகராட்சி உறுப்பினராக தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவி வகிக்கும் சுஜா லொவெந்தால், பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

2001 ஆம் ஆண்டு லாங்பீச் கல்வி துறையின் முக்கிய பொறுப்பை இவர் வகித்தபோது அந்த மாவட்டம், அமெரிக்காவிலேயே நகர்புற பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது.