WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, June 28

செம்மையாக  செயல்பட தொடர்ந்து குரல் கொடுப்போம்!!

அவையால் ஆய்படுபொருள் ஏற்கப் படாமல் நடத்தப்பட்ட ஒரு செயற்குழு, மாற்று கருத்தை மதிக்காமல் நடந்த ஒரு கூட்டம், மாற்று கருத்து கொண்ட பொறுப்பாளர்களை, தலைவர்களை அவதூறு செய்வதற்கு பெரும்பகுதி நேரத்தை எடுத்துக்கொண்ட ஒரு கூட்டம்,  தற்புகழ்ச்சி, தனக்கு பிடித்தவர்களை அவர்களே நெளியும் அளவிற்கு புகழாரம் செய்வது - இது தான் வேலூர் செயற்குழுவின் சாரம்.
            மாநில மாநாடு முடிவு செய்யாத, அமைப்பு விதிகளுக்கு எதிராக, அணி பார்வையில் தன்னிச்சையாக நுழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் என்ற முறை சரியல்ல. இது பற்றி விவாதிக்க ஆய்படுபொருளில் சேர்க்கவேண்டும் என்று தான் கோரினோம்.   
         ஆனால், ஆய்படுபொருளில் சேர்க்க மாட்டோம் என அடம்பிடித்து விட்டு, உத்தம(?) தலைவர்கள் சேது, ஜெயபால் ஆகியோரை செயற்குழுவில் இருந்து நீக்க கோரினோம் என்கிறார்கள் சிலர்.  (இதே தலைவர்கள் பற்றி இன்று பேசுபவர்களின் முந்தைய பேச்சை நாம் நினைவுபடுத்தினால் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்.)
             பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து கட்டப்பட்டுள்ள, மாநில சங்க கட்டிடத்தில்  மாநில செயலர் தங்குவதில்லை. சங்க அலுவலகமாக அது செயல்படுவதும் இல்லை. ஊழியர்கள் தங்குமிடமாக அது இல்லாமல், சங்க அலுவலகமாக, செயல்பாட்டு தளமாக அதை மாற்ற வேண்டும்.இது பற்றி விவாதிக்க ஆய்படுபொருளில் சேர்க்கவேண்டும் என்று தான் கோரினோம்.
            ஆனால் இதுபற்றி பேச அனுமதி இல்லையாம்
            சின்னம்மாள் என்ற தோழியர், நமது சங்கத்தின் மீது இருந்த நன்மதிப்பால்,  தன்னுடைய உடைமைகளை, ஓய்வூதிய பலன்களை நமது சங்கத்திற்கு எழுதிவைத்தார். அதை நிர்வகிக்க அமைக்கப்பட்ட சின்னம்மாள் அறகட்டளையின் நிலை என்ன? அது என்ன ஆயிற்று என விவாதிக்க ஆய்படுபொருளில் சேர்க்கவேண்டும் என்று தான் கோரினோம்.     
      இதுபற்றி பேச அனுமதி இல்லையாம். (கணக்கு சிலருக்கு பிணக்கு ஆயிற்றே!)
           அடாவடி செய்தோம்! அத்துமீறல் செய்தோம்! ஆர்பரிதோம்! என அவதூறு செய்து எல்லாவற்றையும் மறைக்க பார்கிறார்கள். முறைப்படி விவாதிக்க, அமைப்புவிதிகளின் படி செயற்குழுவை நடத்த வேண்டுகோள் வைத்தோம். தொடர்ந்து வலியுறுத்தியும் ஏற்கபடாததால் வெளிநடப்பு செய்து அவைக்கு வெளியே அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தோம்.
           ஆனால், செயற்குழு உறுப்பினர் இல்லாத நூற்றுக் கணக்கானவர்களை திட்டமிட்டு வரவழைத்து, நியாயம் கேட்டவர்களை சூழ்ந்து, "பேசாதே!", "வெளியே போ!" என கத்தி அநாகரிகமாக நடக்க செய்தவர்கள், அவையின் வெம்மை கண்டு வெளியேறினோம் என ஆனந்த படுகிறார்கள்.
           அமைப்பு விதிகளை மிதித்து, மாற்று கருத்துக்கு மதிப்பளிக்காத, ஜனநாயகம் அற்ற இடத்தில வெறும் உபசரிப்பு மட்டும் இருந்து என்ன பயன்? என்று அங்கு கொடுக்கப்பட்ட உணவை ஏற்க மறுத்தோம்.
          இதனால் பலர் அங்கு உண்ணாவிரதம் இருந்தார்களாம். சுண்டலும் கடலை மிட்டாய் , டீயும் மட்டும் சாப்பிட்டால் அது ஜெகன் வழி உண்ணாவிரதமாம்! (ஜெகன் மன்னிப்பாராக!)
"நிறைவான செயற்குழு, வெற்றிகரமான செற்குழு, அடாவடியும்.. அத்துமீறலும்" தொடரக்கூடாது என ஒலித்த செயற்குழு, (நீண்ட பட்டியலிட்டு) இதையெல்லாம் விவாதித்த செயற்குழு"
        என தனக்கு தானே சொரிந்து கொள்ளாமல், நடந்தவற்றை, நியாயத்தை, ஊழியரின் எதிர்பார்ப்பை நாணய உணர்வுடன் ஆராய்ந்து சரியான வழியில் பயணிக்க வேண்டும் எனபதே  நமது விருப்பம். ரொம்ம்பவும் சொரிந்தால் ரணம் மட்டுமே மிஞ்சும்.
 மதிமயக்கம் எமக்கு இல்லை! எந்த "மதி"யின் மயக்கமும் எமக்கு இல்லை! சிலருக்கு தான் மணி(Money)மயக்கம் நியாயத்தை திரை போட்டு மறைக்கிறது.

கடன் பட்டார் நெஞ்சம் போல அவ்வப்போது

கலங்குகிறது.

            தியாக தலைவர்களின் ஈர்ப்பில் NFTE பேரியக்கத்தில் இணைந்து நியாயத்தின் குரலாக, பல ஆண்டுகளாக அன்பை, எதிர்ப்பை, அவமானத்தை எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துகொண்டு தான் இயங்கிவருகின்றோம். நமது இயக்கம் அதன் தியாக பாதையில், வழி தவறாமல்  செம்மையாக  செயல்பட தொடர்ந்து குரல் கொடுப்போம்!

     
                     திருச்சி மாவட்ட வலைதளத்திலிருந்து..........

No comments:

Post a Comment