2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்து தணிக்கை செய்தபோது, தணிக்கையின் பல்வேறு கட்டங்களில் ரூ.2,645 கோடி முதல் 4 லட்சத்து 19 ஆயிரம் கோடி வரை இழப்பு விவரங்கள் கிடைத்தன. எனினும், அனைத்து விதமான வரைவு அறிக்கைகளையும் கவனமாக ஆய்வு செய்து இறுதி அறிக்கை தயாரித்தபோது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. எனவே, இழப்பு ஏற்பட்டதில் எந்த மாற்றமும் கிடையாது
.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதில் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது உண்மையே என்றும், ரூ.2,645 கோடி இழப்பு என்பது சரியல்ல என்றும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் நேற்று மீண்டும் உறுதியாக தெரிவித்தார்
No comments:
Post a Comment