நமது மாநிலச் சங்க செயலாளரை காரணமே இல்லாமல் கீழ்த்தரமாக விமர்சிப்பதையே தனது அன்றாட இணையதள பணியாகச் செய்து கொண்டு இருக்கும் ஒரு கிறுக்கனுக்கு பதில் தரவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டதில் சிறிது வருத்தம்தான் என்றாலும் அந்த
கிறுக்கன் உளரல்களை வெறுமெனே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கவும் இயலவில்லை. செஞ்சோற்று கடன் தீர்க்க அவன்
எவரையும் பல்லக்கில் சுமக்கட்டும். அதுபற்றி நமக்கு அக்கறையில்லை.
ஆனால் “ NFTE சங்கத்தின் ஓய்வு அறியா போராளியை” கேவலமாக சித்தரிப்பதை அவன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காரைக்குடியின் சம்பவங்கள் அம்பலமாகும்.
இந்த கிறுக்கனின் ஆதர்ஷ புருஷர் R.K.
NFTE சங்கம் அங்கீகாரம் இல்லாமல் எட்டு ஆண்டாய் அவதிப்பட்டபோது யோகா மாஸ்டர் ஆகி தொழிற்சங்க அரங்கிலிருந்தே காணாமல் போய்விட்டதை மறக்க முடியுமா? ஆனால் இன்று அவரின்றி தமிழ்நாட்டில் அணுவும்
அசைவதில்லையாம்! ஏன் இந்த மாற்றம்?
NFTE -க்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டதால்தானே?
ஓடி ஒளிந்திருந்தவர்கள் எல்லாம்
“பயந்து பதுங்கி” கிடந்தவர்கள் எல்லாம்
இன்று மேடையேறி
சண்டப்பிரசங்கம் செய்கின்றனர். தமிழகதில் NFTE சங்கத்திற்கு வாக்கு
அளியுங்கள் என்று சொன்ன அதே திருவாயால் சென்னை தொலைபேசியில் அதுவும் குறிப்பாக STR பகுதியில் கோலி சங்கத்திற்கு
ஆதரவு திரட்டிய R.K-யின் அடாத செயல்
இரட்டை வேடமா?அல்லது பச்சை துரோகமா?.
மதுரை மாநில மாநாட்டுக்கு சில வாரங்களுக்கு முன்பு வரை “ பட்டாபி ஒரு பொட்டை” என அர்ச்சனை செய்துவிட்டு
தீடீரென்று அந்தர்பல்டி அடித்து அதே பட்டாபிக்கு பட்டாபிஷேகம் செய்திட RK முன் வந்ததற்கு
எது காரணம்?
பதவி வெறியில்,
வளர்த்த இயக்கத்திற்கு துரோகம் இழைத்தகூட்டம்
வந்த உயர்பதவியைகூட
இயக்கத்தின் ஒற்றுமைக்காக ஏற்க மறுத்து ஒதுக்கி தள்ளிய
“தோழர்.C.K.M "
அவர்களை பார்த்து ஏளனம் செய்வதா?
தோழர்.C.K.M பணிஓய்வு பெற்ற பின்னாலும் இதுநாள்வரை அவரது
ஓய்வு ஊதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது நிர்வாகத்தின்
பழி வாங்கும் செயலே.
இதனை கண்டிக்க மனமில்லாவிட்டாலும்
பரவாயில்லை;
“மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும்” பரவாயில்லை;
இந்த சோ”மாரி” கள் தொழிற்சங்க தலைவர்களாக அரிதாரம் பூசிக் கொள்வது இனியும் தேவைதானா?
பட்டாபி மாநிலச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இன்றுவரை
ஒருமுறையாவது மாநில/மாவட்ட நிர்வாகத்தின் ஊழல் முறைகேடுகளை எதிர்த்து போராடி இருப்பாரா? எல்லோரிடமும் நல்லபெயர் வாங்குவதில்தானே அவருக்கு ஆகப்பெரிய அக்கறை.
BSNL நிறுவனத்தை ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட பேர்வழிகள்
கொள்ளை அடித்ததை பட்டாபி அல்ல, நமது அகில இந்திய சங்கம் அல்ல
வேறு எந்த சங்கமும் கூட எதிர்க்க தயங்கி
கள்ள மவுனம் சாதித்தபோது
தன்னந்தனியாக துணிச்சலுடன்
இந்த கொள்ளையர்களை எதிர்த்ததால்தானே தோழர்.C.K.M இன்று நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டுள்ளார்.
ஒரு ஆர்ப்பாட்டத்திற்காக பென்ஷனை வெட்டுவதா? பென்ஷன் சலுகைகளை நிறுத்தி வைப்பதா? என இந்த போலிகள் பொங்கி எழ வேண்டாம்.குறைந்தபட்சம் நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டிருப்பதை
பரிகசிக்காமல் இருக்கலாமே?
எவர் காலையும் நக்கி அந்த கிறுக்கன் காரைக்குடியிலேயே காலம் தள்ளட்டும்.எவருக்கும் வால்பிடித்து தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளட்டும். நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால்
NFTE சங்கத்தின்
வளர்ச்சிக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் ஓய்வின்றி பாடுபட்டு கொண்டிருக்கிற
தோழர்.C.K.M அவர்களை
கீழ்த்தரமாக
விமர்சிப்பதை அந்த கிறுக்கன் இனியும் தொடர்ந்தால் உரிய மருத்துவ
சிகிச்சைக்காக நாமே அவனை அனுமதிக்க வேண்டியிருக்கும்.
--S.ஏகாம்பரம், மாவட்டச் செயலாளர்
NFTE-BSNL காஞ்சிபுரம் மாவட்டம்
சென்னை தொலைபேசி
No comments:
Post a Comment