WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, August 30

மரம் சும்மா இருக்க விரும்பினாலும்
           காற்று சும்மா இருக்க விடுவதில்லை......  


அதுபோல கொங்குநாட்டார் பண்புக் கிணங்க
மரியாதையோடு நாம் பணியாற்ற முயலும்போது
காரணமின்றி நம்மை வம்புக்கு இழுக்கின்றார்.......
கொங்கான் என்று அடைமொழி வைத்து

வம்புக்கு நாம் போவதில்லை; வம்புக்கு வந்தால் விடுவதில்லை;

காரைக்குடி காமாட்சியும் நம் தோழனே !!
அவருக்கும் நாம் குரல் கொடுப்போம் !!

காமாட்சியின் பேராலே உண்மையான மாவீரனை
கொச்சைப்படுத்த முயல்வதேன் !!

தங்களால்தான் இமாலய ஊழலை தட்டிக் கேட்க முடியவில்லை !
தட்டிக் கேட்டவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதேன் ?

தனது சொந்த நலனுக்காக JE போஸ்டிங் வேண்டாம் என்றதையே
ஏதோ மிகப்பெரிய தியாகம் போல சித்தரிப்போர்,

ஊழலை வெளிக்கொணர தோழர் மதி மேற்கொண்ட
போராட்டத்திற்கு பிரதிபலனாக பென்சன் மறுப்பு, DCRG மறுப்பு
போன்றவற்றை நிர்வாகம் திணிக்க முற்படுவதை
கேலி பேசுவதேன்.........


ஒரு ஆர்ப்பாட்டத்திற்காக பென்ஷனை வெட்டுவதா? பென்ஷன் சலுகைகளை நிறுத்தி வைப்பதா? என இந்த போலிகள் பொங்கி எழ வேண்டாம்.குறைந்தபட்சம் நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டிருப்பதை
பரிகசிக்காமல் இருக்கலாமே?

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்
என்று கவிதை இயற்றினார்  கவிக்கோ கம்பர் !!

பிள்ளையார் பட்டியில் ; " கல்யாணம் செய்த உடனே டைவேர்ஸா"
என்ற காரைக்குடியார் , மனசாட்சியை அடகு வைத்து
திடீரென்று குட்டிகரணம் அடித்ததேன் ?
பெற்ற கடனுக்காகவா ?
பதவி ஆசையாலா !!  பட்டம் பெற்றிடவா !!

  " அவர் " செயல்பாடற்றவர் ........உப்புசப்பற்ற  அந்த பத்திரிக்கையை எனக்கு இனி அனுப்பாதே என்று கூறி விட்டேன் "
என்று தமிழகமெங்கும் பறைசாற்றியவர்
இன்று திடீர் பல்டி அடித்து பொன் விழா என்று பறப்பதேன்...
பதவி ஆசையாலா !!  பட்டம் பெற்றிடவா !!

ஸ்கூட்டர் அட்வான்ஸ் பெற்றதில் முறைகேடு என்று
சாதாரண விஜிலென்ஸ் விசாரணைக்கே 
அஞ்சி நடுங்கியவர்க்கு
மாவீரன் மதிவாணண் அவர்களை கேலி பேச
அருகதை உண்டா என மனசாட்சியை தொட்டு பதில் சொல்லட்டும் !
 

செய்தி கோவை வலைத்தளம் ............

No comments:

Post a Comment