செய்திச் சிதறல்கள்
1-1-2007 முதல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய இழப்புகளை ஈடு செய்வது குறித்து CMD BSNL அவர்களை நமது சங்கத் தலைவர்கள் சந்தித்து தீர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.
1-1-2007 முதல் BSNLல் நியயமனம் பெற்றவர்களுக்கு BSNLEU போட்ட ஊதிய உடன்பாட்டால் சம்பள பிடித்தம் எனும் இழப்பு ஏற்பட்டது. NFTE-BSNL தலைமை அதனை சரிசெய்ய தொடர்ந்து முயற்சிக்கிறது.
தற்போது நிர்வாகம் தனது முடிவை தெரிவித்து உள்ளது. மே 2010க்குள் புதியதாக நியமனம் பெற்றவர்களுக்கு ஒரு கூடுதல் இன் கிரிமென்ட் தர முன்வந்துள்ளது. அரியர்ஸ் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாநில சங்கங்களின் கருத்தை அகில இந்திய தலைமை கேட்டுள்ளது.
புதிய JTO (Recruitment Rules) ஆளெடுப்பு விதி பற்றிய NFTE-BSNL சங்கத்தின் கருத்தையும், செய்யப்பட வேண்டிய மாற்றங்களையும் கடிதம் மூலம் தெரிவித்து உள்ளனர்.
SC/ST ஊழியர்க்கு, NEPP பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கவும், பணியில் இருக்கும்போது இறந்த ஊழியர்க்கு கருணைப் பணி கோரும் மனுவை பரிசீலிக்கும்போது SC/ST ஊழியர் குடும்பத்திற்கு கூடுதல் சலுகை வழங்க வலியுறுத்தி, SC/ST ஊழியர் நல பாராளுமன்ற குழுவிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை மாநில நிர்வாகத்தின் பழிவாங்குதல் : உண்ணாவிரதத்தில் பங்கேற்றோர்க்கு FR17A வழங்கியது பற்றி Director HR அவர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் பற்றியும் விவாதிக்கப் பட்டுள்ளது.
மூன்றாவது சுற்று 2 ஜி. ஸ்பெக்டரம் அலைக்கற்றை உரிமம் பெறுவதற்கான ஏலம் இன்று தொடங்கியது 900 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 1800 மெகாஹெர்ட்ஸ்
அலைக்கற்றை ஏலத்தில், 8 முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
செய்தி ;காஞ்சி வலைத்தளம் .....
No comments:
Post a Comment