சூரியனின் பிரத்யேக புதிய படத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இதுவரை ஆராய்ச்சிகளின் மூலம் அதிகம் அறியப்படாத 'இன்டர்பேஸ் ரீஜியன்' என்னும் பகுதியை ஐரிஸ் என்னும் கருவி படமெடுத்துள்ளது.
இந்த புதிய புகைப்படம் இதுவரை வெளிவராத சூரியனின் பிரத்யேக படமென்பதால் இது பலவிதமான ஆய்வுகளுக்கு உதவியாக இருக்குமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஐரிஸ் என்றழைக்கப்படும் 'இன்டர்பேஸ் ரீஜியன் இமேஜிங் ஸ்பெகட்ரோ கிராப்' (short for Interface Region Imaging Spectrograph) மூலம் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரோ கிராப்பில் உள்ள அல்ட்ரா வயலட் டெலஸ்கோப் மூலம் சூரியனின் வெளிப்புற தோற்றம் போட்டோ எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment