WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, April 19

காந்தியின் ரத்தம் படிந்த புல்!!

மகாத்மா காந்தியின் ரத்த கறை படிந்த புல், லண்டனில் 8 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.டில்லியில், 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி காந்தியடிகள், கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது குண்டு துளைத்ததால், அவர் உடலில் இருந்து சிதறிய ரத்தம் அங்குள்ள புல்களின் மீது படிந்தது. இதை அவருடன் இருந்த பி.பி.நம்பியார் சேகரித்து வைத்திருந்தார்.காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் ஆகியவற்றை ஒரு பெட்டியில் புனிதமாக சேகரித்து வைத்திருந்தார் நம்பியார். இதேபோல காந்தி பயன்படுத்தி வந்த ராட்டை, மூக்கு கண்ணாடியையும் அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார். இந்த பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், முல்லக் ஏல நிறுவனத்தால், நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது.காந்தியின் ரத்தகறை படிந்த புல், 8 லட்ச ரூபாய்க்கும், கடந்த 1890ம் ஆண்டு அவர் சட்டம் படிப்பதற்காக பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, 28 லட்ச ரூபாய்க்கும், கடந்த 1931ம் ஆண்டு லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுக்கு சென்ற காந்தியடிகள் தன்னுடன் எடுத்து சென்ற மர ராட்டை, 21 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த பொருட்களை ஏலத்தில் எடுத்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment