டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. முன்னதாக நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் இதற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.
இதுபற்றி காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் அஜய் மக்கான் நிருபர்களிடம் கூறுகையில், “தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன விதிப்படி தனி தெலுங்கானா குறித்து காங்கிரஸ் வலியுறுத்தும். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஐதராபாத் நகரம் 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகராக இருக்கும். 10 ஆண்டுக்குள் புதிய தலைநகர் கண்டறியப்படும்” என்றார்.
No comments:
Post a Comment