WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, March 19

இஸ்ரத் ஜஹான் என்கவுன்டர் விவகாரம்: குஜராத் மாஜி அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு!!!

குஜராத்தில் நடந்த இஸ்ரத் ஜஹான் ரசா என்கவுன்டர்  வழக்கில், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக முக்கிய சி.டி. ஆதாரம்  கிடைத்ததால், அவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.  குஜராத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட என்கவுன்டரில்  மும்பையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் இஸ்ரத் ஜஹான் ரசா மற்றும்  3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர் அமைப்புடன்  தொடர்புடைய தீவிரவாதிகள் எனவும், குஜராத் முதல்வர் நரேந்திர  மோடியை கொலை செய்ய திட்டிமிட்டிருந்தவர்கள் எனவும்  தெரிவிக்கப்பட்டது. இஸ்ரத் ஜஹான் ரசா அப்பாவி என்றும், அவரை  போலி என்கவுன்டரில் குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் குற்றம்  சாட்டப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி  குஜராத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2011ம் ஆண்டு அறிக்கை தாக்கல்  செய்தது.

அதில் என்கவுன்டர் உண்மையானது அல்ல எனவும், என்கவுன்டர் நடந்த  தேதிக்கு முன்பே, 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர் எனவும்  தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள், குஜராத்  அமைச்சர்கள் ஒன்று கூடி, இந்த வழக்கை திசை திருப்பது குறித்து  விவாதித்துள்ளனர். சுமார் 70 நிமிடங்கள் இவர்கள் ஆலோசனை நடத்திய  ஆடியோ சி.டி ஆதாரம் சிபிஐக்கு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்  குஜராத் முன்னாள் அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.  இவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.  மக்களவை தேர்தல் அடுத்தமாதம் நடக்கவுள்ள நிலையில் நரேந்திர  மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் மீது சிபிஐ  வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால், மோடிக்கு அரசியல் ரீதியாக  நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment