WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, January 14

பி.எப் வட்டி 8.75% ஆக உயர்வு !!!

 பி.எப்.  தொகைக்கான வட்டி விகிதம், நடப்பு 2013-14ம் ஆண்டிற்கு 8.75 சதவீதமாக உயர்த்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நேற்று முடிவு செய்தது. இதனால், சுமார் 5 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்.எம்பிளாய்ஸ் பிராவிடென்ட் பண்டு ஆர்கனசேஷனில் (இபிஎப்ஓ) நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கும் அந்த தொழிலாளர் பணிபுரியும் நிறுவனம் அவருக்கு செலுத்தும் தொகைக்கும் (வருங்கால வைப்பு நிதி)2011-12ம் ஆண்டில் 8.25 சதவீதமும், 2012-13ல் 8.5 சதவீதமும் வட்டி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பிஎப் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்திற்கும் அதிக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தொழிலாளர் சங்கங்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி பரிசீலனை செய்வதாக அவ்வப்போது மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், பி.எப். அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பிஎப் வட்டி விகிதத்தை உயர்த்துவது, பிஎப் தொகையை நல்ல முறையில் பராமரிப்பது   உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஓராண்டுக்கு பிறகு நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிஎப் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. தற்போதுள்ள 8.5 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு பிறகு இந்த தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment