2ஜி ஊழல்: கனிமொழியை காப்பாற்ற சதி: பிரசாந்த் பூஷன் !!
2ஜி் அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது. இந்த ஊழல் விவகாரத்தில் இருந்து கனிமொழியை காப்பாற்ற சதிவேலைகள் நடந்ததாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் இந்த விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலையீடு இருந்ததாகவும் குற்றஞ்சாட்டிய அவர், தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. பல ஆண்டுகளாக அங்கம் வகித்தது. இந்த கூட்டணி அரசில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. அதில் இமாலய ஊழலாக பேசப்பட்டது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் காரணம் இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி என்று தணிக்கை துறை தகவலை வெளியிட்டது.
தற்போது பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நேரத்தில் தி.மு.க. மீது ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரும் பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். ஏற்கனவே இவரது கட்சி நரேந்திர மோடி, சோனியா, சரத்பவார், போன்றவர்களை ஊழல்வாதிகள் பட்டியலில் சேர்த்து குற்றம்சாட்டி உள்ளது. இந்த நிலையில் பிரசாந்த் பூஷன் நேற்று டெல்லியில் சில புதிய தகவல்களை கூறி அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.
அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழியை காப்பாற்ற சதிவேலைகள் நடந்ததாக பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டினார். இந்த விஷயத்தில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நேரடி தலையீடு இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது. ஆனால் அது லஞ்சப்பணம் அல்ல. கடன் தொகைதான் என்பதுபோல காட்டுவதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன என்று கூறிய பிரசாந்த் பூஷன் இதுதொடர்பாக கலைஞர் டி.வி.யின் சரத்குமார் ரெட்டி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழக உளறுத்துறை தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். கருணாநிதியின் செயலாளராக இருந்தவர் சண்முக நாதன். கனிமொழியை காப்பாற்றும் வகையில் இவர்கள் இருவரும் பேசிய உரையாடல் உள்பட 4 தொலைபேசி உரையாடல்களின் விபரங்களையும் பிரசாந்த் பூஷன் வெளியிட்டார். கனிமொழி சம்பந்தப்பட்ட உரையாடலையும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் கனிமொழியின் தொண்டு நிறுவனத்திற்கு டாடா நிறுவனம் ரூ.25 லட்சம் கொடுத்ததாகவும் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை தி.மு.க. மறுத்து உள்ளது. தி.மு.க.வின் டி.கே.எஸ் இளங்கோவன் கூறுகையில் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவைகள் என்றும் நீதிமன்றத்தில் பூஷன் அதை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க. மீதான இந்த குற்றச்சாட்டு அக்கட்சிக்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த கட்சியுடன் கூட்டு சேர பல கட்சிகள் தயக்கம் காட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment