WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, July 21

வீணாய்ப்போன வக்கிரங்களின் வசைபாடல்கள் !!!

நமது எதிரியே ஆனாலும்
பணிஓய்வு பாராட்டு விழாவென்றால்
பாங்குறவே சென்று பாராட்டுவது 
நம் பண்பாடு ! தமிழர்தம்  பண்பாடு !!

அருமைத் தோழர் ஜெகனுக்கு
சென்னை ஹேமாமாலினி மண்டபத்திலே
தோழர் ஆர்.கேவுக்கு சென்னை பெரியார் திடலிலே
தோழர் தமிழ்மணிக்கு சேலத்திலே
ஜெயபாலுக்கு கும்பகோணத்திலே

மதுரை சேதுவிற்கு கும்பகோணத்திலே
லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்தால்,
அது நன்றி பாராட்டும் விழா என்பார்கள்.........
பக்கம் பக்கமாய்  ஆகா ஓகோவென்று
எழுதுவார்கள்  பாராட்டுரையை  !!
கலர்கலராய் போடுவார்கள்  அட்டை படத்தை !
வெளியிடுவார் சிறப்பு  மலரையும்தான் !!

ஆனால், அந்தோ  அங்கீகாரம் பெற்றுத் தந்த
மாவீரன்   மதிக்கு பாராட்டு விழா என்றால் மட்டும்
வயிற்றெரிச்சல்   வந்ததுவே   சில வக்கிரங்கட்கு !

ராமனுக்கு முடி சூட்டுவிழா என்றவுடன்
மந்தரை கூனி சதி செய்து
முடிசூட்டுவிழாவை நிறுத்தியதுபோல

மதியின் மணி விழாவை தடுக்க
நினைத்தார் சில  கூனிகள்
தாய் கைகேயியின் நல்லிதயத்தை
நஞ்சுர வைத்தது போல
நல்ல தலைவர்களை,
நிதி வழங்கும் நல்ல உள்ளங்களை
நஞ்சாக்க நினைத்தார்கள் அக்கூனிகள் !

60 பவுன் தரப்போகிறார்கள் என்று
நஞ்சை கக்கினார் நாக்கிலே நரம்பின்றி

76 லட்சம் வசூலாகி விட்டதென்றும்
பிதற்றினார்  சில  அரைகுறைகள்

போகாதே ! போகாதே !! என் தோழா
என்றெல்லாம் கெஞ்சியும் தான் பார்த்தார்கள் ! 

எடுப்போம் பார்  நடவடிக்கை !! என்று
ஆணவத்தின் உச்சியில் நின்று
மிரட்டியும்தான்  பார்த்தார்கள்

மூத்த முன்னோடிகளாம்.......
திருச்சியிலே சில வக்கிரங்கள்                     

எழுதி வைத்தார் சில வாசகங்களை

அவர்களின் துரதிருஷ்டம்
மூன்று முன்னாள் மாநில செயலர்களின்
பெயர்கள் ஏனோ மிஸ்ஸிங்........

இதுகூட  அம்மூவரும் தியாகம் எதையும் செய்யவில்லை
என்று குத்திக் காட்டும்   ஈனச் செயலன்றோ !!

அனைத்தையும் புறந்தள்ளி
எழுந்தது பார் வீரர் திருக் கூட்டம்
திருவாரூர், தஞ்சை, கும்பகோணம்
உள்ளிட்ட அனைத்து ஊர்களிலிருந்தும்
நிதியோடும் ஊழியர் துணையோடும்
திரண்டது பார் நம் தோழர்களின்  திருக்கூட்டம்
மதுரையிலிருந்து மும்மணியாய்
பாங்குறவே வந்தார்கள் வெற்றித் திருமகள்கள்
    
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும் என்பதுபோல்
கூனிகளின் சதிகள் எல்லாம்
சதிராடி போனதுவே !

நாடு போற்றும் நல்லவர் நல்லகண்ணு அவர்களின்
 மனமார்ந்த நல்வாழ்த்தும்
உலக தொழிற்சங்க தலைவரின் சிறப்பான நல்லுரையும்
புனிதமாக்கி  மேன்மையுறச் செய்ததுவே அத்திருவிழாவை  !

எளிமையாய் ஆயினும் கம்பீரமாய் நடந்தது பார்
எதற்கும் அஞ்சா மாவீரனின் பாராட்டு விழா !
நம் நெஞ்சை விட்டகலா திருச்சி திருவிழா  !

தங்கத் தலைவனுக்கு தங்கத்தால் அல்ல

பாராட்டு மழையால் பட்டாபிஷேகம் செய்தனரே !

காவிரித் தாய், மலைக்கோட்டை  பின்னணியில்
மறக்க முடியா நினைவு பரிசு வழங்கினாரே

நம் தியாகத் தலைவனுக்கு  தமிழகத்தின் தியாகச் செம்மல்

போற்றிடுவோம் நம் திருச்சி தோழர்களை !
CKM பணி நிறைவு பாராட்டு விழாவாய் ,
நெல்சன் மண்டேலா 95 வது பிறந்த நாள் விழாவாய்,
FDI எதிர்ப்பு மாநாடாய் பரிணமித்த
திருச்சி விழாவை எதிர் நீச்சல் போட்டு
வெற்றி கண்ட மாவீரர்களை !  No comments:

Post a Comment