WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, July 20

CKM பணி நிறைவு பாராட்டு விழா !!!!!!!!!!!!!


      

CKM பணி நிறைவு பாராட்டு விழாவாய் , நெல்சன் மண்டேலா 95 வது பிறந்தநாள் விழாவாய் , FDI எதிர்ப்பு மாநாடாய் பரிணமித்த திருச்சி விழா!

   எளிமையாய் ஆனால் கம்பீரமாய்.....
லட்சம் லட்சமாய் வசூலாகி விட்டது !
60 பவுன் தரப்போகிறார்கள் ! என்று                 
பிரச்சாரம் ஒருபுறம் !!
நிதி தராதே !! கூட்டத்திற்கு போகாதே
என்று பிரச்சாரம் மறுபக்கம் !

  தடை கற்கள் உண்டென்றால், அதை தகர்க்க தடந்தோள்கள் 
எமக்கு உண்டென்று ! தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 
ஆர்ப்பரித்தது பார் ! உண்மைத் தோழர்களின் திருக்கூட்டம் !!

உணர்வுகளின் பிம்பமாய் தோழர் காமராஜ் தலைமை ஏற்க,
அமைதியின் திருவுருவம், ஆற்றலின் மறு வடிவமாம்
தோழர் எஸ்.பழனியப்பன் வரவேற்புரை நல்க,
 திருச்சி மாநகரின் வரலாற்று சிறப்புமிக்க தேவர் ஹால் நிரம்பி வழிய,

நாடறிந்த நல்லோன் நல்லகண்ணு அவர்கள்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நீ !
என்று வாழ்த்துப் பா இசைத்திடவே !!

திருச்சி CPI மாவட்டச் செயலர் தோழர் இந்திரஜித்,
உன்னை சீதனமாய ஏற்க நாங்கள் தயார் என்று வரவேற்க,

உனது இரண்டாவது இன்னிங்க்ஸ்,
சிங்கம் இரண்டு போல மேலும் சிறப்பாய் அமைந்திடவே
என்று  வாழ்த்துப்பா இசைத்திட்டார் !
உலக தொழிற் சங்க தலைவர் தோழர் எச். மகாதேவன் !

முழு மதியாய் நீ பிரகாசிக்க வேண்டும்,
உனது இரண்டாம் பகுதி பிறையினிலே,
என்று வாழ்த்துபா வாசித்தார் !!
நமது எளிய பாராளுமன்ற உறுப்பினர் தோழர் பொ .லிங்கம், M.P,
உன்னைப்போல் ஒரு மதிநுட்பம் மிக்க வீர தீரனுண்டோ என்று
வியந்திட்டார் மக்கள் தொண்டன் குணசேகரன்,MLA அவர்கள்....

தமிழக மூத்த முன்னோடிகள் R.V, ரகு, மாலி, பூபதி ஆகியோர்
போற்றிப் புகழ்ந்திடவே,
AIBSNLOA தலைவர் குணசேகர் அவர்களின் ,
மதி ! நீ எத்தனை வகையான  காற்று என்று
அருமையான கவிதை வாசிக்க,

மதியின் வழித்தோன்றல்கள், சென்னை எம்.கே.ராமசாமி,
புதுவை அசோகராஜ், கோவை சுப்பராயன், நெல்லை பாபநாசம்,
மதுரை தோழியர் பரிமளம், கடலூர் அன்பழகன்,
மற்றும் சம்மேளனச் செயலர் ஜெயராமன் அவர்களின்  உணர்ச்சிமிகு உரையோடு
சிறப்புற்றது  திருச்சி திருவிழா !!

உலகறிந்த சமத்துவத்திற்கான போராளி
நெல்சன் மண்டேலா அவர்களின் ,
95வது  பிறந்த நாளை இனிதாக கொண்டாடியதும்
நாட்டிற்கு கேடு விளைவிக்கும் மத்திய அரசின்
FDI கொள்கைக்கு எதிராக
Declaring  War On FDI என்ற கொள்கை முழக்கத்தோடு
மேலும் சிறப்புற்றது திருச்சி விழா !!

இரண்டாவது இன்னிங்ஸில் மேலும்
சிறப்பாக விளையாடுவேன் என்று
ஏற்புரையில் முழக்கமிட்டார் !
தோழர் மதிவாணன் அவர்கள்..

விழா மலரை தோழர் RNK வெளியிட
தோழர்கள் GJ, திருச்சி சுந்தரம் பெற்றுக்கொள்ள 

 விழா சிறக்க பொறுப்பேற்று செயலாற்றிய
தொழிலாளர் கல்வி மைய திருச்சி செயலர்
அருமைத் தோழர் பாலகுரு நன்றி கூற
மன நிறைவோடு நிறைவுற்றது
திருச்சி திருவிழா.....

கடும் எதிர்நீச்சல் போட்டு,
போற்றுதலுக்குரிய செயலாற்றிய
அனைத்து திருச்சி தோழர்களயும்
வணங்கி மகிழ்கிறோம் நாமெல்லாம் !!                                                                     
      

No comments:

Post a Comment