அநீதி களைய..
மாநிலச்செயலர் அறப்போர்..
- மதுரை மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்யூர் முடித்த 3 TM களுக்கு மாற்றல் தர இழுத்தடிக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- மாற்றுச் சங்கத்திற்கு சாதகமாக தினம் ஒரு கொள்கையை உருவாக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பின்பு இரவு 10மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்ட 2 TMகளின் மாற்றல் உத்தரவை மறுநாள் மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- மாற்றல் கொள்கை பற்றி கருத்துக் கேட்பு கூட்டம் என்று சொல்லி அனைத்துச் சங்கங்களையும் அழைத்து கருத்து திணிப்பு கூட்டம் நடத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- பிரச்னையைத் தீர்ப்பதிற்குப் பதில் NFTE சங்கத்தை பழிவாங்க நினைக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- கார்ப்பரேட் உத்தரவு, மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல் எதையும் மதியாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
- மாநிலச் செயலரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி 28/08/2014 முதல்
காலவரையற்ற உண்ணாவிரதம்
......மதுரை SSA, NFTE-BSNL இணைய தளத்திலிருந்து.....
No comments:
Post a Comment