தோழர் சி.ராஜேஸ்வர ராவ் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் தலைவரின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு முழுவதும் நாடெங்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களால் கொண்டாடப்படுகிறது.
அவரது வாழ்வு, உண்மையான கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஒரு வழிகாட்டியாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியில் 1950 ஏற்பட்ட திடீர் திருப்பம் காரணமாக பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கபட்டார். கடும் பணியாற்றி கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு போராடும் மக்கள் இயக்கமாக மாற்றினார்.
1951ல் மீண்டும் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது.தோழர் C.R அவர்களுக்கு பதிலாக தோழர் அஜாய் கோஷ் புதிய பொது செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
உடனே C R கட்சியை விட்டு விலகவில்லை; கட்சியையோ, புதிய தலைவரையோ கேவலமாக பேசவில்லை......
அதற்கு மாறாக புதிய தலைமையின் வழிகாட்டுதலை, காட்டில் இருந்த கேடர்களை சந்தித்து விளக்கி ஏற்க வைத்தார்.......மீண்டும் ஆந்திர மாநிலச் செயலராக பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்றி படிப்படியாக முன்னேறினார். 1964ல் மீண்டும் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1990 வரை சிறப்பாக செயலாற்றிவிட்டு 1990ல் உடல்நலம் காரணமாக அந்த பதவியிலிருந்து தானே விலகினார்.
No comments:
Post a Comment