அதிகபட்சமாக 100 குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற வரம்பை 200 குறுஞ்செய்திகளாக உயர்த்தியது டிராய்.
தொலை தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய், ஒரு சிம் கார்டில் இருந்து நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பலாம் என கட்டுப்பாட்டு விதித்திருந்தது.
தற்பொழுது அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு அதிகபட்சமாக 200 குறுஞ்செய்திகள் வரை அனுப்பலாம் என டிராய் அறிவித்துள்ளது.
செல்போன் சேவை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளால் குறுஞ்செய்தி வரம்பு மாற்றியமைப்பட்டுள்ளதாக டிராய் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இன்று முதல் நாளோன்றுக்கு அதிகபட்சம் 200 குறுஞ்செய்திகள் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment