தொழில் நிறுவனங்களைக் காப்பதற்காக மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் நிலை குறித்து பிற நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் மாநாட்டில் தொடர்ந்து 6-வது முறையாக பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கையில் பிற நாடுகள் தாமாக முன்வந்து தகவல்களை அளிக்க வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 85 சதவீத பங்களிப்பை ஜி 20 நாடுகள் அளிக்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இந்த கூட்டமைப்பு நாடுகளில் வாழ்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு வரி ஏய்ப்பு தொடர்பான வழிமுறைகளை அடைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்படும் என தெரிகிறது
No comments:
Post a Comment