WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, November 21

ஒடுக்கப்பட்டது ‘சமூகங்கள்’ மட்டுமல்ல... ஏரிகளும்தான்!


ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
சேலத்தில் அரசை எதிர்பார்க்காமல் மக்களே நீர் நிலைகளை சீரமைத்த வரலாற்றைப் பார்த்தோம். உண்மையில் தொடக்கக் காலத்தில் ஏரிகள், குளங்கள் அனைத்தும் மக்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. இவை ஊர் பொது சொத்தாகக் கருதப்பட்டன. ‘மடையர்கள்’ என்றழைக்கப்பட்ட மடைக் குடும்பத்தினர் மட்டுமின்றி குளத்துப் பள்ளர்கள், குளக் காப்பாளர்கள், நீராணிக்கர்கள், நீர்க்கட்டியார், கரையார் ஆகியோரும் நீர் நிலைகளைப் பராமரித்தனர்.

வெள்ளக் காலங்களில் இந்த நீர் நிலைகளின் உடைப்புகளை அடைக்கச் சென்று உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நஷ்ட ஈடாக நிலம் கொடுக்கப்பட்டது. அதன் பெயர் உதிரப்பட்டி. கி.பி. 1302-ல் ராமநாதபுரம் மாவட்டம், கருங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டபோது அதை அடைக்கச் சென்ற பெருந்தேவப் பள்ளன் வெள்ளத்தில் இறந்தான். அவனது தியாகத்தைப் போற்றும் வகையில் அவனுக்கு நினைவுக் கல்லை நட்டு உதிரப்பட்டி நிலமும் அளிக்கப்பட்டது. இந்த விவரங்கள் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ‘தமிழ்நாட்டு வரலாறு பாண்டியர் பெருவேந்தர் காலம்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த நீர் நிலைகள் மக்கள் கையில் இருந்தவரை மட்டுமே நன்றாக இருந்தன. என்றைக்கு அவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதோ அன்றே அவற்றின் அழிவுக் காலம் தொடங்கியது. ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு தொடங்கியதும் அப்போதுதான்.

தொடக்கக் காலத்தில் குடும்பங்களுக்கு என தனி சொத்து இல்லை. நீர், நிலம், வனம் எல்லாம் சமூகத்துக்குப் பொதுவானது. பிறகு இது மெல்ல மாறியது. ஊர்களை உள்ளடக்கிய நாடுகள் உருவாயின. வேளாண்மை மரபினரிடம் இருந்த ஊர் நிர்வாகம் போர் மரபினருக்குச் சென்றது. படைத் தலைவர்கள் வரி வசூலித்தார்கள். இவர்களுக்கு விவசாயம், பாசனம், நீர் நிலை பராமரிப்பு பற்றித் தெரியாவிட்டாலும் நீர் நிலைகளின் அருமைகளை அறிந்திருந்தனர். புதிய நீர் நிலைகள் தொடர்ந்து உருவாக்கினார்கள். இது தவறிய இடங்களில் மக்கள் மன்னனிடம் முறையிட்டு முடிந்தவரை பாசன அமைப்புகளைப் பாதுகாத்தார்கள்.

பின்பு ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. நமது பாரம்பரியப் பராமரிப்பு முறைகளை ஒட்டு மொத்தமாக ஒழித்துக்கட்டியது அவர்கள்தான். தமிழகத்தில் ‘ரயத்துவாரி’ முறை அமல் படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு நில உரிமை அளிக்கப்பட்டது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், வனங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசு சொத்துகளாக மாற்றப்பட்டன. மலைகளில் வனங்கள் அழிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் மலைவாசஸ்தலங்களாகவும் தேயிலைத் தோட்டங்களாகவும் மாற்றப்பட்டன. மலைகளில் இருந்த நீர் வழித்தடங்கள் அழிந்துப்போயின. சமவெளிகளில் இருக்கும் நீர் நிலைகளுக்கான நீர்வரத்துக் குறைந்துப்போனது.

ஊருக்குள் நீர் நிலைகளைப் பராமரித்த மடையர்கள், பள்ளர்கள், நீராணிக்கர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். விவசாயிகள் விளை பொருளில் அவர்களுக்குப் பங்கு தரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. நீர் நிலைகளுக்கும் அவர்களுக்குமான உரிமை பறிக்கப்பட்டது. உயிரையே பறிகொடுத்ததுபோல துடித்தார்கள் அவர்கள். குளங்களையே குழந்தைகளாக பாவித்த சமூகம் பசியிலும் பஞ்சத்திலும் வாடியது. ஒருகட்டத்தில் வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைத்த வேலையைச் செய்யப் பழகிக்கொண்டன அந்தச் சமூகங்கள். தமிழகத்தின் நீர் நிலை சமூகங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்ட வரலாற்றுப் பிழை அரங்கேறியது அப்போதுதான்.

வருவாய் துறை உருவாக்கப்பட்டு ஏரிகள், குளங்கள் அந்தத் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்றன. அவற்றைப் பராமரிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு நமது பாரம்பரிய தொழில்நுட்பங்கள் புரியவில்லை. இதனால் ஏரிகளைப் பராமரிக்க ராணுவம் வந்தது. ராணுவப் பொறியாளர்களுக்கும் பிடிபடவில்லை நமது தொழில்நுட்பம். அவர்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏரிகள் வலுவிழந்தன. அடிக்கடி வெள்ளம் வந்தது. வறட்சி தலைதூக்கியது. 1850-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் இறந்தார்கள்.

நிலைமையை சமாளிக்க 1878-80ல் ஆங்கிலேய அரசு ஓர் ஆணையம் அமைத்தது. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் அரசு செப்பனிட வேண்டும். 200 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு கொண்ட ஏரிகளை அரசு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் குறைவான ஆயக்கட்டுகளைக் கொண்ட ஏரிகளை மக்களிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏரிகளைப் பராமரிக்க ஏரி மராமத்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொதுப் பணித்துறை உருவான வரலாறு இதுதான். இதன் நீட்சியாகவே இன்று 100 ஏக்கருக்கு அதிகமான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும் அதற்கும் குறைவான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் (மக்கள் பிரதிநிதிகள்) கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.

தொடர்ந்து 1858-ல் ‘சென்னை கட்டாய வேலையாட்கள் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்படி ஏரிகளைப் பராமரிப்பது உட்பட பாசனம் தொடர்பான அனைத்து வேலை களுக்கும் நிலம் வைத்திருப்பவர்கள் வேலையாட் களைக் கட்டாயமாக அனுப்ப வேண்டும். தவறியவர்களுக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய வேலையாட்களுக்கான கூலியில் இருமடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து 1901-ல் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

நாடு விடுதலை அடைந்தது. ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. அதிலும் அணை களைக் கட்டுவதற்கே முக்கியத்துவம் அளித்தார் கள். பாரம்பரிய ஏரிகள், குளங்கள் புறக்கணிக் கப்பட்டன. எரிபொருள் தேவைக்காக கருவேல முட்செடிகளை இறக்குமதி செய்தார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை ஏரிகள்தான். ஏனெனில் வற்றாத ஜீவ நதிகளைப் போன்று வற்றாத ஏரிகளும் உண்டு. 10 அடி ஆழத்துக்கும் அதிகம் கொண்ட ஏரிகளில் இயற்கையான ஊற்றுகள் இருந்தன. அவை கோடைக் காலங்களில் கொஞ்சமேனும் தண்ணீர் வைத்திருந்தன. அதுவும் வற்றினால் மக்கள் பள்ளம் பறித்து குடிநீர் எடுத்தார்கள். ஆனால், கருவேலம் முட்செடிகள் நிலத்தடி நீரை அதிவேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவை ரத்தத்தை உறிஞ்சுவதுபோல ஏரியின் நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சிவிட்டன. எதற்கும் பயனில்லாமல் போனது ஏரிகள். மக்களுக்கும் படிப்படியாக ஏரிகள் மீது பிடிப்பில்லாமல் போனது. ஒடுக்கப்பட்டது சமூகங்கள் மட்டுமில்லை, நீர் நிலைகளும்தான்!

Tuesday, November 17

BSNLEU சங்கத்தின் பொய் பிரச்சாரம்..........

சென்னை தொலைபேசி மாநிலத்தின் BSNLEU சங்கம் NFTE சங்கத்தின் மீது பொய் பிராச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதால் நாம் பதில் கொடுக்க வேண்டி உள்ளது. இது வருகின்ற 7வது சங்க தேர்தலை குறி வைத்து சொல்லப்பட்டது என கருதுகிறோம். நாம் ஒற்றுமை என்ற பதாகையின் கீழ் நின்றாலும் BSNLEU சங்கத்தின் பொய் பிரச்சாரத்தினை ஊழியருக்கு விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
1.    NFTE,FNTO and BTEF செப்டம்பர் 2௦௦௦ நடத்திய வரலாற்று சிறப்பு வாய்ந்த பென்ஷன் போராட்டம் காரணமாகவே நாம் பொதுத்துறை ஆனபிறகும் பென்ஷன் பெற்று வருகிறோம். அந்த போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் அபிமன்யு மற்றும் அவரது தொண்டர்கள். 08-09-2000 நடந்த அந்த போராட்டத்தில் அதனை போலிஸ் துணை கொண்டு உடைக்க ஐந்தாம்படை வேலையை செய்தனர். நூற்றுக்கணக்கான நம் தோழர்கள் அன்று கைது செய்யபட்டனர். அதன் காரனமாகவே நாம் இன்று அரசின் பென்ஷன் பெற்று வருகிறோம். எந்த பொதுத்துறையிலும் இது போல் நிகழ்வு நடந்ததில்லை. ஆனால்2004-ல் நாம் அங்கிகாரத்தை இழந்தபிறகு அந்த பென்ஷன் பிரச்சனையை நீர்த்து போகச் செய்தனர் BSNLEU சங்கத்தினர். 2006- ஆம் வருடம் நாம் 2000 போட்ட ஒப்பந்தமான பென்ஷன் அரசே தனது வைப்புநிதியிலிருந்து தரவேண்டும் என்பதை குலைக்கும் வண்ணம் போடப்பட்ட உத்தரவை எந்த எதிர்ப்பும் காட்டாமல் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். அந்த உத்தரவின்படி அறுபது சதவிதம் அரசும் மீதி நாற்பது சதவீதம்  BSNL லும் பென்ஷன் தரவேண்டும் என உத்தரவு ஆனது. இது ஒரு தவறான உத்தரவு என்பதை அன்று அங்கீகார போதையில் இருந்த அபிமன்யுவிற்கு ஏனோ புரியவில்லை. ஒன்பது ஆண்டு காலம் மௌனமாய் இருந்துவிட்டு இப்பொது திடிரென்று ஞானோதயம் தோன்றியது ஏனோ ?
2.    தலைவர் குப்தாவும்  ஞானய்யாவும் உற்பத்தியுடன் இணைந்த போனஸ் ஒப்பந்தத்தில் கையிழுத்து இட்டபோது அதனைதொழிலாளிக்கு எதிரானது என்று கூக்குரல் இட்டவர்கள் மோசமான இலாபத்துடன் இணைந்த போனஸ் ஒப்பந்தத்தில் கையிழுத்திட்டனர். அதன் பிறகே நாம் கடந்த ஆறு வருடமாக போனஸ் கிடைக்காத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். அதனை எதிர்த்து நம் பல்வேறு போராட்டங்களை செய்தபோது  இலாகாவின் நிதி நிலை சரியில்லை அதனால் போனஸ் கிடைக்காது என்று பிலாக்கினம் பாடினார்அபிமன்யுஅது நாம் நிறைய சம்பளம் வாங்குகிறோம் அதனால் போனஸ்கேட்பது சரியில்லை என்றார். இனி போனஸ் என்பது காலாவதியான ஒன்று என்று கூறினர். ஆனால் நாம் சென்ற முறை அங்கிகாரம் பெற்ற பிறகு அந்த பார்முலாவை மாற்ற ஒப்புக்கொண்டனர். இது  NFTE. – க்குகிடைத்த முதல் வெற்றியாகும்.
3.    சென்னை தொலைபேசியின் BSNLEU சங்கம் நாமும் FNTO சங்கமும்2000,-ஆம் ஆண்டில் பொதுத்துறையை ஆதிரித்த பாவத்தை கழுவவே இப்போது அதிகாரிகள் ஊழியர் கூட்டமைப்பில் சேர்ந்திருப்பாதாக வாய் கூசாமல் சொல்கின்றனர். இதனை நாம் சட்டை செய்ய தயாரில்லை.BSNLEU சங்கம் அகில இந்திய பொது செயலரும் அவருடைய மாநில செயலரின் கருத்தை புறக்கணிப்பார் என நம்புகிறோம். இது போன்று நம்மை எரிச்சல் அடைய செய்யும் கருத்துகளை சொல்லும் சென்னை தொலைபேசி BSNLEU மாநில செயலரால் நாம் இந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேற மாட்டோம். ஒற்றுமை குலைப்பு எங்கள் வேலைஇல்லை. வேறு வழில்லாமைல் பொய் பிரசாரத்தை முறியடிக்கவே இந்த கட்டுரை.


------ NFTE-BSNL  சென்னை தொலைபேசி மாநிலம்

தேவை சுயபரிசோதனை.........!

போனஸ் பற்றி இரண்டு செய்திகளை வெளிடிட்டிருந்தோம். அவை சிலருக்கு கோபத்தை  உருவாக்கியதாக அறிந்தோம்.
யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படவில்லை. ஊழியர் மனங்களில் உள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்துவது மட்டுமே நமது நோக்கமேயன்றி வேறேதுமில்லை.
போனஸ் பெற நமது NFTE இயக்கம் மேற்கொண்ட முயற்சிகளை நாம் அறிவோம்.
FORUM  சார்பாக ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற இயக்கங்களை நடத்தினோம்.
அதற்குப் பிறகு நமது இயக்கத்தின் சார்பாக போனஸ் தர வலியுறுத்தி நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் தரப்பட்டது.
மத்திய செயற்குழுவில் போனஸ் பிரச்னை  தலைவர்களால் விவாதிக்கப்பட்டு முடிவும் எடுக்கப்பட்டது.
அந்த முடிவையும் நமது சங்கம் நிர்வாகத்துக்குத் தெரிவித்தது

பூஜை முடிந்தது.
தீபாவளியும் முடிந்தது.
போனஸ் இன்னும் வரவில்லை.

“கொடுபடா ஊதியம்”
“உச்ச நீதிமன்ற ஆணை”
“DPE உத்தரவு”
போன்ற புறச்சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இருந்தன.
“800 கோடி கூடுதல் வருவாய்” என்ற அகச் சூழ்நிலயும் சாதகமாக இருந்தது.

இச்சூழ்நிலையில்,
“ஏன் போனஸ் பெற முடியவில்லை?”
என்பது குறித்து ஒரு சுயபரிசோதனை தேவை என்பதே நம் விழைவு.
இதை யார் செய்வது?
மத்திய சங்கத்துக்கு வழிகாட்டும் நமது தமிழ் மாநிலச் சங்கம் இந்த சுயபரிசோதனையைச் செய்து  மத்திய சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என தோழமையுடன் வேண்டுகிறோம்.                                      செய்தி :ஈரோடு வலைத்தளம்