சோனி நிறுவனம் தற்போது நிதி பிரச்சினையில் சிக்கியுள்ளது. உலகில் முன்னணி எலக்டரானிக் நிறுவனமாக சோனி நிறுவனம் உள்ளது.
ஜப்பானை தலைமையிடமாக கொண்டு உலகின் பல நாடுகளிலும் கிளை நிறுவனங்களை நடத்தி வருகிறது.
தென் கொரியா மற்றும் சீனா நாடுகளின் கடும் போட்டி காரணமாக சோனி நிறுவனம் சமீபகாலமாக நஷ்டத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளது.
சென்ற நிதி ஆண்டில் மட்டும் சுமார் 6.4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த பொருளாதார சிக்கலை சமாளிக்க 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சோனி நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் சோனி நிறுவனம் திணறிக் கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment