WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, November 25

சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு!!!!!

பலதரப் பெயர் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதில் 51 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு. 
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் கோடி ரூபாய் பணம் புழங்கும் சில்லறை வணிகச் சந்தை வால்மார்ட், டெஸ்கோ, கேரிஃபோர் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் சிறு வணிகர்கள் மட்டுமின்றி சிறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கும். சிறுவணிகர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 
 சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசி்ன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளி..

No comments:

Post a Comment