WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, December 9

4 மாநில தேர்தல்: நோட்டாவுக்கு வாக்களித்த 16 லட்சம் வாக்காளர்கள்!!




இடைத்தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்களுக்கு, ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஓட்டுப் போட வருபவர்கள், ஓட்டுப் பதிவு எந்திரத்தில் தாங்கள் விரும்பும் கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் இடம் பெற்றுள்ள பொத்தானை அமுக்கி ஓட்டுப் போடுகிறார்கள். ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்கு 2009 பாராளுமன்ற தேர்தலில் 49 ஓ என்ற பாரத்தை நிரப்பிக் கொடுக்கும் முறை அறிமுகமானது.

தற்போது நடந்த 5 மாநில மற்றும் ஏற்காடு இடைத் தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப் பதிவு எந்திரங்களிலேயே வேட்பாளர்களின் சின்னங்களையடுத்து, ‘நோட்டா’ பொத்தான் அமைக்கப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்கள் இந்த பொத்தானை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

இதையடுத்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், டெல்லி சட்டசபை தேர்தல்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘நோட்டா’ வுக்கு வாக்களித்துள்ளனர்,. இதன் மூலம் எந்த வேட்பாளர்களையும் விரும்பவில்லை என்பதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் ‘நோட்டா’ பொத்தானை பயன்படுத்தி உள்ளனர். 199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 5 லட்சத்தில் 88 ஆயிரத்து 411 பேர் ‘நோட்டா’வுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

சத்தீஷ்கரில் 90 தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ‘நோட்டா’ ஓட்டுக்களை பதிவு செய்திருக்கிறார்கள். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில தேர்தலில் 47 ஆயிரத்து 972 பேர் ‘நோட்டா’வுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

ஏற்காடு இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான மின்னனு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ‘நோட்டா’ பொத்தான் 12–வதாக இடம் பெற்றிருந்தது. இதில் 4 ஆயிரத்து 431 பேர் வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை அடுத்து யாரையும் விரும்பாததை தெரிவிக்கும் நோட்டாவுக்கு தான் 3–வதாக அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. 9 சுயேட்சை வேட்பாளர்களில் யாருக்கும் இந்த அளவு ஓட்டுக்கள் கிடைக்கவில்லை

No comments:

Post a Comment