பிப்.10 (டி.என்.எஸ்) ஊதிய உயர்வை வலியுறுத்தி இன்றும், நாளையும் (பிப்.10 மற்றும் 11) நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கி ஊழியர்களின் சம்பள விகிதம் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப்பின் திருத்தப்படவில்லை.
எனவே சம்பள விகிதத்தை திருத்தி 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக அரசுடன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாதம் 18-ந்தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment