பொதுமக்கள் காணிக்கையாக கோவில் உண்டியலில்
தொகைகளை போடுவதைவிட அதனை அரசுக்கு வரியாக செலுத்தலாம்" என்று நடிகர்
கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது:
"கடவுளுக்கு, கோவிலில் உண்டியலில்
காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு
உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன்.
மேலும், வரியினால் நடைமுறைப்படுத்தப்படும்
திட்டங்களால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால்,
வரியின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில் வரி
செலுத்துவோரின் பங்கும் தெரிய வரும்." என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் தமிழக புதுச்சேரி மாநில
வருமான வரித் துறை முதன்மை கமிஷனர், ரவி தலைமை தாங்கினர். இயக்குனர் ஜெனரல்
ஜெய்சங்கர், முதன்மை கமிஷனர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment