அமெரிக்க சர்ச்சில், கறுப்பின ஜோடியினர் திருமணம் செய்ய மறுப்புத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை சேர்ந்தவர்கள் சார்லஸ், டி ஆன்ட்ரீயா. கறுப்பினத்தை சேர்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக இந்த மாகாணத்தின் கிறிஸ்டல் ஸ்பிரிங் பகுதியில் உள்ள, சர்ச்சின் பாதிரியாரை தொடர்பு கொண்டனர். "இந்த சர்ச், 1883ல் கட்டப்பட்டது முதற்கொண்டு, கறுப்பினத்தவருக்கு திருமணம் செய்வித்தது கிடையாது. எனவே, உங்களுக்கும் திருமண சடங்கை இங்கே செய்ய முடியாது' என, பாதிரியார் ஸ்டேன் வெதர்போர்டு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment