உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல்சன் மண்டேலாவின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் செயலிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
94 வயதான மண்டேலா நுரையிரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
No comments:
Post a Comment