WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, August 25

கூரை ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்?

 கடந்த 23/08/2013 அன்று BSNLEU தனது பரிவாரங்களுடன் 27 கோரிக்கைகளை வைத்து தர்ணா நாடகத்தை அரங்கேற்றியது. எப்போதும்போல நிர்வாகமும் தொழிலாளர்களும் இதனை கண்டுகொள்ளவில்லை.

அந்த கோரிக்கைகளில் உள்ள முக்கியமான போனஸ் வேண்டும் என்பது அனைத்து ஊழியர்களுக்கும் பொதுவான ஒன்று. அதனை பெற அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து செய்யாமல் தான் மட்டும் செய்தது ஏன் என்ற காரணம் நமக்கு புரியவில்லை. ஒருவேளை BSNLEUதலைமை அந்த கோரிக்கைகளை வென்றெடுப்பதைவிட அதன்மீது தான் அக்கறை இருப்பதுபோல காட்டினால் போதுமானது என்று நினைத்திருப்பார்கள்.

தபால் தந்தி ஊழியர்கள் வரலாற்றில் தலைவர்கள் ஞானையா மற்றும் குப்தா உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வேண்டும் என்று கூறியபோது நம்பூதிரி போன்றவர்கள் அதனை எள்ளி நகையாடியது மட்டுமல்லாமல் அதனால் எதிர்காலத்தில் போனஸ் என்பது இல்லாமல் போகும் என கூக்குரல் இட்டனர். போனஸ் என்பது “கொடுபடா ஊதியம்” என்று கோஷம் எழுப்பினர்.

2004-இல் அங்கீகாரத்தை பெற்ற இவர்கள் போனஸை இலாபத்துடன் இணைந்த போனஸாக பெற கையெழுத்து இட்டனர். “போனஸ் என்பது கொடுபடா ஊதியம்” என்ற கோரிக்கையை வங்காள விரிகுடா கடலில் போட்டனர்.  நம்பூதிரி செய்த இந்த மாபெரும் தவறால் நாம் கடந்த மூன்றுவருடங்களாக போனஸ் என்பது மறந்து போகும், நிலைக்குத் தள்ளப்பட்டோம். கடந்த 9 வருடங்களாக நிர்வாகம் சொன்ன “லாபம் இருந்தால் போனஸ்” என்ற கோட்பாட்டை BSNLEU எந்த மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டது.

ஆனால் எந்தவித அங்கீகாரம் இல்லாவிட்டாலும் NFTE-BSNL இலாபம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருமாத சம்பளம் போனஸாக தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டு இருந்தது. கடந்த சரிபார்ப்பு தேர்தல் பிரச்சாரத்தின் போது NFTE-BSNL போனஸ் பிரச்சனையை முன்வைத்து பிரச்சாரம் செய்தது. NFTE-BSNL அங்கீகாரம் பெற்றால் BSNLEU போட்ட போனஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இலாபம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் “ ஒருமாத சம்பளம் போனஸ் தரவேண்டும்” என்ற ஒப்பந்தம் போடப்படும் என்று உறுதி அளித்தது.

NFTE-BSNL இதுகுறித்து நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது. வரும் தசாரா பண்டிகைக்கு முன்னால் போனஸ் தர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி உள்ளது. இந்த சூழலில் BSNLEU சங்கம்  NFTE-BSNL, FNTO மற்றும் அதிகாரிகள் சங்கம் இவர்களை கலந்து ஆலோசிக்காமல் தனிஆவர்த்தனம் பாடியுள்ளது. இதிலிருந்து இந்த தர்ணா விளம்பரத்திற்காக செய்த ஒன்று என்று தெரிய வருகிறது.

நம்மை பொறுத்தவரை அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு மாபெரும் போராட்டம் செய்தாலே அன்றி கோரிக்கைகளை வென்று எடுப்பது கடினம் என்று கருதுகிறோம். அப்போதுதான் நிர்வாகம் அடிபணிந்து போனஸிற்கான புதிய உடன்படிக்கை போடும்.

இப்போதாவது BSNLEU மறு யோசனை செய்யுமா?


C.K. மதிவாணன், மாநிலச் செயலர்

No comments:

Post a Comment