இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் ஐந்து பேருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் பலரில், ஐந்து தனியார்துறை உயரதிகாரிகளுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட் டுள்ளது. .
யுனிடெக் நிறுவனத்தின் மேலா ண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, சுவான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோய ங்கா, ரி லை யன்ஸ் அம்பானி குழுமத்தின் அதிகாரிகளான ஹரி நாயர், கவுதம் கோஷ் மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment